Saturday, June 18, 2016

திருமணமான ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை - தந்த்ரா யோகம் (TANTRA YOGA) . .


அறிமுகம் 

கணவன் மனைவிக்கிடையே சின்னஞ்சிறு சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பு.  ஆனால் இவை சிலநேரம் அளவுக்கதிகமாகி வாக்குவாதம், வார்த்தைகளால் கடுமையாக தாக்கிக் கொள்ளுதல் என்ற அளவில் வரும்போது அது பிரச்சினைக்கு உரியதாகிவிடுகிறது. மேலும் விவாகரத்து என்ற வரை கூட சிலருக்கு சென்று விடுகிறது.  கணவன் மனைவி சண்டைகளுக்கு பொதுவாக கீழ்க்கண்ட காரணங்கள் சொல்லபப்டுகிறது:- 

1.  ஒருவருக்கொருவர் சரியாக புரிதல் இல்லாமை.

2.   ஈகோ 

3.   சுயநலம்.

4.   சந்தேக எண்ணங்கள் 

5.   மதுப்பழக்கம் 

6.   மாமியார் நாத்தனார் கொடுமைகள் 

7.   பணப் பற்றாக்குறை / வறுமை 

8.  கள்ளக் காதல் மற்றும் இன்னும் இதுபோன்ற பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

ஆனால் உண்மை என்பது முற்றிலும் வேறானது;  மேற்சொன்ன காரணங்கள் அனைத்தும் இரண்டாம்நிலை காரணங்களே.  முழுமுதற் காரணம் - பாலுறவு.  தெளிவாக புரிந்துகொள்ள கட்டுரையை பொறுமையாக படியுங்கள். 


சமீபத்தில் நான் படித்து மகிழ்ந்து , பலனடைந்த - இல்லற வாழ்க்கை பற்றிய ஒரு புத்தகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.  " என் வாழ்நாளில் இப்படி ஒரு நூலை படித்ததே இல்லை" ,  " ஒருவர் வாழ்க்கையையே மாற்றக்கூடிய நூல் "  என சொல்லும் அளவிற்கு  மிக மிக சிறப்பாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. 

நூலின் பெயர்  :-   தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை 

ஆசிரியர்           : -   போதி ப்ரவேஷ் (தந்த்ரா யோகி) / BODHI PRAVESH, COIMBATORE.

பொதுவாக, தாம்பத்ய வாழ்க்கை குறித்த நூல்கள் ஒன்று , கொச்சையாக ஆபாசமாக எழுதப்பட்டிருக்கும் அல்லது  மேலோட்டமாக பட்டும்படாமலும் எழுதப்பட்டிருக்கும். உருப்படியான வழிகாட்டுதல்கள் ஒன்றும் இருக்காது. இந்த புத்தகம் அப்படி எழுதப்படாமல் வாசகர்கள் உண்மையிலேயே பயனடைய வேண்டும் என்ற நோக்கில் உருவாகப்பட்டுள்ளது. பொதுவாக, ஒரு ஆண் பாலுறவு குறித்து கொண்டுள்ள கருத்துக்களை இந்நூல் சுக்கு நூறாக்குகிறது.உங்களுக்கு சில கேள்விகள் 

திருமணமான ஆண்கள் சிலர் இக்கட்டுரையை படிக்கும்போது - " எனக்கு தெரியாததா? " என நினைக்கலாம். அல்லது நான் அதில் (செக்ஸில் ) கரைகண்டவன் என நினைக்கலாம். அல்லது நான்தான் குழந்தைகள் பெற்றுவிட்டேனே என நினைக்கலாம்.  அவர்களுக்கு சில கேள்விகள் :-


1.   பெண்களுக்கு Multiple Orgasm , பலமுறை உச்சகட்டம் இருப்பதை போல , ஆண்களுக்கும் Multiple Orgasm பலமுறை உச்சகட்டம் உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?   

2.   ஆண்களுக்கு விந்து வெளியேறுவதற்கும் - உச்சகட்ட இன்பத்திற்கும் தொடர்பில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? 

3.   பெண்களின் பிறப்புறுப்பில் Clitoris என்பது பலருக்கு தெரிந்திருக்கும்.  ஆனால் G - SPOT  orgasm என்ற உச்சகட்ட இன்பம் பெண்களுக்கு உண்டு என்பது உங்களுக்கு தெரியுமா?

4.   Nipple orgasm பற்றி உங்களுக்கு தெரியுமா?

5.   உடலுறவில் பெண்களின் உடல் தளர்வடைந்து - இன்பத்தை துய்க்க துவங்கவே 20-30 நிமிடங்கள் ஆகும் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?

6.   பெண்ணின் யோனிக் குழல் என்பது வேறு , பெண்ணின் பாலுறுப்பு வேறு என்பது உங்களுக்கு தெரியுமா?
நூலின் மையக்கருத்து - தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை 

இந்நூலின் மையக்கருதானது கீழ்கண்டவாறு அமைந்துள்ளது :-

1.  ஆழ்மனம் என்றால் என்ன,  அது எவ்வர்று ஒருவரின் வாழ்கையை தீர்மானிக்கிறது.

2.  ஆழ்மனதிற்கும், பாலுணர்வுக்கும் உள்ள தொடர்பு 

3.  முழுமையாக தணிக்கப்படாத பாலுணர்வு (அதாவது ஆழ்மனதில் குடிகொண்டுள்ள பாலுணர்வு)  எப்படி ஒரு பெண்ணின் மனதில் முதலில் அதிருப்தியாகவும் - பின்னர் வெறுப்பாகவும் - இறுதியில் கொடுரமான வன்மமாகவும் மாறுகிறது என்பதையும், 

4.  பாதிக்கப்பட்ட ஒரு பெண் எவ்வாறு அதனை  - தன்னிலை அறியாத நிலையில் குடும்ப வாழ்க்கையில் ஓயாத சண்டை சச்சிரவுகாவும், கருத்து பிணக்குகளாகவும்  மாற்றுகிறாள் என்பதையும் /  உச்சகட்டமாக, ஒரு சில பெண்கள் கள்ளத்தொடர்பு என்ற அளவிற்கு வந்து விடுகிறார்கள் என்பதையும்.

5.  ஆணின் பாலியல்  அறியாமையை, ஆணின் பாலுறவு குறித்த மூடக்கருத்துக்களையும்

6.  ஒரு ஆணின் பாலுறவு அறியாமையை அகற்றும் ஆலோசனையையும்.

7.  ஆண்களின் Sex  Organs , பிறப்புறுப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சில எளிய யோகப்பயிற்சிகளையும் 

8.  பெண்ணுக்குரிய பல்வேறு உச்சகட்ட இன்பங்களை எவ்வாறு வழங்குவது, அதற்கான பலவகையான வழிமுறைகள் (தந்த்ரா வழிமுறைகள்) மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.

இந்நூல் உங்களுக்கு வழங்குகிறது . மேலும் இந்த புத்தகம் நமது அன்றாட வாழ்வில் பயன்படும் ஏராளமான தகவல்களை  கொண்டுள்ளது.  இப்புத்தகம் ஒரு  நல்ல வாழ்க்கை அனுபவங்கள் கொண்ட, தேர்ந்த உளவியல்  நிபுணரால் எழுதப்பட்டது  போல் அமைந்துள்ளது. 

பெண்களின் மார்பகங்களை பற்றி நாம் அறிந்து கொள்ள, நூலின் ஆசிரியர் மலர்களின் மகரந்த சேர்க்கை நிகழ்வை உதாரணம் கூறி மறைமுகமாக விளக்குகிறார். அந்த உதாரணமே போதும் ஆசிரியர் ஒரு யோகி என்பதற்கு. 

எளிமையான தமிழில் - நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல், மண்டையில் அடித்து உறைக்க வைப்பதுபோல் - தன்  கருத்துக்களை அவர் சொல்கிறார். ஒரு சகோதரருக்கு அன்புடன் ஆலோசனை வழங்குவதுபோல் மிகுந்த அக்கறையுடன்  பல இடங்களில் எழுதுகிறார். 

இங்கு, நான் சில குறிப்புகளை கூற கடமைப்பட்டிருக்கிறேன் ஆழ்மனம் என்றால் என்ன?

மனித மனமானது மூன்று பிரிவாக செயல்படுகிறது. மேல் மனம், நடுமனம் , ஆழ்மனம்.  மேல்மனம் என்பது  ஐம்புலன்கள் வாயிலாக நாம் புற உலகோடு தொடர்பு கொள்ளும்போது மனதில் உருவாகும் எண்ணங்கள், கருத்துக்களாகும். மேல் மனதின் எண்ணங்கள், அனுபவங்கள் எல்லாம் அதன் அழுத்தத்திற்கு தக்கவாறு நடுமனதிலும், ஆழ்மனதிலும் பதிந்துவிடும். 

மேல் மனம் என்பது மேலோட்டமானது. ஒருவரிடம் நீங்கள் கேட்டால், நான் ஒரு நல்லவன் என்பார் அல்லது  நல்ல எண்ணங்களே உடையவர் போல  நடந்து கொள்ளவார்.  ஆனால் உண்மையில் அவர் நாடகமாடியாகவோ/ ஒரு செக்ஸ் வெறியராகவோ / ஒரு துரோகியாகவோ / உள் ஒன்று வைத்து புறம் ஒன்று புறம் ஒன்று பேசுபவராகவோ இருக்கலாம். இதற்கு காரணம் ஆழ்மனதில் உள்ள பதிவுகளின்படியே ஒருவர் நடந்து கொள்வார்; அவரது செயல்கள் அமையும்.  மேல்மனம் பொய் சொல்லும். ஆழ்மனம் பொய் சொல்லாது. ஆழ்மனது உள்ளதை உள்ளபடி செயல்படுத்தும்.  அதேநேரம் ஆழ்மனதை மிஞ்சிய சக்தி இவ்வுலகில் இல்லை. 

எந்த மாதிரியான எண்ணம் ஆழ்மனதில் எளிதில் பதியும் என்றால், தீவிரமான / உணர்சிகரமான எண்ணங்களே ஆழ்மனதில் எளிதில் பதிந்து விடும்.  பொதுவாக கோபம், வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு , காமம், கவலை போன்ற உணர்வுகள் மிக எளிதாக ஆழ்மனதில் இடம்பிடித்து விடும். பின்பு அவை தன்போக்கில்  அம்மனிதரை இயக்க துவங்கி விடும். 

எனவே பாலுணர்வு, நிறைவேறாத பாலுணர்வு போன்றவை நிச்சயமாக ஆழ்மனதுடன் தொடர்புடையவை. உங்களுக்கு  சந்தேகமிருப்பின், உளவியல் பேரறிஞர் என போற்றப்படும் Sigmund Freud அவர்களின் நூல்களை படித்துப்பார்க்கவும்.கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள் , சண்டை சச்சிரவுகள் எவ்வாறு உருவாகிறது - பாலுறவை  அடிப்படையாக வைத்து :-  

அடிப்படையான பிரச்சினை என்னவென்றால்,  உடலுறவில் ஒரு ஆணுக்கு விந்து வெளியேறிவிட்டால் அதன் பிறகு  அவன் செயலிழந்து விடுவான், சிலமணி நேரங்களுக்கு ஒன்றும் செய்ய இயலாது. ஆனால்  பெண்ணுக்கோ - அரைமணி நேரம் கழித்துதான் இன்பமே துவங்கும், மேலும் உச்சகட்ட இன்பம் என்று ஒரு தடவை இல்லாமல் - விட்டு விட்டு குறைந்தது நான்கு தடவை நிகழும். இதில் முக்கியமானது என்னவெனில், பெண்ணின்  உணர்வு கிளர்ச்சி உயர்ந்துகொண்டே  செல்லக் கூடியது (Linearly increasing ).  அதனால் ஆண் தளந்து விடாமல், வலிமையுடன் செயல்பட வேண்டியது மிக அவசியம். 


ஆனால் 90%  ஆண்களுக்கு சுய இன்ப பழக்கம் இருப்பதாலும், ஆபாச படங்களை பார்ப்பது மூலமாகவே உடலுறவு பற்றி  தெரிந்து கொள்வதாலும் - அந்த அறிவை மூலதனமாக வைத்துக்கொண்டே தங்கள் திருமண  வாழ்வை  துவக்குவதாலும் - தங்கள் இல்லற வாழ்கையில் ஆரம்பத்திலோ அல்லது இடையிலோ கீழ்க்கண்ட  செக்ஸ் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவை: -

1.  துரித ஸ்கலிதம் - Premature Ejaculation 

2.  பிறப்புறுப்பில் விறைப்பு தன்மையில் பிரச்சினை -  Erectile Dysfunction. பொதுவாக போதுமான நேரம் விறைப்புதன்மை  இல்லாமை அல்லது சீக்கிரமே பிறப்புறுப்பு தளர்ந்து விடுதல் அல்லது குறைவான விறைப்பு நிலையிலேயே  விந்து வெளியாகி விடல் போன்றவை.பெண்ணின் மனம் எவ்வாறு பாதிப்படைகிறது ?

இயற்கையிலேயே ஆணுக்கும், பெண்ணுக்கும் இன்பத்தை நுகர்வதில் ஏற்ற தாழ்வு இருப்பதால் - பெண்ணின் ஆழ்மனதில் குடிகொண்டுள்ள செக்ஸ் உணர்வு சாந்தம்டைவதில்லை. ஆனால் ஆணுக்கோ விந்து வெளியேறி விட்டாலே  பாலுணர்வு தணிந்துவிடும். அதாவது ஆழ்மனதை குளிரச் செய்வதில் பாலுறவுக்கு உள்ள திறன்  வேறு எதற்கும் -  பணம், நகை, வீடு, பங்களா போன்ற எதற்கும் இல்லை என்றுகூட சொல்லிவிடலாம். சந்தேகமிருப்பின்,  Napolean Hill எழுதிய Think and Grow Rich என்ற புத்தகத்தில் Transmutation of  sex  எனும் அத்தியாயத்தை படித்துப்பார்க்கவும். 

இவ்வாறு பாலுறவால் குளிராத பெண்ணின் ஆழ்மனதில் லேசாக அதிருப்தி உருவாகி - பின் கோபம் வெறுப்பு என மாறி - குடும்ப வாழ்வில் வாக்கு வாதம் , ஒருவருக்கொருவர் வார்த்தைகளால் கடுமையாக தாக்குதல் என  வாழ்கையே நரகமாக மாறிவிடுகிறது.  இதை உருவாக்குவது யாரென்றால் மனைவிதான். ஆனால் பெண்ணுக்கே  தெரியாமல் / Unconscious நிலையில் இதெல்லாம் ஆரம்பமாகும். இதற்கு முழுமுதற் காரணம்  ஆணின்  பாலியல் அறியாமை அல்லது பாலியல் பலகீனம்.  பாலுறவு மூலம் பெண்ணின் மனதை அமைதிபடுத்தாமல், எவ்வளவு திறமை பெற்ற்வராலும் இதை தடுக்க முடியாது  என்கிறார் போதி ப்ரவெஷ் அவர்கள்.  


ஆகவே, மனைவிக்குரிய பாலின்பங்களை வழங்காவிடில், அதாவது மனைவினயின் ஆழ்மன தேவை பூர்த்தி செய்யபடாவிடில், நீங்கள் நான்கு வித சூழ்நிலைகளில் ஏதேனும் ஒன்றை எதிர்கொள்ள் வேண்டிவரும். அவை:- 

1.  பெண்டாட்டியிடம் திட்டு, ஏச்சு ஆகியவற்றை வாங்கி / வாக்குவாதங்கள் அதிகமாகி வீடே போர்களமாக இருக்கும்.  பெண்டாட்டியை ராட்சசி என்பீர்கள்.

2.   மன அழுத்தம் கூடி அதன் மூலம் வரும் நோய்களான ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் பல நோய்களால் அற்ப ஆயுளில் செத்துபோக வேண்டியிருக்கும்.

3.   நீங்கள் புத்திசாலியாக இருந்தால் வேலையில் உங்களை மூழ்கடித்துக் கொண்டு மனைவியின் டார்ச்சரிலிருந்து தப்பித்து விடுவீர்கள்.

4.  மதுவிற்கு அடிமையாக வாய்ப்பு உண்டு. 

மேலும் இவ்வாறு கூறுகிறார்:-   " ஒரு முழுமையான பாலுறவு அனுபவமே ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில்  ஆழ்ந்த அன்பையும், பாசத்தையும், பிணைப்பையும் உருவாக்கும். அதன் பெயர்தான் காதல். "  அதை விட்டு விட்டு , உண்மையான காதல் வேறு காமம் வேறு, காதல் காமம் பார்க்காது என்றேல்லாம கூறுவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. பெண்ணை பணத்தின் மூலமாக கட்டுப்படுத்தி விடலாம் என நினைப்பது நமக்கு நாமே ஆப்படிப்பது போலாகும். கணவன் மனைவி சண்டைகளுக்கான தீர்வு:- 

இதற்கு ஒரே தீர்வு தந்த்ரா யோகம். தந்த்ரா யோகம் 
என்றவுடன்  பயந்து விடாதீர்கள். கணவன் மனைவி தாம்பத்யம் மூலம் மன ஒருமைப்பாட்டையும், மன அமைதியையும் அடையும் ஒரு வழிதான் தந்த்ரா யோகம். சிலர் இதன் மூலம் ஞானம் பெறலாம், இறைவனை உணரலாம் என்று கூட சொல்கிறார்கள்.  அதற்குள் நான் போக விரும்பவில்லை. தந்த்ரா யோகம் உங்கள் குடும்ப விவகார சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், குடும்பத்தை அமைதிபூங்காவாக மாற்றும் என்பதை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். 

தந்த்ரா யோகம் என்பது  இந்திய சித்தர்களாலும், சீன TAO ஞானிகளாலும் உருவாக்கப்பட்ட ஒரு யோகமாகும்.
உங்கள் உடல்நலனிலும், இல்லற வாழ்விலும் பிரமிக்க வைக்கும் பலன்களை தரும் பயிற்சி தந்த்ரா யோகம் ஆகும்.

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் தந்த்ரா யோகம் பற்றிய குறிப்புகள் உள்ளன.  சித்தர் போகர் பாடல்களில் " ஆயிரம்  வெண்ணிற பெண்களை புணர்ந்தேன்"  என்ற ஒரு வரி எனக்கு ஞாபகம் இருக்கிறது.  போகர் சீனாவுக்கு சென்று சீன மக்களுக்கு பல்வேறு யோகப்பயிற்சிகளை கற்றுக்கொடுத்தார் என்பது உங்களுக்கு தெரியும்.  எனது குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் ஒரு நூலின் தந்த்ரா யோக வழிமுறை ஒன்றை ( ஆண்  பெண் இருவருக்கும்)  தெளிவாக கூறியுள்ளார்.  ஆனால் அதை அவர்  விளக்கமாக கூறாததால் நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்து) அது தெரியாமல் இருந்தது.  " தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை " என்ற இப்புத்தகத்தை  படித்தவுடன் அந்த முறை எனக்கு தெளிவாக புரிந்துவிட்டது.  பொதுவெளியில் என்னால் அதைப்பற்றி  கூற இயலாது.  

இந்த புத்தகத்தில்,

1.   பிறப்புறுப்பு, அடிவயிற்று  தசைகள் ஆகியவற்றை வலுப்படுத்தும் ஓர்  எளிமையான பயிற்சி விவரிக்கப்பட்டுள்ளது.  பொதுவாக சுய இன்பம், ஆபாச படங்களை அதிகமாக் பார்த்தல் போன்றவற்றால் இத்தசைகள்  தளர்ந்து போகின்றன. 
இப்பயிற்சியால் ஓரிரு வாரங்களிலேயே நீங்கள் வீரியத்தை பெற்று விடலாம். வீரியம் என்றால் - நல்ல விறைப்பு தன்மை, நிலைத்து  செயல்படுதல் போன்றவை ஆகும். விந்து முந்துதல், விறைப்பு தன்மையில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் இப்பயிற்சியால் ஓரிரு வாரங்களில் அகன்றுவிடும். 

2.   சில விசேசமான யோகா முறைகள் - உடலுறவில் ஆற்றலை அதிகப்படுத்தும் சில தனிப்பட்ட யோகா முறைகளும், சுவாசப் பயிற்சிகளும் இந்நூலில்  விளக்கப்பட்டுள்ளன. 

3.   மிக முக்கியமாக உடலுறவில் ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள வேறுபாடும்,

4.   எவ்வாறு பெண்ணுக்கு பலவகையான உச்சகட்ட இன்பங்கள் (குறைந்தது 4 முதல் அதிகம் 8) , முன்விளையாட்டுக்கள் ஆகியவற்றை வழங்குவது என்பதை மிக எளிமையாக, புரியும்படியாக படிபடியாக இந்நூல்  உங்களுக்கு கற்றுத்தருகிறது.  எதை கண்டிப்பாக செய்யக் கூடாது என்பது மிக முக்கியம்.  " உடலுறவில் அவசரம் காட்டுவது ஒரு வியாதி/மிக தவறானது "  என்று இப்புத்தகம் இடித்துரைக்கிறது. 

5.  இவை மட்டுமல்லாமல் நமக்கு வாழ்வில் மிகவும் பிரயோஜனமாகும்  அனேக மனோதத்துவ தகவல்களையும், ஆலோசனைகளையும்  இந்நூல் வழங்குகிறது.


மேலும் இப்புத்தகத்தில்,

1.  மாமியார் மருமகள் பிரச்சினை எப்படி தம்பதிகளின் நெருக்கடி பாதிக்கிறது என்பதும் 

2.  ஒருவரின் பொருளாதார சீர்குலைவு எப்படி பாலுணர்வை சிதைக்கிறது என்பதும் 

3.  உறவினர்கள், நண்பர்களிடம் எப்படி எச்சரிக்கையாக நடந்து கொள்வது என்பதும் 

4.  அரசியல் மற்றும் சுயதொழில் இவற்றில் பாலுணர்வு பங்கு குறித்தும் 

மனோதத்துவ ரீதியில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.இயற்கையின் சிறப்பு 

இயற்கையானது எண்ணற்ற ரகசியங்களையும், ஆச்சர்யங்களையும் தன்னகத்தே அடக்கிக் கொண்டுள்ளது. எவர்  ஒருவர் சுயநலத்தை விட்டு, மனித குலத்தின் நன்மைக்காக சிந்திக்கிறாரோ - அப்போது அவரது மனம் ஆழ்ந்த  நிலைக்கு செல்கிறது. இந்நிலையில் இயற்கையானது  தன் ரகசியங்களை அக்குறிப்பிட்ட மனிதரின் மனம் மூலமாக  வெளிப்படுத்துகிறது.  அந்த மனிதரே யோகி எனப்படுவார்.  ஆகையால், இந்நூலின் ஆசிரியர் போதி ப்ரவேஷ் ( BODHI PRAVESH) அவர்கள் நிச்சயம் ஒரு யோகியே ஆவார். தனிப்பட்ட கருத்து 

நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய கருத்து என்னவெனில், திருமணமான ஒவ்வொரு ஆணும் கண்டிப்பாக இப்புத்தகத்தை படிக்க வேண்டும்.  இதை ஒரு வரியில்  LIFE  CHANGING BOOK  என்று சொல்லலாம்.  உங்களுக்கு இப்புத்தகத்தை நான் 100% அல்ல, 1000% சிபாரிசு செய்கிறேன்.   இக்கட்டுரையை படித்தது  முடிக்கும்போது உங்களுக்கு ஒரு அபிப்ராயம் மனதில் தோன்றியிருக்கும்,  அதை அப்படியே   பத்து மடங்கு ஆக்கிக்கொள்ளுங்கள் - அதுதான் இந்த புத்தகத்தை படித்து முடிக்கும்போது உங்கள் மனதில் தோன்றியிருக்கும்நண்பர்கள் இப்புத்தகத்தை ஒரு தடவைக்கு பலமுறை பொறுமையாக படித்து, மனதில் பதிய வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  உங்கள் ஆழ்மனதில் இக்கருத்துக்கள் பதிந்தால்தான், உங்களையும் அறியாமல் நெருக்கடியான நேரத்தில் அவை ஆபத்பாந்தவனாக வந்து உதவி செய்யும். 


இந்நூலின் விலை ரூ  500/- .  இதை பெரிய காசாக நினைக்காதீர்கள். 500 ரூபாயுடன் ஒப்பிடும்போது, நீங்கள் பெறப்போகும் பலனை ஒப்பிட்டால் 500 என்பது ஒன்றுமில்லை. 

நண்பர்களே...

திருமணமான ஆண்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய கட்டுரை - தந்த்ரா யோகம் (TANTRA YOGA) - எனும் என்னுடைய கட்டுரையை சிற்சில மாற்றங்களுடன் சில கூடுதல் தகவல்களையும் சேர்த்துஒரு மின்-புத்தகம் (E -Book in Tamil ) கொண்டுவந்துள்ளேன். ( கட்டுரையின் link : http://lingeswaran-ise.blogspot.in/2016/06/blog-post_18.html )

படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட Email  முகவரிக்கு book என type செய்து அனுப்பினால் அந்த E -Book உங்களுக்கு  இலவசமாக அனுப்பி வைக்கப்படும். 

திருமணமான ஆண் பெண்கள், திருமணம் ஆகப்போகிறவர்கள் மற்றும் பொதுவாகவே அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்இது. உங்கள் இல்லற வாழ்க்கையை மட்டுமல்லாமல் , உங்களுடைய மன நலம் , உடல் ஆரோக்கியம், நிதி வசதி , நல்லநண்பர்கள் உறவுகள் ஆகியவற்றையும் கொண்டுவரக்கூடிய பலஆலோசனைகளை இக்குறுநூல் உள்ளடக்கியுள்ளது. நீங்கள் விரும்பினால் உங்கள் நண்பர்களுடன் இந்த மின் புத்தகத்தை பகிர்ந்து கொள்ளலாம்.

Email: lingeswaran.balu@gmail.com

அனைவரும் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாழ்கவளமுடன் !


தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை என்ற நூலை எப்படி பெறுவது :-  

புத்தகத்தை வாங்க விரும்புவோர் ,கீழ்கண்ட  Button -ஐ  Click செய்து , ONLINE மூலமாக ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

https://www.amazon.in/gp/product/9380800428/ref=as_li_qf_sp_asin_il_tl?ie=UTF8&tag=lingeswaran-21&camp=3638&creative=24630&linkCode=as2&creativeASIN=9380800428&linkId=af8a24f0a01ebf01eb9e141d11a5ad71வாழ்த்துக்களுடன், 
LINGESWARAN,
17/06/2016

Thursday, June 2, 2016

மனம் அமைதி பெற வழி . .

மனோதத்துவம் எளிமையானது. நீங்கள் பேஸ்புக்கில் கவனித்தீர்களேயானால், பல நண்பர்கள் தங்கள் கஷ்டங்களை share செய்வார்கள். எப்படியெனில் யாரும் நேரடியாக share செய்ய மாட்டார்கள், ஏதோ ஒரு படம் அல்லது வாசகங்கள் மூலம் தங்கள் துயரங்களை வெளிப்படுத்துவார்கள். நண்பர்களே, பெரும்பாலோர் வாழ்க்கை துன்பங்களும் துயரங்களும் நிறைந்ததாகவே உள்ளது. எனினும் அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது.  கடந்தகால கசப்பான சம்பவங்கள், துக்ககரமான எண்ணங்கள் இவையாவும் நம் மனதில் அழுத்தமாக பதிந்து - மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து நம்மை துன்புறுத்துகின்றன. இதனால் சரியாக தூக்கம் வராது ; சரியாக பசி எடுக்காது;  உடல் சோர்வாக இருக்கும்;  முகம் பொலிவிழந்து விடும்.  இந்த ' எண்ணங்களின் பிரதிபலிப்பு இயக்கம்'  ஓர் எல்லை மீறும்போது  - அவ்வெண்ணங்கள் ஒருவரை ஒரு குறிப்பிட்ட செயலை செய்யுமாறு மீண்டும் மீண்டும் ( அவர் விரும்பாமலே) தூண்டதுவங்கும். இந்நிலையில் உடலும், உள்ளமும் மிகவும் தளர்ந்து விடும்.  இதனை  மனநல மருத்துவர்கள்  OBSESSIVE COMPULSIVE DISORDER (OCD) - எண்ண சுழற்சி நோய் என அழைக்கிறார்கள். உண்மையில், மனமானது எதையும் சிந்திக்காமல் - எண்ணங்களின் பிடியிலிருந்து விடுபட்டு இருப்பதே உண்மையான அமைதி நிலையாகும். இதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் , நான் உங்களுக்கு மிக எளிமையான  பயிற்சி ஒன்றை கூறுகிறேன். ஒரு தியான முறை போல நீங்கள் இதை கருதலாம். பயிற்சி முறை:-  

தனிமையில் ஒரு விரிப்பில் தியானம் செய்வதுபோல்  (படத்தில் இருப்பதைப்போல விரலை வைத்துக்கொண்டு)  அமர்ந்து கொள்ளவும். இரவு நேரம் உகந்தது. உணவுக்கு முன் செய்வது  நல்லது.  அதிக வெளிச்சம், சத்தம், வேறு இடைஞ்சல்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். கண்களை மூடவும். இப்போது உங்கள் மனதில் பல்வேறு எண்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக  தோன்றும். ஒவ்வொரு எண்ணத்தையும், 

1.  ஆராயக் கூடாது  - Dont analysis .

2.   நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என பிரிக்கக் கூடாது -  Dont discriminate.

3.   புனிதமான எண்ணங்கள், கீழ்த்தரமான எண்ணங்கள் என தீர்ப்பிடக் கூடாது - Dont judge.

மனதில் உருவாகும் எண்ணங்களை அதன் போக்கில் விட்டு , நீங்கள் ஒரு பார்வையாளராக ( Spectator/Viewer ) கவனித்துக்கொண்டு மட்டும் இருக்க வேண்டும்.  ஏராளமான எண்ணங்கள் ( சோகம், கோபம், வருத்தம், காதல் தோல்வி, கருத்து வேறுபாடுகள், பாலியல் எண்ணங்கள், பணப் பிரச்சினை, குடும்ப சண்டைகள் இது போன்றவை)  வந்துகொண்டே இருக்கும். இவையெல்லாம் எங்கே இருந்தன?  நம் மனதில்தான் அழுந்திக்கொண்டு  இருந்தன. இவற்றை நீங்கள நோண்டாமல் சுதந்திரமாக விட்டுவிட்டால் , அவை தானாகவே Release ஆகி  Exhaust ஆகிவிடும் (சக்தி தீர்ந்து விடுவது போல).  மாறாக, ஒவ்வொரு எண்ணத்தையும் ஆராய துவங்கினால் - மதிப்பிடத்  துவங்கினால் - அவை Chain reaction மாதிரி விஸ்வரூபம் எடுத்து மூளையை இறுக்கமாக்கி விடும். ஆனால் பொதுவாக நாம் அப்படிதான் செய்வோம். 
இந்த பயிற்சியை நீங்கள் தினமும் 10 முதல் 30 நிமிட, வரை செய்ய வேண்டும்.  நல்ல அமைதியான சூழ்நிலை இருந்தால்  எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.  தொடர்ந்து செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும், ஜீரண கோளாறுகள் சரியாகும், முகம் பிரகாசமாகும். தவறான காரியங்களை செய்யும்போது , செய்யக்கூடாது  என்ற விழிப்புணர்வு  Mindfulness வரும்.

LINGESWARAN
02/06/2016
DINDIGUL, TAMILNADU.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...