Wednesday, February 17, 2016

தாரை தப்பட்டை - நரம்புகளை முறுக்கேற்றும் இசை. .

தாரை தப்பட்டை திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் படத்தின் பாடல்களை இதுவரை 50 முறையாவது கேட்டிருப்பேன். மனோதத்துவத்தில் Perception என ஒரு கான்செப்ட் உண்டு. அதன்படி இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கேட்டு பழக்கப்பட்ட காதுகளுக்கு அவர் இசையை - புது படமாக இருந்தாலும் - கேட்ட மாத்திரத்திலே இது அவர் இசைதான் என்று என்னால் சொல்ல முடியும். சமீப காலமாக அவர் பாடல்களில் அதிகமாக Repetition-ஐ பார்க்க முடிகிறது. இது இளையராஜாவின் பரம ரசிககர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இசையில் ஓர் Threshold Limit-ஐ தொட்டு விட்டார் என்றே நினைத்திருந்தேன். தாரை தப்பட்டை பாடல்களை கேட்கும்வரை. இப்படத்தின் ஆல்பத்தில் ஆறு இசைக்கோர்வைகள் உள்ளன. அவற்றை பற்றி ஓரிரு குறிப்புகள் எழுதுகிறேன் .


முதலில் கடைசி இசைகோர்வை:  இது நிச்சயமாக பழிவாங்கும் காட்சிதான். காதுகளின் வழியே காட்சியை உணர்த்தும் இளையராஜா ஒரு உலக இசைமேதை என்பதை நிருபிக்கும் இசை. மரண அடி என்பார்களே அது இதுதான். ஊ ....ஊ....என ஒப்பாரி வைக்கும் சாயலில் கோரஸ் ஒலிக்கிறது. நீண்.....டு ஒலிக்கும் சங்கு வயிற்றை கலக்குகிறது. நாதஸ்வரம், உறுமி, தாரை தப்பட்டை மேலும் என்னென்னவோ பலர் பார்த்திராத கருவிகளை வைத்து பொளந்து இருக்கிறார்.


Hero Intro Theme:  யுனானி மருத்துவத்தில் லபூப் கபீர் என்று ஒரு மருந்து இருக்கிறது. நாடி நரம்புகளை முறுக்கேற்ற தருவார்கள். ஆனால் இந்த பாடலில் இசை தெறிப்பதிலேயே நாடி நரம்புகள் முறுக்கேருகின்றன. மேலே உள்ள குறிப்பே இதற்கும் பொருந்தும்.


வதன வதன வடிவேலனே:   இது ஒரு ரகளையான பாடல்(பிரியதர்ஷினி) . இந்த பாடலில் வரும் குரலுக்கு தகுந்தவாறும், இசைக்கு தகுந்தவாறும் காட்சிப்படுத்துவது சிரமம் என்றே நினைக்கிறேன். ஹேய்....ஹேய்....ஆஹா....ஹேய்... என்றும்.....தித்தோம்....தித்தோம் என்றும் என்று கோரஸ் குரலில் அதிருகிறது பாடல். பாடல்களை கேட்டால்தான் நான் உணரச் செய முயற்சிக்கும் இசை அதிர்வுகளை நீங்கள் அனுபவித்து உணர முடியும்.


ஆட்டக்காரி மாமன் பொண்ணு:   இப்பாடலை பாடியவர் M. M. Manasi என்பவர். இந்த பாடலில் இசைகருவியே இவரது குரல்தான். இக்கருவியை வைத்தே இளையராஜா நம்மை mesmerize செய்கிறார். " கேக்க வேணும் கசக்கி தின்னு...." என அழுத்தமாக பாடும்போதே கசக்குவது (எதை?) போல இருக்குகிறது. "நீ இருக்கும் இடந்தான் எனக்கு குவிலயா (கோவில் ஐயா) ....." என்ற ஒரு பிரமாதமான வரி(!). இந்த பாடல் போன்ற சித்து விளையாட்டை இளையராஜாவால் மட்டும்தான் செய்ய முடியும்.

திருவாசக நிழல் படிந்த மீதி இரண்டு பாடல்களும் நன்றே. 

YOUTUBE LINK:
https://www.youtube.com/watch?v=eXfaWeFE3jM

பின்குறிப்பு: மேலே நான் எழுதிய அதிர்வுகளை நீங்கள் நன்றாக உணர வேண்டுமானால், இந்த பாடல்களை நல்ல ஹெட் போனிலோ அல்லது நன்கு ஒலி அதிர்வு எழுப்பும் சிஸ்டதிலொ கேட்குமாறு பரிந்துரைக்கிறேன்.

LINGESWARAN
19/02/2016

No comments:

Post a Comment

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...