Saturday, February 27, 2016

ஆறாது சினம் . .

1. ஒரு நல்ல வேற்று மொழி படத்தை நாஸ்தியாக்காமல் எப்படி அருமையாக ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்கு சரியான உதாரணம்.

2. தட தடக்கும் இசை (தமன்).

3. படிபடியாக வேகமெடுக்கும் திரைக்கதை.

4. திருக்குறள் - கள்ளுண்ணாமை

5. கொலைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் முடிச்சுக்களை ஹீரோ ஷார்ப்பாக துப்பு துலங்குவது.

6.  Memories -ஐ ஒப்பிடும்போது வில்லனின் குறைச்சலான குரூரம்.

7.  விஜய், அஜித், சூர்யா ,விக்ரம் போன்றவர்களெல்லாம் ஏன் இது போன்ற ஆக்டிங் ஸ்கோப் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன்கிறார்கள்?  

8. நைய அடித்த தமிழ் சினிமாக்களுக்கு இடையில் ஆறாது சினம் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி.


ப.லிங்கேஸ்வரன்.
27/02/2016.

Wednesday, February 17, 2016

தாரை தப்பட்டை - நரம்புகளை முறுக்கேற்றும் இசை. .

தாரை தப்பட்டை திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் படத்தின் பாடல்களை இதுவரை 50 முறையாவது கேட்டிருப்பேன். மனோதத்துவத்தில் Perception என ஒரு கான்செப்ட் உண்டு. அதன்படி இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கேட்டு பழக்கப்பட்ட காதுகளுக்கு அவர் இசையை - புது படமாக இருந்தாலும் - கேட்ட மாத்திரத்திலே இது அவர் இசைதான் என்று என்னால் சொல்ல முடியும். சமீப காலமாக அவர் பாடல்களில் அதிகமாக Repetition-ஐ பார்க்க முடிகிறது. இது இளையராஜாவின் பரம ரசிககர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இசையில் ஓர் Threshold Limit-ஐ தொட்டு விட்டார் என்றே நினைத்திருந்தேன். தாரை தப்பட்டை பாடல்களை கேட்கும்வரை. இப்படத்தின் ஆல்பத்தில் ஆறு இசைக்கோர்வைகள் உள்ளன. அவற்றை பற்றி ஓரிரு குறிப்புகள் எழுதுகிறேன் .


முதலில் கடைசி இசைகோர்வை:  இது நிச்சயமாக பழிவாங்கும் காட்சிதான். காதுகளின் வழியே காட்சியை உணர்த்தும் இளையராஜா ஒரு உலக இசைமேதை என்பதை நிருபிக்கும் இசை. மரண அடி என்பார்களே அது இதுதான். ஊ ....ஊ....என ஒப்பாரி வைக்கும் சாயலில் கோரஸ் ஒலிக்கிறது. நீண்.....டு ஒலிக்கும் சங்கு வயிற்றை கலக்குகிறது. நாதஸ்வரம், உறுமி, தாரை தப்பட்டை மேலும் என்னென்னவோ பலர் பார்த்திராத கருவிகளை வைத்து பொளந்து இருக்கிறார்.


Hero Intro Theme:  யுனானி மருத்துவத்தில் லபூப் கபீர் என்று ஒரு மருந்து இருக்கிறது. நாடி நரம்புகளை முறுக்கேற்ற தருவார்கள். ஆனால் இந்த பாடலில் இசை தெறிப்பதிலேயே நாடி நரம்புகள் முறுக்கேருகின்றன. மேலே உள்ள குறிப்பே இதற்கும் பொருந்தும்.


வதன வதன வடிவேலனே:   இது ஒரு ரகளையான பாடல்(பிரியதர்ஷினி) . இந்த பாடலில் வரும் குரலுக்கு தகுந்தவாறும், இசைக்கு தகுந்தவாறும் காட்சிப்படுத்துவது சிரமம் என்றே நினைக்கிறேன். ஹேய்....ஹேய்....ஆஹா....ஹேய்... என்றும்.....தித்தோம்....தித்தோம் என்றும் என்று கோரஸ் குரலில் அதிருகிறது பாடல். பாடல்களை கேட்டால்தான் நான் உணரச் செய முயற்சிக்கும் இசை அதிர்வுகளை நீங்கள் அனுபவித்து உணர முடியும்.


ஆட்டக்காரி மாமன் பொண்ணு:   இப்பாடலை பாடியவர் M. M. Manasi என்பவர். இந்த பாடலில் இசைகருவியே இவரது குரல்தான். இக்கருவியை வைத்தே இளையராஜா நம்மை mesmerize செய்கிறார். " கேக்க வேணும் கசக்கி தின்னு...." என அழுத்தமாக பாடும்போதே கசக்குவது (எதை?) போல இருக்குகிறது. "நீ இருக்கும் இடந்தான் எனக்கு குவிலயா (கோவில் ஐயா) ....." என்ற ஒரு பிரமாதமான வரி(!). இந்த பாடல் போன்ற சித்து விளையாட்டை இளையராஜாவால் மட்டும்தான் செய்ய முடியும்.

திருவாசக நிழல் படிந்த மீதி இரண்டு பாடல்களும் நன்றே. 

YOUTUBE LINK:
https://www.youtube.com/watch?v=eXfaWeFE3jM

பின்குறிப்பு: மேலே நான் எழுதிய அதிர்வுகளை நீங்கள் நன்றாக உணர வேண்டுமானால், இந்த பாடல்களை நல்ல ஹெட் போனிலோ அல்லது நன்கு ஒலி அதிர்வு எழுப்பும் சிஸ்டதிலொ கேட்குமாறு பரிந்துரைக்கிறேன்.

LINGESWARAN
19/02/2016

Thursday, February 11, 2016

காதல் 2016 . .

இப்போது காதல் என்பதே இல்லை எனக் கொதிக்காமல் ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் ஈகோ உண்டு.  தான் நினைப்பதே சரி என்று நினைப்பதே ஈகோ.  இருபது  வருடங்களுக்கு முன் உண்மைக் காதல்கள் இருந்தன, இப்போது காமக் காதல்கள்தான் உள்ளன என்று ஜல்லியடிக்க விரும்பவில்லை. நான் 17 வயதில் ஒரு பெண்ணை காதலித்தேன். 33 வயதில் திருமணமாயிற்று.  இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?  ஹார்மோன்களின் கூடுதல் குறைவுதான் வித்தியாசம்.  17-18 வயதில் ஏற்படுவதுதான் உண்மையான காதல் என்பது என் அபிப்ராயம். 17 வயதில் ஒருவர் மேல் காதல் வர, ஒரே தகுதிதான் உண்டு. பிடித்திருக்க வேண்டும்.  அவ்வளவே. ஆனால் நீங்கள் 30 வயதில் ஒரு பெண்ணை /ஆணை காதலிக்க(திருமணம் செய்ய)  அவர் பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். கௌரவமான வேலை, குடும்ப அந்தஸ்து, எதிர்கால திட்டங்கள், வேலையின் தன்மை, ஜாதி மதம் இப்படி பலபல. 17 வயதில் வருவது  Infatuation என்பார்கள். அப்படியென்றால் 30 வயதில் கல்யாணம் பண்ணிக்கொண்டு  ஆஞ்சநேயர் பக்தர்களாக மக்கள் மாறி விடுகிறார்களா என்ன?  அதே பஜனை தான் பாடுகிறார்கள். சிறிய வயது காதல் தூய நீர்நிலையை போன்றது. சமூகத்தின் அழுக்குகள் ஏதும் படியாதது. எதிர்கால நெருக்கடி கழுத்தறுப்புகள் இல்லாதது.  வயது கூட கூட சமூகம் நம்மை பார்த்து நகைக்கிறது.  மனித மனதின் இயல்பான தன்மையே காதல் என்று சொல்லலாம். ஆதலால்தான்  எந்த வயதிலும் ப்ரேமம் (மலையாளம்) போன்ற படத்தை மெய்மறந்து ரசிக்க முடிகிறது.


நம் மூளையில் எண்ணற்ற வேதிப் பொருட்கள் சுரக்கின்றன. Dopamine, Serotonin என பல பெயர்களை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை 14 வயதில் சுரக்க துவங்கி, 30 வயதுக்கு மேல் லேசாக குறைய துவங்குகிறது.  Optimum ஆக 25 வயதில் திருமணம் செய்வது மனதிற்கும், உடல் உள்ளுருப்புகளுக்கும் நல்லது என நினைக்கிறன். 

தற்கால இளைஞர்களுக்கு காதலின் புனிதம் தெரியவில்லை, காமத்திற்காக காதலிக்கிறார்கள் என்ற புலம்பலை பரவலாக கேட்க முடிகிறது.  இந்த புலம்பலில் நீதி சற்று குறைவாகவே  இருக்கிறது எனத் தோன்றுகிறது.  மொத்த இளைஞர்கள் கூட்டமும்தானே இப்படி மாறியிருக்கிறது?  இதன் காரணம் தெளிவானது: செல் போன்கள், இன்டர்நெட்,  உணவு முறை, வாழ்க்கை முறை ,சுருக்கமாக சொன்னால் தொழில்நுட்ப முன்னேற்றம்.  பத்து இருபது வருடங்களுக்கு முன்பு இவையெல்லாம் இல்லையே? இருந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்?யோசித்து பாருங்கள்.

LINGESWARAN
FEBRUARY 12/2016.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...