Wednesday, July 22, 2015

காயகல்ப பயிற்சி - விந்து கட்டும் கலை . .

அறிமுகம் 

 எந்த ஒன்றை அறிந்தால், எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாமோ  அதுதான் கடவுள். கடவுளைப் பற்றி கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம் இது.  அதேபோல், எந்த ஒரு கலையை அறிந்திராவிட்டால் - எந்த ஒரு சிகிச்சை முறையும், எந்த ஒரு யோகமும், எந்த ஒரு உடற்பயிற்சியும், எந்த ஒரு உணவு முறையும் - முழுப்பலன்  தராதோ அக்கலைதான் விந்து கட்டும் கலையாகும்.  சித்தர்கள் இதை காயகற்ப யோகம், காயகற்ப பயிற்சி, சுக்கில ஸ்தம்பனம் என பல பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.


இந்திய சித்தர்களால் உருவாக்கப்பட்டு கற்றுகொடுக்கப்பட்டு வந்த காயகற்ப பயிற்சியானது கால ஓட்டத்தில் துண்டு துண்டாக சிதறி பல்வேறு  நாடுகளில் சிறுசிறு பயிற்சிகளாக பயிலப்பட்டு வருகிறது.  மீண்டும் இதற்கு மறுவடிவு  கொடுத்தவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஆவார்.   1911 - ம் ஆண்டு பிறந்த அவர், 40 ஆண்டுகாலம்  தன் கடுமையான ஆராய்ச்சி, உள்ளுணர்வு, சித்தர்களின் நூல்கள், பல அறிஞர்களுடன் உரையாடல்  இவற்றின் மூலம்  மீள் உருவாக்கம்  செய்த பயிற்சியே காயகற்பம் ஆகும்.  எல்லா சித்த மருத்துவர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும் ஏக மனதாக, இப்பயிற்சி  ஒரு உச்சகட்ட யோகபயிற்சி என ஒப்புக்கொள்கிறார்கள். நமது ஐயா மகரிஷி இல்லையேல்  காயகற்ப பயிற்சி இன்றும் ஒரு கேள்விக்குறியாக மாறியிருக்கும். இதில் எவ்வித மருந்தோ, மதமோ .இல்லை.


விந்துவின் முக்கியத்துவம் 

உலகில் எத்தனையோ இனத்தை சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கிடையே எவ்வளவோ வேற்றுமைகள்   உள்ளன; ஒற்றுமைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒற்றுமை என்னவெனில், விந்து திரவத்தை அளவு, முறை இல்லாமல் வீணடிப்பது தான். விந்துசக்தி ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் உற்பத்தி ஆகிறது. பழைய தமிழில் நாதம் என்கிறார்கள். உடலுறவின்போது, இது பெண்களுக்கு விட்டுவிட்டு கசிகிறது. ஆங்கிலத்தில் இதை  Single Orgasm,  Multiple Orgasm என்றும் கூறுகிறார்கள்.

விந்துவை பெரும்பாலான மக்கள் ஒரு அசிங்கமான பொருளாகவே நினைக்கிறார்கள். பாலுறவைப் பற்றி பேச
சங்கடப்படுகிறார்கள். இது தவறு. உண்மையில், விந்து எனப்படும் திரவம் ஒரு புனிதப் பொருளாகும். ஒரு மனிதனின் உடல் உறுதி, ஆரோக்கியம், மன அமைதி, மூளையின் ஆற்றல் இவை அனைத்தும் விந்துவை முறையாக செலவழிப்பதிலும், பாதுகாப்பதிலும்தான் அடங்கியுள்ளது.

இந்தியாவின் பாரம்பரிய வைத்திய முறைகளான சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி வைத்திய முறைகள் விந்து சக்தியின் மகத்துவத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் தற்கால ஆங்கில மருத்துவர்கள் பெரும்பாலோர் இதற்கு மாறான கருத்தையே முன்வைக்கிறார்கள். இக்கருத்தின்படி நடக்கும் மக்களை இறைவன் காப்பாற்றுவாராக !


உடற்செயலியல் 

ஒரு மின்சுற்றில் ( Circuit )  பாட்டரி அமைந்து, அச்சுற்றில் மின்சாரத்தை பாய்ச்சும் விதம் போலவே, விந்து உடலின் மையத்தில் விந்துப்பையில் அமைந்துள்ளது. எப்படி ஒரு பாட்டரியில் உள்ள ரசாயன திரவமானது அளவிலும் ( Quantity ), தரத்திலும் ( Chemical Composition )  குறைந்தால் - அதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அழுத்தம் ( Potential ) குறைகிறதோ - அதேபோன்றே அளவிலும் தரத்திலும் குறையும் விந்து மனித உடலில் பாதிப்பை உண்டாக்குகிறது. அதாவது:

விந்து திரவமானது அளவில் குறைந்தாலோ( below the critical limit ), ரசாயனக் கூட்டு சரியான அளவில் அமையாமல் போனாலோ - அதிலிருந்து கிளர்ந்தெழும் காந்த அலைகளின் அழுத்தம் குறைகிறது. இந்த அழுத்த அலைகள் உடல் முழுவதும் பரவி செல்களில் உந்து ஆற்றலாகவும், இழுக்கும் ஆற்றலாகவும் மாறி மாறி செயல்பட்டு உடற்செயல்களை ( Catabolism and Anabolism )  நடத்துகின்றன.  எஞ்சிய காந்த அழுத்த அலைகள் ( the surplus )  மூளையின் வழியாக  Channelize ஆகி தோல், கண், மூக்கு, நாக்கு, காது வழியாக கசிந்து கொண்டே இருக்கின்றது. இவ்வாறு கசியும் காந்த அலைகள் உடலுக்கு வெளியே (புறத்தில்) உள்ள பொருட்களோடு மோதும்போது ஒரு மனிதன் அதை உணர்வாக பெறுகிறான் ( Feeling and Sensation ).


இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது - விந்து திரவம் அளவு குறையும்போதோ, அதில் அமைந்த ரசாயன விகிதம் தவரும்போதோ - அதிலிருந்து  திணிவடைந்து  ஓங்கி எழும் காந்த அலைகளின் அழுத்தம் குறைகிறது. குறைந்த அழுத்தம் பெற்ற அலைகளால் சரிவர நடத்த முடியாமல்,  உடல் உறுப்புகளின் இயக்கம் நாளடைவில் மந்தமாகிறது; மூளை சோர்வடைகிறது. ஐம்புலன்களின் திறன் குறைகிறது.  அளவு என நான் கூறுவது சுத்தமாக தீர்ந்து போவதல்ல. ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே ( below the critical limit ) போவதையே நான் கூறுகிறேன்.  Surplus ஆக உள்ள திரவத்தை கழிப்பதால் இன்பம்தான்.  விந்துவை ஒரேடியாக அடக்கி வைத்தாலும் மண்டையிடி உண்டாகும்.


எவ்வாறு விந்து நஷ்டமடைகிறது 

பூமி மணிக்கு பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தில் சுழல்வதால், பூமியின் மைய ஈர்ப்பு விசை காரணமாக மனித உடலில் நாடி நரம்புகள் தினம் தினம் தளர்ந்து போகின்றன.  உடற்செல்கள் தெறித்தும், உதிர்ந்தும் விழுகின்றன.  இந்நிகழ்ச்சி இளமையில் ஓரளவும், முதுமையில் அதிகமாகவும் நடக்கிறது.  பூமியின் சுழற்சியால் விந்து  நீர்த்து ( Dilution )  போகிறது.  நீர்த்துப் போன விந்து வெளியேற வேகம் பெறுகிறது.  இந்த வெளியேற்ற வேகமே காம உணர்வாகும். பொதுவாக நாம் கீழ்க்கண்ட வழிகளில் விந்து சக்தியை செலவழிக்கிறோம் : -

                                                1.   சுய இன்பம்.
                                                     2.  தூக்கத்தில் விந்து கழிதல்
                                                          3.  உடலுறவு

காம உணர்வு ஓர் எல்லை மீறும்போது உடல் சூடு அதிகமாகிறது.  உடற்சூடு அதிகமானால் விந்து திரவம் நேரடியாக உடலிருந்து ( Evaporate )  ஆவியாகி விடுகிறது. இவ்வாறு ,

1.    Dilution
2.    Evaporation

என பொதுவான இரண்டு வழிகளில் நஷ்டமடைகிறது.  வாரம் ஒரு முறையோ, பத்து நாட்களுக்கோ ஒரு முறையோ  உடலுறவில் விந்தை கழிப்பதில் பெரிய தீங்கு ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன்.


விந்து சக்தியை அளவு முறையில்லாமல் வீணாக்குவதால் உண்டாகும் தீங்குகள் 

*   உடல் சோர்வு
*   கண் எரிச்சல்
*   மலச்சிக்கல்
*   புத்தியில் தெளிவின்மை
*   சரியான தூக்கமின்மை
*   45 வயதிற்கு மேல் சிறுநீர் பாதை தொடர்பான நோய்கள்
*   வயதான தோற்றம்
*   மனதில் கீழ்த்தரமான எண்ணங்கள்
*  நரம்புத் தளர்ச்சி இன்னும் பல.

நான் என் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசும்போது அவர்கள் கூறுவது : - இந்த வயதில் ஆன்மிகம்  எதற்கு?  50, 60 வயதுக்கு மேல் ஆன்மிகம் பேசலாம் என்பதே.  ஆனால் பரிதாபம் என்னவெனில், 50 வயதுக்கு மேல் மனம் நினைக்கும், உடல் ஒத்துழைக்காது, தளர்ந்து விடும்.  மேலும்  உடல் நிலையும் சரசரவென சரிந்து விடும். அதுமட்டுமல்லாமல், பழைய வினைப்பதிவுகள் மீண்டும் மீண்டும் போகத்தை நோக்கியே இழுத்துச்செல்லும்.

சிறு வயதிலிருந்தே காயகல்பம் போன்ற ஏதாவதொரு யோகப்பயிற்சிகளை செய்து வந்தால்தான், வயதான காலத்திலும்  உடல்நலம் இருக்கும். 40, 50 வயதுவரை நன்றாக ஆட்டம் போட்டுவிட்டு, நானும் காயகல்பம் செய்கிறேன் என்று வந்தால்  பலன் குறைவாகத்தான் இருக்கும்.  அதற்காக யாரும் தயங்காதீர்கள். எந்த வயதில் செய்தாலும் அதற்குரிய பலன் கண்டிப்பாக கிடைக்கும்.


காயகற்ப பயிற்சி எவ்வாறு வேலை செய்கிறது?

காயகற்ப பயிற்சியானது,

1.    தினமும் தளரும் நரம்புகளை முறுக்கேற்றி

2.    விந்துவை அதிகப்படுத்தி

3.    விந்துவின் சாரத்தை, விந்துவின்  சுத்த சக்தியை பிரித்தெடுத்து மூளைக்கும்,  உடற்செல்கள் அனைத்திற்கும்  ஒடச்செய்கிறது.  இதனால் நரம்புகள் வலுவடைந்து விந்து கெட்டிப்படும். இங்கே நீங்கள் கவனிக்க வேண்டியது , நாம் உடலில் சுழற்சி செய்வது விந்து திரவத்தை அல்ல, விந்துவில் அடங்கியுள்ள தூய காந்த அலைகளைதான்.

இப்பயிற்சியால் தங்கள் இல்லற வாழ்வு அதாவது உடலுறவு பாதிக்கப் படுமோ என பலர் நினைக்கிறார்கள். அது  தவறு. காயகற்ப பயிற்சி உடலுறவில் திருப்தியையும் , நிறைவையும் தருகிறது.  இதை நீங்கள் அனுபவத்தில்  உணரலாம். உடல் உறுதியும், ஆண்மையும் ஓங்குவதை நீங்கள் கண்கூடாக உணரலாம்.

பயிற்சிக்கு தேவையான் நேரம் காலை, மாலை இருவேளையும்  வெறும் 7 நிமிடங்கள் போதும்.


காயகற்ப பயிற்சியின் பலன்கள் 

1.    சுறுசுறுப்பு
2.    முகப்பொலிவு
3.     மனக்கட்டுப்பாடு, மன அமைதி
4.    நல்ல உறக்கம்
5.    பாலுணர்வு வெறி கட்டுப்படும்
6.    சுய இன்பப் பழக்கம் தானாகவே நின்று விடும்.
7.    மலச்சிக்கல், மூல வியாதி போன்றவை விரைவில் குணமாக உதவும்.
8.    தோல் வியாதிகள் விரைவில் கட்டுக்குள் வரும்.
9.    பெண்களுக்கு மாதவிடாய் , கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் தீரும்.
10.  ஒழுக்க குணம் இயல்பாகவே உண்டாகும்.
11.  நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு , சிறுநீர்ப் பாதை சம்பத்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
12.  விந்துவில் உள்ள குறைகள் சரி செய்யபடுவதால் நல்ல ஆரோக்யமும், புத்திகூர்மையும் கொண்ட குழந்தைகள் பிறப்பார்கள்.
13.  மரணத்தை தள்ளிப்போடலாம். காயகற்ப பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால், முதிய வயதில் சிரமமில்லாமல்  உயிர்பிரியும் என வேதாத்திரி மகரிஷி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


விந்துவில் அடங்கியுள்ள சத்துப் பொருட்கள் 

விந்து திரவத்தில் 20-க்கும் மேற்பட்ட வைட்டமின்கள, மினரல்ஸ், புரோட்டின்கள்  அடங்கியுள்ளன. அதனால்தான், ஒருதுளி விந்து ஒரு மனித ஜீவனையே உருவாக்கும் ஆற்றல் பெற்றதாகவும், காயகற்ப பயிற்சியின்  பலன் மிக அதிகமாகவும் உள்ளது.


காயகற்ப பயிற்சியை எங்கே கற்றுக் கொள்ளலாம்?

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய ' உலக சமுதாய சேவா சங்கத்தின் '  கீழ்வரும்  மனவளக்கலை மன்றங்கள்,  அறிவுத் திருக்கோயில்கள்  எல்லா ஊர்களிலும், வெளிநாடுகளிலும் கூட உள்ளன. அங்கு கற்றுக் கொள்ளலாம்.

அனுபவமும்,  காயகற்ப பயிற்சியின் நுணுக்கங்களும் நன்கறிந்த மனவளக்கலை ஆசிரியர் மூலம் கற்பது மிகச் சிறப்பு.


P. LINGESWARAN

Email:lingeswaran.balu@gmail.com


9 comments:

 1. Hello Brother, im Arif,
  My native is Trichy. i learn yoga and kaya kalpa payirchi before 5 years. but i forgot the kayakalpa yoga.. im in foreign now, i dont hav holiday except sunday.. so i want to know the yoga again,, is there any way to learn in online..
  if u hav any solution kindly contact me @ smartarif07@gmail.com Thankyou

  ReplyDelete
  Replies
  1. Dear sir, Kindly go thru this official website for learning it online. http://www.vethathiri.edu.in/

   Delete
  2. There is a option called " E -learning " in that website.

   Delete

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...