Tuesday, December 29, 2015

வெஸ்டர்ன் டாய்லெட்டும், யோகாசனமும் . .
இந்த வெஸ்டர்ன் டாய்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்திய புத்திமான் யாரென தெரியவில்லை.  பாம்பே டாய்லெட் நாம் வழக்கமாக பயன்படுத்துவது.  வெ.டாய்லெட்டின் அனுகூலங்களாக சொல்லப்படுபவை :-

1.  மூட்டு வலியால் சிரமப்படுபவர்கள்

2.   உடற்பருமன் உள்ளவர்கள் - இவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதே.

 பாரம்பரிய யோகாசன முறையில் 'உட்கட்டாசனம் '  என ஒன்று உண்டு.  இதன் பலன்கள்: -

  • தொடைகள் வலுப்பெறும் 
  • தொப்பை குறைந்து அடிவயிறு இறுக்கமடையும் 
  • இதயத்துடிப்பு சீராகும் 

வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்துவோர் அனைவரும் , கால் கழுவும்போது, இந்த உட்கட்டாசனத்தை மறைமுகமாக செய்கிறார்கள் என்றே கருதுகிறேன்.  ஆனால் பலன் கிடைப்பதற்கு பதில், இதில் ஒரு அபாயம் இருக்கிறது.  பாம்பே டாய்லெட்டில் உட்காரும்போது (குத்தவைத்து) - உடல் எடை முழுவதும் - கீழ்நோக்கி செயல்படுவதால் மலம் வெளியேறுவது எளிதாக இருக்கும். அதிகமாக முக்க தேவையில்லை.  மேலும் ஆசன வாயை சுத்தம் செய்வதும் எளிது.  மாறாக, வெஸ்டர்ன் டாய்லெட்டில் மேலோட்டமாகவே நாம் அமருவதால் - மலத்தை வெளியேற்ற - நாமாகவே அழுத்தம் கொடுத்து (தம் கட்டி) முக்க வேண்டியிருக்கும், மலமும் சுத்தமாக கழிய வாய்ப்பில்லை.  கீழே உட்கார்ந்து எழும்போது அதுவே ஒரு உடற்பயிற்சியாகும். இதை தவிர்த்தால் நீங்கள் ஒரு உடற்பயிற்சியை, நல்ல ஒரு உடல் இயக்கத்தை தவிர்க்கிறீர்கள் என்று பொருள்.  சொல்லப்போனால், வெ. டாய்லெட்டை  தொடர்ந்து பயன்படுதுவோர்கே  கை கால் வலி வரும்.


ஆகையால், வெஸ்டர்ன் டாய்லெட்டை நீண்ட காலம் பயன்படுத்துவோர் கீழ்க்கண்ட உபாதைகளால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிக அதிகம் என்பது என் தாழ்மையான எண்ணம்: -

  1. இதய பலகீனம் 
  2.  மூட்டு வலி , கால் வலி 
  3. மலச்சிக்கல் 

சிலர் வெ.டாய்லெட்டில் மேலே ஏறி குத்தவைத்து உட்கார்ந்து போகலாம் என்கிறார்கள். ஆனால்  உடைந்துவிடும் அபாயம் இருக்கிறது.  அதற்குபதிலாக, செராமிக் பிளேட்டுகளை  இருபுறமும் அட்டாச் செய்து கொண்டு, அதன் மேல் உட்கார்ந்து கொள்ளலாம் என்பது எனக்கு நல்ல ஐடியாவாக படுகிறது.

LINGESWARAN
29/12/2015

Wednesday, December 9, 2015

வேதாத்திரி மகரிஷி - காலம் தாண்டி சிந்தித்த மகான். .1.  நிகழ்காலத்தில் வாழுங்கள்.  கடந்த காலம், எதிர் காலம் பற்றி கவலைப் படாதீர்கள்.

2.  இயல்பாக இருங்கள்.

புத்தரின் அடிப்படையான இரண்டு கான்செப்டுகளை வைத்துக்கொண்டு - அதை தம் வசதிக்கேற்ப மற்றும் அறிவுக்கேற்ப உருட்டி, நீட்டி, சுருக்கி - மக்களுக்கு போதித்து வருகிறார்கள் தற்போது வாழும் யோகிகள்.  ஓஷோ, சத்குரு ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ரவிசங்கர்ஜி மற்றும் இன்னும் பலர் இதில் அடங்குவர்.  இவர்களின் வாழ்க்கைக்கும், போதனைக்கும் உள்ள முரண்பாட்டை (Discrepancy)  நான் இங்கு ஆராய போவதில்லை.

மேற்சொன்ன இரண்டு போதனைகளை கவனியுங்கள். அதனை அப்படியே, இந்த நவீன யுகத்தில் அப்ளை பண்ண முடியுமா?  முடியும்.  அதற்கு, ஓசியில் மூன்று வேளை சோறும், தங்க நல்ல வசதியும் இருந்தால் முடியும்.  ஆனால் A stupid common man of this republic country  ஒருவரால் முடியுமா?  அனுதினமும் இன்னல் நிறைந்த சமூக வாழ்கையில் ( Social Life) -  Business  என்ற பெயரில் கொள்ளையடிக்கும் பன்னாட்டு ......ட்டிகளையும்,  மருத்துவம், கல்வி, அரசியல் என எந்தெந்த வழியுண்டோ அத்தனையிலும்  திருடும் ஆசாமிகள் நிறைந்த இவ்வுலகில் புத்தர் சொன்ன வார்த்தைகளை கடைபிடிக்க முடியுமா?  அதுவும் முடியும். சிற்சில திருத்தங்களோடு.

அப்படி ஒரு மகத்தான வழியை காட்டியவர்தான்  Underrated  தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.  கடந்த சில நூற்றாண்டுகளில் யோகிகள், ஞானிகளாக அறியப்படுபவர்கள் பெரும்பாலும் இளம்வயதில் வீட்டைவிட்டு ஓடி வந்திருப்பார்கள் அல்லது சிறுவயதிலிருந்தே எல்லாவற்றையும் 'துறந்திருப்பார்கள்'.  வேதாத்திரி மகரிஷியோ, இக்கட்டுரையை படிக்கும் நீங்களோ நானோ வாழும் துயரம் நிறைந்த வாழ்கையை வாழ்ந்து அறுபது வயதிற்கு மேல் தான்பெற்ற தவ அனுபவங்களை, யோக வாழ்வை, அனுபவங்களை பயிற்சிகளாக செதுக்கி -  பாரபட்சம் இல்லாமல் - பணத்தை எதிர்பார்க்காமல் - மக்களிடம் மேகம் போல் பொழிந்த ஞானவள்ளல். இந்த மகானை குருவாக பெற்றது நான் எந்தப் பிறவியில் செய்த புண்ணியமோ.


வேதாத்திரி மகரிஷி புத்தரின் தத்துவங்கள் மற்றும் தென்னிந்திய சித்தர்களின் தத்துவங்களை  விரிவாக ஆராய்ந்து - சீர்தூக்கி பார்த்து -  தற்கால கொடுமையான சமூக நிலைக்கேற்ப , அதில் சமாளித்து வாழ்வதற்கு - சிலசில மாற்றங்களை செய்து ' மனவளக்கலை ' என்ற பெயரில் வழங்கினார். அதற்குமுன், சித்தர்களின் தத்துவங்கள் என்பவை: -

1.  உடலை நோயில்லாமல் ஓம்புதல்.
2.  நீண்ட ஆயுளுடன் இளமையாக வாழ்தல்
3.  மனதிற்குள்ளாக இறைவனை உணர்தல்
4.  நோயால் அவதிப்படுபவர்களுக்கு வைத்தியம் செய்தல்
5.  அவசியப்படும்போது சித்து விளையாட்டுகள் செய்தல்.

இதில் புத்தர் மற்றும் சித்தர்களுக்கு உள்ள வேறுபாடு இறைவன் மட்டுமேயாகும்.  புத்தர்  இறைவனை நிராகரித்தார்.


மனவளக்கலையில் உள்ள பயிற்சிக் கூறுகள்: 

1.  எளியமுறை உடற்பயிற்சி ( நோயற்ற வாழ்வு வாழ)
2.  காயகல்ப பயிற்சி (இளமையாக வாழ, மரணத்தை தள்ளிப் போட )
3.  அடிப்படை தவ முறைகள் - ஆக்கினை, துரியம் , சாந்தி ( மன அமைதி)
4.  மேல்நிலை தவ முறைகள் - ஏழு மையங்களில் தவம், கண்ணாடி தவம், தீபப்      பயிற்சி  ( இப்பயிற்சிகளால் ஒருவருக்கு - Telepathy , Clairvoyance , Mind reading,           உடலிலிருந்து வெளியே உலாவுதல் போன்ற அமானுஷ்ய சக்திகள்                      கைகூடும்.  ஆனால் மகரிஷி எந்த இடத்திலும் இதை ஊக்குவிக்கும்படி                  பேசவில்லை.  மனிதர்கள் இவ்வாற்றலை தவறாக பயன்படுத்தக் கூடும்              என அவர்  நினைத்திருக்கலாம் )
 5.  தற்சோதனை  ( கவலை, கோபம், தீய ஆசைகளை ஒழித்து  மனம் தூய்மை          பெற)
6.   இறைநிலை உணர்தல்.

ஒருவர் கடந்த காலத்தை பற்றி சிந்திக்கலாம், பேசலாம், எழுதலாம். நிகழ்காலத்தை பற்றி சிந்திக்கலாம், பேசலாம், எழுதலாம். எதிர்காலத்தை பற்றி சிந்திக்கலாம், பேசலாம், எழுதலாம்.  முக்காலத்தையும் தாண்டி ஒருசிலரால்தான் சிந்திக்க, பேச, எழுத முடியும். அவ்வொரு சிலரில் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியும் ஒருவர்.


LINGESWARAN
08/12/2015

 P.S:  To read my previous articles related to Vethathiri Maharishi, Kindly go through : -

 http://lingeswaran-ise.blogspot.in/2015/07/blog-post_22.html
 http://lingeswaran-ise.blogspot.in/2012/09/brief-life-history-of-vethathiri.html
 http://lingeswaran-ise.blogspot.in/2011/04/blog-post_19.html


Sunday, November 15, 2015

Psychological Disorders - A Real Challenge of 21-st Century . .Human life is a wonder. We the human beings reached this time period (2015) after a very long process, known as Evolution. The process of evolution itself is a miracle and we can compare this process with a huge tree that contains innumerous branches i.e., innumerous species. Up to the point of emergence of human beings from animals, there was no trouble. Animals were just ‘animals’.  When it is humans, the problem begins. Since we are Social animals, as stated by Aristotle, who can’t live as individuals and always, directly or indirectly, depend on the contribution of our ‘fellow human beings’ for our need and survival.


There is several numbers of ‘breaks through’ in the human history. For instance, World War I and II had entirely changed the history i.e. the attention and human efforts have been majorly diverted from the agriculture and other domestic services to the science and technology which time demanded that time. Science is progressing in one direction which claims that it has improved the standard of living of people. But, on the other side, miseries are also on the rise.


Psychological disorders are one among the miseries that ruin the families. In the developing countries like India, still family is the fundamental unit of the society. Medical science has really become so advanced in case of physical illnesses. But this time we have got our problem from totally an unexpected direction. The problem is -different types psychological disorders are very difficult to cure and even to control.  It is a real challenge to the medical scientists, not in the sense that they can’t invent medicines or therapies to address the mental illness. It is a real challenge to the mankind because it needs an integrated approach to manage any kind of mental ailment – clear understanding from the family members, financial condition, support from relatives and work and finally government.  I personally witnessed allopathic medical system is the best and recommended one to maintain any psychological problem under control. Along with the proper medicines, follow up, counseling sessions – One can almost lead a normal life – but which is barely possible practically speaking.  There are wide ranges of mental disorders, to name few, OCD, Personality disorders, ADHD, Schizophrenia, and Hysteria and so on.  In the onset of disorder, I hope, Homeopathy medicine system which originated in Germany might be very useful. But once the disorder comes to the middle or later stages, it is only of little help or can act only as supplementary.  I predict that psychological disorders, in the future, will be highly difficult for the mankind, talking as a whole, to manage effectively – at least for the coming 100 years. Scientists, most of the time, report the causes of mental problems might have it base in genes.  Whatever the reason may be, I can, without any doubt, say that psychological disorders are the real challenge to the human society – ruining from the fundamental level, the family to macro economic and social level. On my part, I provide a solution here. A combination of the following will work out effectively:

1)   Psychiatric drugs or Homeopathy medicines if necessary in the case.
2)   Counseling sessions specific to the disorder
3)   Support from the family members which demands preliminary psychological education. 
4)   Support from the government - well functioning centres for occupational therapy, special attention to psychiatric disorders and similar services.
5)   Coordination of Experts involved – Psychiatric doctors, Psychologists, Social workers and Counselors etc, who are morally accountable for.

If anyone of the above entity is missed, the improvement of the patient will go ineffective and prone to irregular follow up. In such a case, we can’t anticipate any improvement or cure, we will see only maintenance.


LINGESWARAN

16/11/2015Tuesday, October 20, 2015

Dear Friends . . . . Spare a minute . .Dear friends . . !  Look at the present society. We are living in a society which is, day by day, becoming restless and chaotic.  There is no ray of hope in the near future. What happens to the judiciary system which is the ultimate hope of common man ? Needless to say about the politicians !  Administrators and Government servants, a few realized the sufferings of people but they are unable to help the people beyond a certain limit. Others have totally lost themselves in bribery and corruption. In other side, ‘the business world’ is haunting the people everyday with their variety of products and services. Oh! How beautifully they design their advertisements !  But people, without any thinking and actual need,  fall prey to these advertisements and lose grip of their pockets.  I agree various products and commodities are necessary for life. But What about the primary needs and respective need-satisfying products?  Does anyone think about the agriculture? Does anyone think about a labour who works on a meager salary for livelihood?  What do you think about the medical expenses a middle class family incurring?  Now a days, Hospitals became simply money robbery systems in india. Who is responsible? Government or people?   Selling medicines is highly profitable business today.  Business graduates and Scholars would say that the country’s economy is booming. Then, why confusions increase linearly in the society? By the word confusions, I mean for example increasing cost of living, never-increasing  salary of the employees, corruption in the administrative and education system,  cheating in the name education and medical system which once upon a time adored as holy professions and what not.  There are many more untold sufferings of common men in today’s society.Where has the culture gone?  Who is responsible for instilling the culture in young bud’s mind?  Parents spend the whole for earning money. Teachers themselves hail from a society which is already polluted in all respects.  So, there is no use in talking about the teachers who ought to teach the culture.  Variety of mediums such as television and magazines, internet mostly give importance to cinema news.  Cinema takes a major role in spoiling the young minds by showing the  obscene dance movement and dialogues.  I  will tell you a small example from tamilnadu. There is a small  book being published in TN for Rs 5/-. Its name is Time pass vikatan. Please have look at pictures in that book.  Let me give give you another example to point out the level of culture of youngsters whom claimed to be the pillars of india.  Just see how they drive two wheelers or four wheelers in the road.  The people who cross the road may be anyone, a elder man/woman, a child, a patient or uneducated village men.  But I, invariably, notice youngsters don’t have patience to wait  and act impulsively in most of the circumstances. My friends . .  My object is not to blame anyone. I call upon you all to think about the problems of our society and take some strong remedial measures to cure them.  When I repeatedly talk about the society, somebody may feel irritated. But society is nothing but the collection of individuals – you, me, your father,mother, sister ,friend and our neighbours .  Then there is no doubt its our responsibility. Suddenly, we cant do any magic I know. But the correction starts from the individual. 


With Love,
LINGESWARAN.
20/10/2015.


Friday, September 18, 2015
அழகான மனைவி
அன்பான துணைவி 
அமைந்தாலே
பேரின்பமே . .
கவிஞர் வாலியின் இந்த வரிகளில் இன்னொரு அர்த்தம் இருப்பதாக எனக்கு புலப்படுகிறது. புதுப்புது அர்த்தங்கள் திரைபடத்தில் SPB பாடிய அற்புதமான பாடல் இது.
____________________________________________________________________
'தி ஹிந்து' தமிழ் நாளிதழ் மிகச் சிறப்பாக வெளிவருகிறது. முதலில் இதை நான் கவனிக்கவில்லை. பிறகு நன்கு கவனித்தபோது , 'ஹிந்து'வில் ஆனந்த விகடனின் சாயல் தெரிந்தது. தினமும் ஆனந்த விகடன் போல் ஓர் இதழ் வெளிவந்தால்? தமிழ் ஹிந்துவின் வருகைக்கு பிறகு ஆனந்த விகடனின் சர்குலேஷன் ஓரளவுக்காவது அடி வாங்கியிருக்கும். மாறிக்கொண்டே வரும் பிசினஸ் உலகில் இதெல்லாம் சகஜமான நிகழ்வுகள். நிச்சயமாக விகடனுக்கு இது எதிர்பாராத சவால்.
ஒருநாள் தற்செயலாகத்தான் தெரிந்துகொண்டேன் , 'தி ஹிந்துவின்' ஆசிரியர் திரு.அசோகன் என்று. இவர் ஆனந்தவிகடனில் பலவருடங்கள் ஆசிரியராக(Editor ) பணிபுரிந்தவர்.
____________________________________________________________________
P.LINGESWARAN
18/09/2015

Friday, September 11, 2015

சமீபத்தில் நான் வாங்கிய புத்தகங்கள் . . (மதுரை புத்தக கண்காட்சி - 2015)..
மதுரை புத்தக கண்காட்சி பத்தாவது வருடமாக (28/08/15 to 07/09/15) இந்த ஆண்டு 2015 நடைபெற்றது.  முதல் வருடம் 2004 -ம் ஆண்டோ, 2005-ம் ஆண்டோ மிகுந்த ஆர்வத்துடன் சென்று சிறுபிள்ளைதனமான புத்தகங்கள் ( அக்குபஞ்சர் மூலம் எப்படி எல்லா நோய்களையும் சரிசெய்வது?,  ஒரே மாதத்தில் C , C + -ல் கலக்குவது எப்படி?,  உங்கள் லக்னத்தின் வாழ்நாள் பலன்கள், Speak better English ...)  நிறைய வாங்கி வந்தேன். 

பத்து  வருடங்கள் கழித்து அதே புத்தக கண்காட்சி.  இப்போது வேகம் குறைந்திருந்து. புத்தக தலைப்பை பார்த்தவுடன் சட்டென பாய்ந்து வாங்கும் ஆர்வம் குறைந்து, நிதானம் வந்திருந்தது.  இந்தமுறை நான் வாங்கிய புத்தகங்கள் அனைத்தும் ஆச்சரியமான தற்செயலாக, மருத்துவம்/உளவியல்/வாழ்வியல் பற்றியே அமைந்துவிட்டது. இப்போது ஒரு  புத்தகத்தை பார்த்த ஷணத்தில், அந்த புத்தகத்தின் விலை, உள்ளடக்கம் ஆகிவயற்றை பற்றி என்னால் சொல்ல முடியும்.  ஏனெனில், நம் சமூகத்தில் எல்லாப் பொருட்களைப் போலவும் புத்தகங்களும்  எப்போதோ Commercial  ஆக்கப்பட்டு விட்டன.  ஒரு டூபான்ஸ் புஸ்தகத்தை கண்டிபிடிப்பது மிக எளிதான காரியம் : -

1.  தலைப்பு  வசீகரமாக இருக்கும்.  (  செல்வதை  அள்ளித்  தரும் பல்வேறு யோகா முத்திரைகள், ப்ளீஸ் இந்த புத்தகத்த வாங்காதிங்க  .... இது மாதிரி தலைப்புகள்)

2.  நூலின் தாள்கள் நல்ல தரமானதாக ( Quality ) இருக்கும். உள்ளே சரக்கு இருக்காது.

3. விலை உத்தேசமாக 300 - 500 ஆக இருக்கும், ஆங்கில புத்தகங்கள் எனில் 500 க்கு மேல். 

நான் வாங்கிய முத்துக்களின் பட்டியல் :-

1.  ஆயுர்வேத உபதேசம்  பாகம் 1, 2  ( தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் வெளியீடு )
2.  வாழ்வின் அடிப்படை  ( மதுரை இயற்கை நல்வாழ்வு சங்கம்,. கந்தசாமி முதலியார், 1958)
3.  பிரமச்சர்யம் ( மதுரை இயற்கை நல்வாழ்வு சங்கம்,. மகரிஷி. அருணாசலம் அவர்கள்)
4.  அதிக ரத்த அழுத்தம் ( மதுரை இயற்கை நல்வாழ்வு சங்கம்,. கந்தசாமி முதலியார், 1958)
5.  மனநல மருத்துவர் இல்லாத இடத்தில் ( Dr. விக்ரம் படேல், புறம் வெளியீடு, புத்தாநத்தம்)
6.  Time Management ( 30/-)
7.  வேலையை காதலி ( தி ஹிந்து பப்ளிகேஷன், திரு.கார்த்திகேயன்) 
8.  Story of Life  - வேதாத்திரி மகரிஷி .
9.  One small step can change your life - Kaizen approach (Dr. Robert maurer )
10. முழுமை அறிவியல் உதயம்.
11. CIMS Book (Details of English Medicine)

இந்த புஸ்தகங்களில் எதுவுமே அதிகபட்சம் ரூ. 200-ஐ தாண்டவில்லை. மொத்த விலை 1150 / -.


ப.லிங்கேஸ்வரன்.
11/09/2015.

Tuesday, August 18, 2015

இசைஞானி இளையராஜா - உயிரைத் தொடும் இசை . .டெக்னாலஜியை அதிகம் நம்பாமல், இசைக் கருவிகளையும் உள்ளுணர்வையும் பயன்படுத்தி இசை அமைப்பாளர்கள் இசையமைக்க வேண்டும் என் இசைஞானி இளையராஜா அண்மை விழா ஒன்றில் புது இசை அமைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.  அனிருத், விஜய்ஆண்டனி, தேவி ஸ்ரீப்ரசாத், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்சங்கர்ராஜா போன்றவர்களெல்லாம் எதாவது முயற்சி செய்கிறார்களா என்றே தெரியவில்லை. இப்போதுள்ள இளைஞர்களுக்கு  மேற்குறிப்பிட்ட இசை அமைப்பாளர்களின் இசையே தேவகானம் என்பது எனக்கு தெரியும்.  இருந்தபோதிலும், அவர்கள் இளையராஜாவின் இசையை ஒரு தடவையாவது கேட்க வேண்டும். 


நான் பொறியியலில் சேர்ந்தபோது எனக்கு வயது  18.  ஹார்மோன்களின் உச்சகட்டம். அங்கிருந்த பலதரப்பட்ட நண்பர்களின்  பரிச்சயத்தால் இளையராஜா எனக்கு மெல்ல மெல்ல அறிமுகமானார்.  ஒரு புது உலகில் பிரவேசிக்க துவங்கினேன்.  சிக்மண்ட் பிராய்டு என்ற உளவியல் மேதை '  13 வ்முதல் 23 வயது வரை (உத்தேசமாக) ஒரு பெண் அல்லது ஆணின் கவனம் முழுவதும் எதிர்பாலினரின் மேலேயே இருக்கும் '  என்கிறார்.  இதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல.  அந்த கவனத்திற்கு (காதல்?)  இளையராஜாவின் இசை மிகப் பொருத்தமான விருந்தாக அமைந்தது.  நான், நண்பர்கள் மாரியப்பன், கணேஷ், கார்த்திகேயன்  ஆகிய நால்வரும்  இளையராஜாவின் இசையை பலகோணங்களில்  குடலாப்ரேஷன்  செய்வோம். இதில் கார்த்திகேயனுக்கும் மற்ற நாங்கள் மூவருக்கும் திடீரென ஒரு விவாதம் வெடிக்கும். அது  இளையராஜாவா , ஏ.ஆர்.ரஹ்மானா?  என்பதே.  முடிவு உங்களுக்கே தெரியும்.  நாங்கள் ரசித்த விவாதித்த படித்த, இளையராஜாவின் இசைத் துணுக்குகளுக்கும், பாடல் வரிகளுக்கும் அளவே இல்லை. 


என் தந்தை 2012-ல் இறந்து விட்டார். தாங்க முடியாத சோகத்தில் என்ன செய்வதென்றே தெரியவில்லை.  வேலை முடிந்து வருவேன், சிறிது நேரம் ஓய்வு. பின் வெளியே சென்று ஒரு டீ குடித்துவிட்டு இன்டர்நெட் கடலில் மூழ்கி விடுவேன். ஆனால் இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் கேட்டு சலித்துவிட்டது போன்ற  ஒரு உணர்வு. ஏற்கனவே நிறைய பாடல்கள் மனப் பாடமாகி விட்டன.  அப்போது திடீரென யூ டியுபில்  இ.ராஜாவின் பின்னனி இசைக் கோர்வைகள் சில கிடைத்தன. என்ன !  அவற்றை கேட்க கேட்க இதயமே உருகிவிடும் போல் இருந்தது.  சில நாட்கள் முன் நானும், என் சிறிய தாயார் மகள் சரண்யாவும் பேசிக்கொண்டிருந்த  போது அவள்,  ' இளையராஜாவின் பாடல்கள் நன்றாக உள்ளன, அதற்காக கண்ணிலிருந்து கண்ணீர் வருமா? என் நகைப்புடன் கேட்டாள்.'   கண்டிப்பாக வரும். இன்றைய தலைமுறை இளைஞர்கள் மனதில் நாட்டுப் புறத்தான் பிம்பமாக பதிந்திருக்கும் இளையராஜாவின் பின்னனி இசைக் கோர்வைகள் சிலவற்றை கீழே தந்துள்ளேன்.  இவற்றை கேட்பதற்கு இரண்டு  நிபந்தனைகள்.  தனிமையில்  கேட்க வேண்டும்,  ஹெட் போனில் மட்டும் கேட்க வேண்டும்.  சில இசை, நீங்கள் தனியாக நடக்கும்போது உடல் திடீரென லேசாகி, யாரோ ஒருவர் உங்கள் கரங்களை பிடித்து தூக்கிக் கொண்டு வானில் பறப்பது போல்  இருக்கும். சில இசை அதிரடியாக.

1.    https://www.youtube.com/watch?v=ylyIBeGm7sk

2.   https://www.youtube.com/watch?v=K7w3rdbJ3Ok

3.   https://www.youtube.com/watch?v=3sXJdEfX4uw

4.  https://www.youtube.com/watch?v=cD0ngEQ_W8E

5.  https://www.youtube.com/watch?v=kWPO0J2NWGw

6.  https://www.youtube.com/watch?v=X5q57HybskE

7.  https://www.youtube.com/watch?v=dmAqcdyY14s


P.LINGESWARAN,

Tuesday, August 4, 2015

நோய்களிலிருந்து விடுபடுவது எப்படி . . . ?உடல் நோய், மன நோய் எதுவானாலும் குணமாதல் என்பது ஒருவரின் மனதைப் பொறுத்தே இருக்கிறது.  மனத் தூய்மை இல்லையெனில் நோய் குணமானபின் மீண்டும் வரும்.  எல்லோருடைய மனதிலும் களங்கங்கள், அழுக்குகள் உள்ளன.  மனதில் களங்கங்கள் எப்படி சேர்கின்றன?   அடிக்கடி பொய் சொல்லுதல், தேவைக்கு மேல் பொருள் சேர்த்தல்,  கோபம்,  எப்போதும் கற்பனை,  பிறர் கெட்டுபோக வேண்டுமென எண்ணுதல், கட்டுகடங்காத காம எண்ணம் , வெறுப்பு, ஒருவர் மனதை புண்படுத்துதல் இதுபோன்ற பல முறைமாறிய மனநிலைகளால் மனம் கெட்டுப்  போகிறது.


மனதில் எந்த அளவு மாசு சேர்ந்துள்ளதோ, அந்த  அளவு உடலில் விஷம் சேர்கிறது, உடல் காந்த அலைகள் தூய்மை குறைகிறது.  இதை சரி செய்யாமல் எந்த உடல்-மன நோயையையும் குணமாக்க முடியாது.  மனத் தூய்மை இன்மையின் வீரியத்தை பொறுத்து - தாக்கத்தை பொறுத்து , ஹோமியோபதி மருத்துவம்  மூன்றாக கூறுகிறது.

1. சோரா. ( இது எல்லோருக்கும் உண்டு)
2. சைகொசிஸ். ( ஓர் எல்லை மீறிய சோரா  அதாவது மன நச்சுக்கள்)
3. சிபிளிஸ்  (  மனம் முற்றிலும் களங்கமுற்ற நிலை)

எனவே எந்த நாட்பட்ட நோயிலிருந்து விடுபட விரும்புபவர்கள் - மனதை தூய்மை செய்ய கண்டிப்பாக முயலவேண்டும்.

_______________________________________________

Contamination of the human mind causes any disease whether it is physical or psychological. Unless the mind is freed from impurities such as frequent lying, hurting others mind, disgust, accumulating money than needed, unrealistic expectations, immoral sexual activities etc, one cant completely recover from disease. Disease will haunt one again and again when his/her mind is contaminated.

Degrading thoughts will modulate the magnetic waves of human body negatively. So, in course of time, it will become a shelter of diseases. According to the level or degree of contamination, Homeopathy system of medicine classifies the toxins of mind into three increasing types : - 

1. Psora
2. Sycosis and 
3. Syphilis.

Hence, a sufferer must try to be a man of virtues, must get rid of bad thoughts, must cultivate good thoughts in order to escape from the diseases in addition to the medicines. 


P.LINGESWARAN

Wednesday, July 29, 2015

பேரதிர்ச்சி தந்த அப்துல் கலாம் அவர்கள் மறைவு . .


ஒரு சிலரின் மரணம்தான் பேரிடியாக மனதில் இறங்கும். அதற்கு காரணம், 
உணர்வுப்பூர்வமாக அவர்களுடன் நம் மனம் ஒன்றி விடுவதுதான்.  அப்படிப்பட்ட ஒரு நெருக்கமான உறவு எனக்கும் , அப்துல் கலாம் அவர்களுக்கும் - அக்னி சிறகுகள் - புத்தகம் வாயிலாக இருந்தது.  நானும் என் மனைவியும் சண்டையிட்டுக்கொண்டு பேசாமல் இருந்த ஒரு நாள்  மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.  அன்று  இரவு உணவை தனியாக அமர்ந்துகொண்டு, அக்னி சிறகுகள் நூலை பொறுமையாக படித்துக்கொண்டே சாப்பிட்டேன். பழைய நினைவுகள் ஓடின.  கல்லூரி விடுதியில் (1999 - 2003) தங்கிப் படிக்கும்போது இதே புத்தகத்தை படித்திருந்தேன்.  பெரும்பாலும்  தொழில்நுட்ப விஷயங்களையே கலாம் விவரித்திருந்தார்.  Aerodynamics, Gas  dynamics  போன்ற வார்த்தைகள் பொறியியல் சம்பந்தப் பட்டவையாக இருந்தாலும், எனக்கு அதில் பெரிய ஆர்வமும், புரிதலும் இல்லாதால் மனதில் படியவில்லை. அப்துல் கலாமின்  வாழ்க்கை குறித்த தத்தவார்த்த சிந்தனை அப்போதே என் மனதை கவர்ந்தது. அப்புத்தகத்தில்  படித்த சில வார்த்தைகளை உந்துதலாக கொண்டு  June 13 -ம் தேதி ஒரு சிறிய கட்டுரை எழுதினேன். ( See  http://lingeswaran-ise.blogspot.in/2015/06/blog-post.html )ஒரு மனிதன் இப்படித்தான் வாழ்ந்து மரிக்க வேண்டும் என்பதற்கு அப்துல் கலாம் அவர்கள் ஒரு மிகச்சிறந்த சான்று ஆவார்.  இதன் பொருள், எல்லோரும் தக்கி முக்கி முயன்று ஜனாதிபதி ஆகவேண்டும் என்பதல்ல.  கடுமையான உழைப்பு, ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை, சுயநலமின்மை, எளிமை, கடைசி மூச்சுவரை  கடமை ஆற்றிய வியத்தகு குணம் இவையே அவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை. மனிதனாகப்  பிறந்த ஒருவனுக்கு இதற்குமேல் என்ன வேண்டும்? கலாம் அவர்கள் ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டிருந்தார். அது நாம் வணங்கும் கடவுளர் உருவங்களல்ல.  அழகான இந்த பூவுலகம்,  வாரி இறைத்தது  போன்ற கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் நிரம்பிய இப் பிரபஞ்சம் இவற்றையெல்லாம் கட்டிக்காக்கும் சர்வவல்லமை பொருந்திய ஆண்டவனையே அவர் குறிப்பிடுகிறார்.  நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும், திருப்புமுனைகளும் ஆண்டவனின் அருளாலேதான் நடக்கின்றன என அப்துல் கலாம் தீர்க்கமாக நம்பினார்.  இந்த உறுதியான நம்பிக்கையே ஒவ்வொரு  தோல்வியிலிருந்தும் அவரை மீண்டு எழும் ஆற்றலை அளித்தன எனலாம்.  மெய்ஞானமும், விஞ்ஞானமும் முரண்பட்டதல்ல என்று அக்னி சிறகுகள் நூலில் ஓரிடத்தில் சுட்டிகாடுகிறார்.  நிர்வாக அறிவும், தனிமனித உளவியலும் நன்கறிந்தவர்.  அக்னி சிறகுகள் புத்தகத்தில் ஓரிடத்தில் - மானஜ்மென்ட்  துறையில்  பிரபலமான தியரியான, Maslow theory of needs - ஐ குறிப்பிடுகிறார்.  நான் அப்துல் கலாம்  அவர்களை நிச்சயம் ஒரு சிறந்த தலைவர் ( Leader ) என்றே கூறுவேன்.  ஒரு சிறந்த தலைவருக்குரிய பண்புகளான ( Habits of Effective Leaders ) : - குழுவாக பணியாற்றும் திறன் ( Team Spirit ),  தன்னுடன் பணிபுரிபவர்களை ஊக்கப் படுத்தும் பண்பு ( Motivating the subordinates ), யாரிடம் எந்த வேலையை ஒப்படைத்தால் அவ்வேலை சிறப்பாக முடியுமோ - அவர்களிடம் ஒப்படைத்தல் ( Delegation of authority ),  புண்படுத்தாமல் நாசூக்காக வேலை வாங்குதல்( Getting things done tactfully ),  குறிக்கோளை நோக்கி பிசகாமல் செல்லுதல் ( MBO ),  Synergizing போன்ற தலைமைப் பண்புகளை ஒருங்கே பெற்றவர் அப்துல் கலாம் அவர்கள்.
"எனது தாத்தா , எனது தந்தை , அப்துல் கலாமாகிய  நான் இவர்களின் ரத்தம் என்னோடு முடிந்துவிடலாம். ஆனால் ஆண்டவனின் கருணைக்கு என்றுமே முடிவில்லை. அது சாஸ்வதமானது. "  என உருக்கமாக அக்னிசிறகுகள் நூலை அப்துல் கலாம்  முடிக்கிறார். வாராது வந்த மாமணியே! ஐயா!  இறைவன் எனும் எல்லையற்ற பெருங்கடலில் அமைதியாக இளைப்பாறுங்கள்.


ப.லிங்கேஸ்வரன். 


Wednesday, July 22, 2015

காயகல்ப பயிற்சி - விந்து கட்டும் கலை . .

அறிமுகம் 

 எந்த ஒன்றை அறிந்தால், எல்லா ரகசியங்களையும் தெரிந்து கொள்ளலாமோ  அதுதான் கடவுள். கடவுளைப் பற்றி கூறப்படும் புகழ்பெற்ற வாக்கியம் இது.  அதேபோல், எந்த ஒரு கலையை அறிந்திராவிட்டால் - எந்த ஒரு சிகிச்சை முறையும், எந்த ஒரு யோகமும், எந்த ஒரு உடற்பயிற்சியும், எந்த ஒரு உணவு முறையும் - முழுப்பலன்  தராதோ அக்கலைதான் விந்து கட்டும் கலையாகும்.  சித்தர்கள் இதை காயகற்ப யோகம், காயகற்ப பயிற்சி, சுக்கில ஸ்தம்பனம் என பல பெயர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

CLICK THE FOLLOWING LINK

https://lingeswaran-ise.blogspot.com/2018/06/1.html


Saturday, July 11, 2015

பிறவிப்பிணி . .அப்பா !  நான்கேட்  டருள்புரிதல் வேண்டும் . .
தப்பேது நான் செயினும் பொறுத்தல் வேண்டும் . .
முப்போதும் உன்சொல் மறவாநிலை வேண்டும் . .
இப் பிறவிப்பிணி நின்னருளால் தீரவேண்டும் . . !


ப.லிங்கேஸ்வரன் 

Saturday, July 4, 2015

பாபநாசம் - கமல் எனும் மகா நடிகனின் மாயாஜாலம். .
சினிமா பார்ப்பதையே ஓர் ஆனந்த அனுபவமாக மாற்றிவிடும் திறன் மிகச்சில படைப்புகளுக்கு தான் உண்டு.  03/07/2015 அன்று நான் பார்த்த பாபநாசம் திரைப்படமும் அப்படி ஓர் அனுபவத்தை தந்தது. கமல் எனும் மகத்தான நடிகனின் நடிப்பில் அப்படியே பிரமித்துவிட்டேன். தன்னை நோக்கி வரும் ஒவ்வொரு வரும் பந்தையும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசும் கிரிக்கெட் வீரனை போல, காட்சிக்கு காட்சி கமல் அசத்துகிறார். தியேட்டரில் விசில் பறக்கிறது.  கடைசி சில காட்சிகளில், இருந்த ஒரு ஆதாரமும் கிடைக்காமல் போலீஸ்(ஐ.ஜி) திகைத்து நிற்கும்போது - தலையை சாய்த்து கமல் ஒரு பார்வை  பார்க்கிறாரே - ஹீரோயிசம், உலகத்தரம், பாத்திரத்தின் உணர்வுகள் என அத்தனை வார்த்தைகளையும் ஒரே பார்வையில் அடக்கி விடுகிறார்.  கிளைமாக்ஸ் சீனில், வழக்கம்போல் 'கமல் கிளிஷே' எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. கண்ணீரும், உணர்ச்சியும் பொங்க அவர் கைகூப்பி பேசும்போது - நடிப்புக் கலை மீது தீராக்காதல் கொண்ட ஒரு மகா கலைஞனால்  மட்டுமே அப்படி ஒரு மாஜிக்கை நிகழ்த்த முடியும்.


படத்தின் வெற்றியில் மிகப் பெரிய பங்கு  இயக்குனர்  Jeethu Joseph- க்கு தான்.  He should be a Clever director. படத்தில் அத்தனை கதாபாத்திரங்களும் மிக இயல்பாக , தேவையான அளவு கச்சிதமான நடிப்பை தந்திருக்கின்றனர் (இளவரசு, கலாபவன் மணி, ஆஷா சரத், இன்ஸ்பெக்டர்). அதிலும் ஆஷா சரத்தின் கூரிய கண்களோடு, அவரது  அழகும் நிச்சயமாக ரசிகர்களை கவரும் என்று நினைக்கிறேன். அவருக்கு கணவராக நடித்தவர் யார்?  மிகச் சரளமாக நடித்திருக்கிறார்.  மலையாளி என நினைத்திருந்தேன். அவர் (ஆனந்த் மகாதேவ்) ஹிந்திக்காரர் என்று என் மனைவி கூறினாள். கௌதமியின் நடிப்பிலும் குரலிலும் அசதிதான்  தெரிகிறது.


கமல் மட்டுமல்லாமல் அத்தனை கலைஞர்களும் திருநெல்வேலி வட்டார பாஷையை அட்சர சுத்தமாக பேசியுள்ளார்கள். எனக்கு மிகத்தெளிவாக நெல்லை பாஷை புரிந்தது.   REC-ல் படித்ததனால் எனக்கு தமிழ்நாட்டின் எல்லா லோக்கல் ஸ்லாங்குகளிலும் பரிச்சயம் உண்டு.  'டக்குனா சல்லிப்பய.....',  'வீட்ல கரச்சல குடுக்ராவ.....',  ' நீ என்ன அப்படி நிக்க....' - இப்படி படம் முழுக்க.  திருநெல்வேலி வட்டார வழக்கு, மலையாள மொழியின் இழுவை உச்சரிப்பும் மலையாள வார்த்தைகளும் கலந்த தமிழ் என்றே யூகிக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் சமூக அக்கறை வசனங்களில் அங்கங்கே தெறிக்கிறது. பாபநாசம் - மனதை மயக்கிய ஓர் இனிய அனுபவம்.ப.லிங்கேஸ்வரன்.


Tuesday, June 23, 2015

கலவி . .

உடைகள் . .
தடைகள் . .
கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Monday, June 15, 2015

எந்த பொறியியல் பிரிவை படிப்பது?


தெருவுக்கு தெரு கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்பட்டு கல்விச்சேவை செய்து வருகின்றன. எந்த படிப்பானாலும் அதில் சேர, மக்கள் கூட்டமும் அம்முகிறது. 1980-90 - களில் பொறியியல், மருத்துவம் போன்றவற்றிற்கு மிகுந்த மதிப்பு இருந்தது. தற்போது இப்படிப்புகள் குப்பையாக்கப்பட்டு விற்கப்படுகின்றன. மக்களும் விழித்தபாடில்லை. பொதுவாக, பெற்றோரானாலும் பிள்ளைகலானாலும் - ஒரு படிப்பில் சேரும்முன் - அதற்கு தம்மிடம் அடிப்படையாக ஒரு ஆர்வம் உள்ளதா, ஈடுபாடு  (Interest and Involvement) உள்ளதா என ஆராய்வதில்லை.  என் நண்பன் அதை படிக்க போகிறான், அவர் சொன்னார் இவர் சொன்னார், கவர்ச்சிகரமான விளம்பரங்கள் என குருட்டாம்போக்கில் தூண்டப்பட்டே ஒரு பாடப்பிரிவில் சேர்கின்றனர். குளறுபடிகளை கட்டுப்படுத்த வேண்டிய அரசாங்கம் என்ன செய்கிறது?அப்துல் கலாம் அவர்கள் , ஒரு பொறியியல் பிரிவை ( அல்லது ஏதாவது ஒரு பாடபபிரிவை) எவ்வாறு தேர்வு செய்வது என தன் ' அக்னி சிறகுகள்' நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். " எந்த ஒரு பிரிவை தேர்வு செய்யும் முன் அது தன் உள்ளார்ந்த பண்புகளுக்கும், இலட்சியங்களுக்கும் (Inherent traits and Objectives in life) ஒத்து வருமா என உறுதி செய்துகொள்ள வேண்டும். இதை இன்று பொறியியல் படிக்க விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புறேன் "  என்று தெளிவாக அறிவுறுத்துகிறார்.


இன்று ஒரு படிப்பில் மாணவர்கள் (பின்புலத்தில் பெற்றோர்கள்) அடித்து பிடித்து சேர்வதற்கு முக்கிய காரணம் - படித்து முடித்தவுடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதோ, நாட்டை தூக்கி நிறுத்த வேண்டும் என்பதோ அல்ல. படிப்பை முடித்தவுடன் நல்ல வருமானமும், அதன் மூலம் சொகுசான வாழ்க்கையும் அடையலாம் என்பதே.  ஆனால், உண்மையோ மிக எளிதானது.  ஒருவர் தன் உள்ளார்ந்த அடிப்படை பண்பிற்கேற்றவாறு ஒரு பாடத்தை படிக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அவர் முழு ஈடுபாடு, ஆர்வம் மற்றும் உழைப்புடன் செயல்படுவார். தானாகவே அவர் மனதில், உடலில் உறைந்திருக்கும் முழுத் திறமையும் வெளிப்படும். இந்த சூழ்நிலையில், வேலை வாய்ப்புக்கும், வருமானத்திற்கும் என்ன பஞ்சம்?  தான் தெரிவு செய்த துறையில் மிக உயர்ந்த நிலையை படிப்படியாக அடைய முடியும் அல்லவா? மாறாக, வெளிப்பகட்டுக்கும் வருமானத்திற்கும் ஆசைப்பட்டு ஒருவர் தனக்கு சுவாரஸ்யமே  இல்லாத பாடத்தை படிக்கிறார் என்றார் அவர் நிச்சயமாக மழுங்கிய ஆற்றலையே (Inefficiency) வெளிபடுத்துவார்.

ப.லிங்கேஸ்வரன்.
13/06/2015.

Wednesday, March 18, 2015

காதல் . .உளறல்
ரகஸியம் 
காமம்
இசை 
நிலா . . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Wednesday, March 4, 2015

லஞ்சம் வாங்குவதில் உள்ள மனோதர்மம். .
அரசாங்க உத்தியோகத்திற்கு இப்போதெல்லாம் பதினைந்து முதல் இருபது வரை லஞ்சம் கேட்கிறார்களாம். பத்து ப்தினைந்து வருடங்களுக்கு முன்பு வரை ஐந்து லட்சமே அதிகப்ட்சம். அதற்கு முன்பு ஒன்றோ இரண்டோதான். இதில் மறைந்துள்ள நீதி, விலைவாசி உயர்வு. லஞ்சம் வாங்குவதே தப்பு. அதில் என்னய்யா விலைவாசி உயர்வு?


கணிதத்தில் Fractal geometry என்கிற ஒரு பிரிவு இருக்கிறது. தமிழில் ' ஒழுங்கின்மையில் ஓர் ஒழுங்கு' எனலாம், Regularities in irregularity. கன்னாபின்னாவென அசுரத்தனமாக வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை உன்னிிய்பாக கவனித்தால் அதில் ஒழுங்கு தென்படுகிறதாம். நீண்ட கடற்கரையை உயரமான இடத்திலிருந்து பார்த்தால் Zig Zag வடிவங்களாக தெரியும். இந்த Zig Zag வடிவங்களுள் ஓர் Order, Repetition of irregularity உள்ளது. இக்கருத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு Fractals-ல் பல ஆராய்ச்சிகள் செய்கிறார்கள். 


லஞ்சம் வாங்குவதில் இரண்டு வகையினர் உள்ளனர். ஒன்று, கறார் ஆசாமிகள். இவர்கள் இம்மியளவும் லஞ்சத் தொகையை குறைக்க மாட்டார்கள். காசை நகர்ததினால்தான் வேலை நடக்கும். இரண்டாம் பிரிவின்ர், சற்று ஆறுதல் அளிப்பவர்கள். Demand பண்ண மாட்டார்கள், flexibility உள்ளவர்கள். ஆனாலும் லஞ்சம் கொடுத்தால்தான் காரியம் நடக்கும். கொஞ்சம் கூடக்குறைய தந்தாலும் அட்ஜஸ்ட் செய்துக்கொண்டு, காரியத்தை முடித்துக் கொடுப்பார்கள். இவர்களின் மனோதர்மம், பிறரை ரொம்பவும் இம்சிக்கக் கூடாது-லஞ்சமும் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதே. இந்த இரண்டாம் வகையினரே Fractals பிரிவை சேர்ந்தவ்ர்கள்.

P.Lingeswaran,
Assistant Professor of Mechanical Engineering.

Sunday, March 1, 2015

ஆர்சனிக் எனும் அழகி. .விசித்திரமாக காட்சியளிக்கும் வேதியியல் அமைப்பை கொண்ட இவ்வஸ்துவின் பெயர் ஆர்சனிக். நாக்கில் ஒரு துளி பட்டால் சில நிமிடங்களில் ஆள் காலி. ஏறக்குறைய அனைத்து தனிம கனிம உலோகங்களிலும், மனிதன் உட்பட சகல ஜீவராசிகளின் உடல்களில் ஆர்சனிக் குறிப்பிட்ட அளவு கலந்தே இருக்கிறது. Arsenic content in the drinking உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது. WHO நிர்ணயித்த ஆர்சனிக் லிமிட் 10 ppb.. இதற்கு மேல் ஆர்சனிக் கண்டென்ட் இருந்தால் காலப்போக்கில் புற்றுநோய், கடுமையான தோல் வியாதிகள் போன்றவற்றை உண்டாகும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். உண்மை இப்படியிருக்க,  ஆர்சனிக் நவீன மருத்துவத்தில் புற்றுநோயை குணமாக்கவும் பயன்படுகிறது. 


ஹோமியோபதி வைத்தியத்தில் ஆர்சனிக் ஓர் சர்வரோக நிவாரணியாகும். ஆனால், ஆங்கில மருத்துவத்தில் ஆர்சனிக் பயன்படும் விதமும், ஹோமியோபதியில் பயன்படும் விதமும் முற்றிலும் வேறுபட்டவை. எப்டியெனில், ஆர்சனிக் தனிமம் சிறிது எடுத்துக் கொண்டு, ஆல்கஹால் நிரம்பிய சிறு Bottle ஒன்றில் அதை கலந்து நன்கு பலமுறை குலுக்குகிறார்கள். பின்,அதில் ஒரே ஒரு சொட்டு எடுத்து மற்றொரு ஆல்கஹால் பாட்டிலில் சேர்த்து அதை பலமுறை நன்கு குலுக்கிறார்கள். பின் மீண்டும் அதிலிருந்து ஒரு சொட்டு எடுத்து மற்றொரு ஆல்கஹால் பாட்டிலில் சேர்த்து பலமுறை குலுக்குகிறார்கள். இதேபோல்,பத்து, நூறு, ஏன் ஆயிரம் தடவை கூட செய்கிறார்கள். கடைசி முறை அதாவது நூறு அல்லது ஆயிரம் முறை குலுக்கிய பிறகு அந்த பாட்டிலில் ஆர்சனிக் இருக்குமா? யோசித்து பாருங்கள். எந்த துல்லியமான மைக்ராஸ்கோபிலும் பிடிபடாத அளவு, நுண்ணிய அள்வில் ஆர்சனிக் அணுக்கள், ஆல்கஹால் அணுக்களுடன் கலந்திருக்கும். இதை ஹோமியோபதியில் வீரியப்படுத்துதல்(Potency) என்கிறார்கள். பத்து, நூறு ஆயிரம் என வீரியபபடுத்துதல் அதிகமாக அதிகமாக ஆர்சனிக் விஷத்தன்மை குறைந்துகொண்டே வருகிறது. அதே நேரம், அதன் அணுக்களில் அடங்கியுள்ள காந்த சக்தி(குவார்க், போட்டான், கிளூவான்?) வெளிப்பட துவங்குகிறது.

எப்ப்டி சாதாரண ஆர்சனிக் உடலின் செல்களை எல்லாம் தாக்கி மரணத்தை சம்பவிக்கிறதோ, வீரியப்படுத்தப்பட்ட ஆர்சனிக் இதே ரீதியில் காந்த அலைகளாக எல்லா செல்களிலும் உள்ள கோளாறுகளை சரிசெய்கிறது. வயிற்றுப்புண், வாய்ப்புண், சளி, காய்ச்சல், உடல் வலி, மன எரிச்சல், தூக்கமின்மை, அஜீரணம் என சகல ரோகஙகளையும் குணப்படுத்தும் மாயாஜாலம் ஹோமியோவில் மட்டுமே நிகழ்கிறது. பக்க விளைவுகள் என்பதே இல்லை. 

முதல் உலகப்போரில், அமெரிக்கா ஆர்சனிக்கை ஒரு உயிரியல்-ஆயுதமாக பயன்படுத்தி இருக்கிறது. போர்ககளத்தில் ஆர்சனிக் பவுடரை தூவி - சுவாசக்குழாய்களில் எரிச்சல், கண் பார்வை மங்குதல் போன்றவற்றை ஏற்படுத்தி  எதிரிகளை திணறடித்து இருக்கின்றனர். ஆர்சனிக் (Arsenic coating) கோட்டிங் செய்யப்பட்ட துப்பாக்கி குண்டுகளால் சுட்டால் சாவு நிச்சயம். பூச்சிக்கொல்லிகள், பெப்சி கோக் போன்றவற்றில் கூட ஆர்சனிக் கலந்திருக்கிறது என்கிறார்கள்.

P.Lingeswaran
Assistant Professor of Mechanical Engineering.


Friday, February 20, 2015

காதலின் சுவாரஸ்யம். .திருமணம் 
காதலின் 
அத்தனை 
சுவாரஸ்யங்களையும் 
ஒன்றுமில்லாமல் 
ஆக்கி விடுகிறது. . . . !
கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...