Saturday, December 13, 2014

Hooke's Law -ம், நோய்களும்...

மூன்று கோடுகள் கொண்ட இந்த ஓவியம் அறிவியலின் முன்னேறிய பல இயல்களில் நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ பயன்படுகிறது. இயற்பியல், உலோகவியலில் இது Hooke's Law எனப்படுகிறது. ஓர் ஆப்ஜெக்ட் அல்லது உலோகம், விசை அல்லது அழுத்தத்திற்கு தொடர்ந்து உட்படுத்தபடும்போது, அதில் விரிவோ (Extension), உருமாற்றமோ(Distortion of the shape) நிகழ்கிறது. விசையின் குறிப்பிட்ட ஓர் அளவு வரை இவ்வுருமாற்றம் - விசைக்கு - நேர் விகிதத்தில் இருக்கும். அவ்வெல்லைக்குள் விசையை நீக்கிவிட்டால் உலோகம் தன் பழைய நிலைக்கு (Recovery to its' original shape) மீண்டு விடும். ஆனால் குறிப்பிட்ட அந்த எல்லையை தாண்டியும் அழுத்தம் கொடுக்கப்பட்டால் பொருளின் சிதைவு அப்படியே நிலைத்து விடும்.
துல்லியமாக இதேபோல் (Analogy to this), மனித உடலும் அழுத்தங்களை தாங்கும் எல்லையை பெற்றுள்ளது. உடலுக்கும் உள்ளத்திற்கும் உண்டாகும் நோவுகளை மனித உடல் - குறிப்பிட்ட ஓர் எல்லை வரை தாங்கிக்கொண்டு - தன் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் திறனை உள்ளார்ந்த பண்பாக கொண்டுள்ளது. அதற்கு மேலும் உடலுக்கோ, மனதிற்கோ அழுத்தம் கொடுக்கப்பட்டால் அவை வடுக்களாக நோய்களை உடலில் விட்டுச் செல்கின்றன. இங்கு, அழுத்தம் என்ற சொல்லின் அர்த்தத்தை சிந்திக்கவும்.

ப.லிங்கேஸ்வரன்.
13/12/2014

Wednesday, November 5, 2014

வறட்டீ போடுவது எப்படி. . .
அனேக தமிழ் குடும்பங்களில் பால் இல்லாத நேரங்களில் வறட்டீ (Black Tea) போட்டுக் குடிப்பது வழக்கமாக இருக்கிறது. அதே நேரம்  வறட்டீ குடிப்பது தமிழ்நாட்டில் கௌரவ குறைச்சலாக கருததப்படுகிறது. கேரள போன்ற சில மாநிலங்களிலும், மேலை நாடுகளிலும் பார்ட்டிகளில் விருந்தினருக்கு  வறட்டீ  தரப்படுகிறது. தமிழர்கள் வறட்டீ போடும்போது ஒரு தவறு செய்கிறாரகள். நீரில் டீ தூளை போட்டு நன்றாக கொதிக்க வைத்துக் குடிக்கிறார்கள். இம்முறை சரியல்ல. டீ மிகவும் துவர்ப்பாக இருக்கும். 


கேரளாவில் பிரபலமாக கட்டாஞ்சாயா என அழைக்கப்படும் இட்டீ மிகவும் சுவையானது ஆகும். செய்முறையோ எளிதினும் எளிது. ஒரு டம்ப்ளர் சுத்தமான நீரை சில நிமிடங்கள் சுமார் ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். மற்றொரு டம்ப்லரில் கால் ஸ்பூன் (காலே ஸ்பூன்) டீ தூள், தேவையான அளவு ஜீனி போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். கொதித்த நீரை டீ தூள், ஜீனியோடு சில முறைகள் ஆற்றி அப்படியே ஒரு நிமிடத்திற்கு வைத்து விடவேண்டும். டீ துகள்கள் கீழே மெதுவாக பதிந்து விடும். டீ துகள்களில் உறைந்துள்ள சுவையை சூடான நீரே வெளிக்கொணரும். டீயை வடிக்கட்ட கூடாது. ஒரு நிமிடம் முடிந்து அப்படியே சுவையான தேநீர் அருந்தி மகிழலாம். 


வறட்டீ இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பல நோய்கள் வராமல் தடுக்கும் என்றும், அதில் சிலபல ஆன்டீ-ஆக்சிடெண்டுகள்(Anti-Oxidants) உள்ளன என்றும் சிறுவயதிலிருந்து தினமலரில் பத்தி செய்தியில் படித்து வருகிறேன். சீனர்கள் நெடுங்காலமாக வறட்டீ அருந்தி வருகிறார்கள். அவர்களின் சுறு சுறுப்பிற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்

ப.லிங்கேஸ்வரன்.

05/11/2014.

Saturday, October 4, 2014

யார் சித்தன். . ?எண்ணத்தை ஆராய்ந்து கொண்டு இருப்பவனே சித்தன். . 
எண்ணத்தின் விளைவு அறிந்தவனே சித்தன். . 
ஒழுக்கம் தவறாமல் வாழ்பவனே சித்தன். . 
ஐம்புலன்களின் போக்கறிந்தவனே சித்தன். . 
அறிவின் நிலையறிந்து பேரமைதியில் வாழ்பவனே சித்தன். . 
உடல்உரம் பெற்றவனே சித்தன். . 
வேண்டும்போது உயிர் விடுபவனே சித்தன். . 
மரணத்திற்க்கு அஞ்சாதவனே சித்தன். . !


ப.லிங்கேஸ்வரன். 
04/11/2014

Monday, September 8, 2014

கல்விக் குற்றவாளிகள் . .

சுயநலம் பாராது சமுதாயத்திற்காக உழைக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் (தாமதமான) ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியர் தினத்தன்று ஒரு மாணவன் பேனா ஒன்றை எனக்கு பரிசளித்தான். மாணவி ஒரு சாக்லேட் தந்தாள். வகுப்பில் நுழையும்போது மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். ஒருமைப் பெண் தன் கற்பை பாதுகாப்பது போல, ஆசிரிய உத்யோகத்திற்கு எந்தவித களங்கமும் வராமல் பார்த்து கொள்கிறேன். 


பிரதமர் மோடி கூறியது போல் ஆசிரியர் என்பது பணியல்ல, அது ஒரு தர்மம்; வித்யா தர்மம். தான் பெற்ற அறிவையெல்லாம் தனக்கென வைத்துக்கொள்ளாமல் மாணவர்களுக்கு தானமாக வழங்குவதுதான் ஆசிரியரின் கடமையாகும். ஆனால் இன்றைய ஆசிரியர்களின் நிலை எப்படி இருக்கிறது?  படு கேவலமாக இருக்கிறது. வட்டி தொழில், ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் தொழில், வகுப்பு நேரங்களில் சொந்த வேலைகளை பார்த்துக்கொண்டு ஓப்பி அடிப்பது போன்றவற்றில் ஈடுபடுபவர்க்ளை கல்விக் குற்றவாளிகள் என சொல்லாமல் வேற என்ன சொல்வது? இதில் கவனிக்க வேண்டியது என்ன்வென்றால், ஆசிரியர் உத்தியோகத்தை Secondary Business போல செய்வதுதான்.


ஒரு ஆசிரியர் முன் ஐம்பது மாணவர்கள் உட்கார்ந்திருக்கிறார்கள் என்றால் அவர்கள் நம் சமுதாயமே அன்றி வேறல்ல. இதை ஆங்கிலத்தில் Representation என்பார்கள். Epitomize என ஒரு வார்த்தை இருக்கிறது. அப்படியானால் ஒரு ஆசிரியர் எவ்வளவு கவனமாகவும், பொறுப்பு உணர்வோடும் மாணவர்களை/மாணவிகளை கையாள வேண்டும்?


இன்றைய நிலையில் உருப்படியாக வேலை செய்யும் ஒரு ஆசிரியருக்கு இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று, மனசாட்சிக்கு கட்டுப்பட்டு பணிபுரிவது. ஆனால் இதில் பொறம்போக்குகள் ஒன்றுசேர்ந்து கொண்டு உங்களை ஹீம்சிப்பார்கள். இரண்டு, பொறம்போக்குகள் கூட்டத்தில் சேர்ந்து விடுவது. இதை உங்களது மனசாட்சி கடுமையாக சுட்டிக்காட்டி, அழுத்தம் கொடுக்கும். மனசாட்சியை விற்றுவிட்டால் இரண்டாவது வாய்ப்பு சுலபம்.

P.Lingeswaran,
Assistant Professor of Mechanical Engineering.

Thursday, August 28, 2014

தொலைத்து விட்டேனே. .
தொலைத்து விடுவேன் 
என்றாள். . . 
அதுதான் 
ஏற்கனவே 
தொலைத்து விட்டேனே
என்றேன். . . . !

கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Tuesday, July 22, 2014

பிரேமம் . .
பொறுக்க முடியாத 
ஒரு துயர் உண்டு. . 
பிரேமம் என்று 
அதற்கு ஒரு 
பெயர் உண்டு. . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Saturday, June 14, 2014

காதல் தொல்லை . .
நான் 
உளறிக் கொண்டே 
இருக்கிறேன். . 
அவள் அதை 
கிளறிக் கொண்டே 
இருக்கிறாள். . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Saturday, May 17, 2014

பாண்டிய நாடும், கம்யூனிசமும். .பாண்டியநாடு திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க தவறிவிட்டேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல ஒரு கமெர்ஷியல் சினிமா. என் மனத்தை இதுவரை கவராத விஷால் இப்ப்டத்தில் ஒரு இயல்பான, சராசரியான,வில்லனிடம் அடிவாங்கும் கதாபாத்திரம். நல்ல நடிப்பு. ஒருபுறம் லக்ஷ்மி மேனனுடன் ரொமான்ஸ், மறுபுறம் டமால் டுமீல் வில்லன் என சுவாரஸ்யமாக திரைக்கதையை கொண்டுசென்று ஓரிடத்தில் இரண்டு டிராக்குகளை ஒன்று சேர்க்கிறார் இயக்குனர். திரைக்கதை ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதற்கு இப்படம் உதாரணம்.


சில நாட்களுக்கு முன் குப்பைக்குள் ஒரு முத்து கிடைத்தது. நூலின் பெயர் ' காரல் மார்க்ஸ்', எழுதியவர் தமிழ் அறிஞர் 'சாமிநாத சர்மா'. ஆண்டு 1943. கம்யூனிசம் என்றால் என்ன? இந்த கேள்வியை நான் நான்கு பேரிடம் கேட்டிருக்கிறேன். ஒருவர்கூட உருப்படியான பதில் சொல்லவில்லை. (நால்வரும் கம்யூனிஸ்டுகள்). பொதுவுடமை என்கிறார்கள். எதை பொதுவாக்குவது? ஒரு தொழிற்சாலை இருக்கிறது. கடைநிலை ஊழியர்கள், மததியநிலை ஊழியர்கள், மேல்நிலை ஊழியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு சம்பளம். இதில் எப்படி பொதுவுடமைக் கொள்கையை அமுல்படுத்துவது? அல்லது ஒரு உதாரணத்தோடு சொல்லுங்களேன் என்பேன் நான். கம்யூனிசம் தொடர்பான நூல்களில் ஒரு முக்கிய குறைபாட்டை எடுத்துச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நேரடியான,புரிந்து கொள்ள கடினமான மொழிபெய்ர்ப்பு, ஆர்வமற்ற எழுத்து நடை இவற்றுடன் வறண்டுபோன பாலைவனம் போல கம்யூனிசம் தொடர்பான நூல்கள் காட்சியளிக்கின்றன. மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்றொரு நூல் இருக்கிற்து. படித்து பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள். திரு.அருணன் என்பவரின் புத்தகங்கள் இதற்கு விதிவிலக்கு. சாமிநாத சர்மா அவர்கள் எளிய தமிழில், உயிரோட்டமான நடையில் காரல் மார்க்சின் அடிப்படை தத்துவங்கள் கூட விளங்குமாறு எழுதியிருக்கிறார். சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

Saturday, May 3, 2014

நான் அவளை . .நான் அவளை
காதலித்ததே
அவளுக்கு
தெரியவில்லை. .
ஆகையால்
என் காதல் 
இரு மடங்கானது. . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Tuesday, April 29, 2014

Which medicine system is superior in the world . .

Today, we see almost all people of the world are suffering because of some disease. It is either physical or psychological. At the same time, every day an innovative technology is introduced for diagnosing or treating the disease by modern medicine system. Research scientists especially bio-chemists, bio-technologists and pharmacologists strive to find out newer medicines that could combat with deadly diseases. Their intention, that is to save the people, can’t be blamed and should be appreciated. It is only the greedy business world that makes huge amount of money through the newly invented medicines/technologies.


In developing countries like India, a considerable amount of money is spent for medical expenses. But what about the salary and salary hike? I am talking about the labours all around the world who work for more than 12 hours a day in agriculture, building construction and production of clothes.  Highly salaried employees contribute only 2-3 % of the total employees.  Specifically, allopathic medicine system sucks the money of people and still it is unaffordable by the common men.


As of now, there are,notably, six medicine systems being practiced in the world. They are:
1.    English medicine or Allopathy
2.     Homaopathy
3.     Ayurveda / Siddha medicine system
4.     Unani medicine system
5.     Naturopathy

Among these, allopathy system is strongly condemned and criticized for the reasons :

*                It is costlier
*               Information about the disease is not properly passed to the patients.
*               It suppresses the symptoms of disease not cures the disease.
*              Frightening environment of the hospital ( to patients)
*               It is only suitable for emergency.


The above reasons may be, to an extent, somewhat true. But based on my 10 years experience and knowledge acquired when my parents were ill and myself, I can definitely say that no medical system is superior to other in the world. Each system has its own merits and de-merits. 


For example, English medicine is very effective in treating the ineffective diseases such as UTI, chronic wounds, baby birth and accidents. Homeopathy medicine excellently works in the psychological disorders and effective in almost diseases except emergency cases. Since homeopathy medicines are the diluted form (potentiating) of original items, it works in the vital force (bio-magnetic energy) of the body. Hence, it completely eradicates the disease without any trouble to patients and side effects. It is cheap and best medicine system. Siddha /Ayurveda /Unanai medicines are more or less similar in concept and working principle. Their base medicines are herbs only. Moreover, siddha text is in tamil whereas Ayurveda and Unani system are in Sanskrit and Urdu respectively. Among these, Siddha medicine is the oldest system in the world and developed by South Indian saints. Many chronic diseases such as diabetes, cancer, ulcer, venereal disease and psychic disorders can be cured by these systems. Even some siddha scholars say that AIDS can be dramatically controlled by siddha medicines. Still, there are few significant differences among these three systems. If I make an attempt to elaborate them, the article will expand much more. Let me stop with this small idea. Finally, Naturopathy – As matter of fact, it is not a medical system rather it is complete method of living in tune with nature. Satvik foods, proper living style, moderation in food, sleep and sex are to be followed. There are some effective naturopathy treatments like enema (for constipation), massage of head and body, stream both, mud both. I personally feel that fatal diseases like cancer, aids, heart ailments and VD can be definitely cured by naturopathy system provided the sufferer must be patient and be faith.


The final objective of any medical system is to cure the sufferer. So, I put forward a proposal for the review and consideration of scholars, intellectuals, doctors and research scientists. All the medical degrees like MBBS, BHMS, BSMS/BAMS, BUMS should be combined together and offered as a single medical degree. It may be named as Bachelor of Holistic Medicine and Surgery (BHMS). In that degree, students will study about anatomy, physiology, bio-chemistry, pathology in the first two years. In the another four years, students will study about allopathy system, homeopathy, siddha/ayurveda, naturopathy respectively along with the hands-on training in surgery.
This will be complete medical system which eases the work of the doctors since any kind of complicated disease could be tackled very easily. Also, it will give much relief from the burden of expenses and relief from the suffering from disease on patients part. Consequently, the economy of individual family as well as the country will definitely improve. This proposal is subject to some modifications by academicians and experienced doctors without collapsing the fundamental idea according to the practical difficulties. This noble idea will go very well in action until it is contaminated by the greedy industrialists and business men.

Idea and Writing
P. Lingeswaran,
Assistant Professor of Mechanical Engineering.Wednesday, April 16, 2014

முத்தம். .விலை கிடையாது; செலவில்லாதது.
கொடுப்பவர் கொடுத்தால் மதிப்புள்ளது 
நினைத்த போதெல்லாம் வராது. 
அன்பினால் மட்டுமே உருவாகும்.
சத்தம் வந்தால் காட்டி கொடுத்து விடும். . !


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

Saturday, April 12, 2014

செய்த பாவங்களிலிருந்து தப்பிப்பது எப்படி. . . .


செய்த பாவங்களிலிருந்து ஒருக்காலும் தப்பிக்க முடியாது. ஆனால் பாவங்களினால் உண்டாகப் போகும் தாக்கத்தை ஒருவர் நினைத்தால் குறைத்துவிட முடியும். ஏன் பாவங்களே செய்யாமல் ஒருவரால் வாழ முடியும். அதற்குமுன் பாவச் செயல்களாக கருத்தப்படும் சில:

1.பொய் பேசுதல் 
2.பிறர் மனம் புண்படும்படி பேசுதல்
3.துரோகம் 
4.விபச்சாரம் 
5.பிறர் மனைவியை அடைய நினைத்தல் 
6.ஒழுக்ககேடான பாலியல் உறவுகள் 
7.கொலை, திருட்டு
8.அளவுக்கு மீறிய ஆசை 
9.சோம்பேறித்தனம் 
10.பொறாமை 
11.பிறர் துன்பத்தில் மகிழ்தல் 
12.பிறர் உழைப்பை சுரண்டி வாழ்தல் 
13.அளவுக்கு மீறிய செல்வம் 

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி பாவம் என்பதற்கு பின்வருமாறு வரையறை கூறுகிறார். ' தனக்கோ பிறருக்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ உள்ளத்திற்கோ - எண்ணம், சொல், செயல் இவற்றால் துன்பம் அளித்தால் அது பாவம்'. இதை கடைபிடிக்க முடியுமா என சிலர் சந்தேகப்படலாம். 


ஒரு மனிதன் சிந்திக்கிறான்; பேசுகிறான்; செயல்புரிகிறான். இவை எண்ணம், சொல், செயல் எனப்படுகிறது. ஒருவர் தன் மனத்தில் மோசமான எண்ணங்களையே உருவாக்கி பழகி வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அது யாருக்கு தெரியப் போகிறது வெறும் எண்ணம்தானே என்று நினைத்துக்கொள்வார். ஆனால் உண்மை அதுவல்ல. எந்த ஒரு எண்ணமும் உடலில் ஒருவித அதிர்வலைகளை உண்டாக்கி அதற்குரிய ரசாயன மாற்றங்களை நிகழ்த்தி விடுகிறது. இந்த ரசாயன மாற்றங்கள் உடல் செல்களில் (ஜீன்களில்) பதிந்து விடுகின்றன. முரணான இந்த எண்ணப் பதிவுகள் எப்போது வேண்டுமானாலும் உடல் நோயாகவோ, மன நோயாகவோ வெளிப்படலாம். ஒருவர் எத்தகைய திறமைசாலியாக இருந்தாலும், படித்திருந்தாலும் இயற்கையின் இந்த நியதியை தடுக்க முடியாது.மேலும் ஒருவரின் எண்ண ஓட்டத்திற்கேற்ப அவர் அறிந்தோ அறியாமலோ - அவரது எண்ணமானது பேச்சிலும் செயலிலும் பிரதிபலித்து விடுகிறது. இது தவிர்க்கவே இயலாத மனித மனத்திற்கு அப்பாற்பட்ட ஒரு படிமுறையாகும். எனவே ஒருவரின் சிந்தனையின் தன்மைகேற்ப (அது நன்மையோ தீமையோ) - அது அவரின் சொல் மற்றும் செயலை குறிப்பிட்ட அளவு மாற்றி அமைத்து விடுகிறது.


ஒரு மனிதன் சமூகத்திற்குள்ளாகவே புழங்க வேண்டியிருப்பதால் - அவன் பேச்சை கேட்கும் செயலை கண்ணுறும் சமூகத்தினர் அதாவது அவனின் நண்பர்கள், உறவினர், குடும்பம் மற்றும் உடன்பணிபுரிபவர்கள் இவர்கள் மனத்தில் அக்குறிப்பிட்ட மனிதனைப்பற்றி ஒரு வலுவான அபிப்ராயம் உருவாகி விடுகிறது . தெளிவாக கூறினால், ஒரு மனிதன் தன்னுடைய சிந்தனை மற்றும் செயல்கள் மூலமாகவே தன்னைச் சுற்றி - தனக்கு ஸாதகமாகவோ பாதகமாகவோ ஒரு சூழ்நிலையை உருவாக்கி விடுகிறான். ஒருவன் தன் மேலான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலமாக இணக்கமான சூழ்நிலையை சமூகத்தில் உருவாகியிருந்தால்  - வாழ்வில் மிக எளிதில் பிறர் ஒத்துழைப்புடன் உயர்ந்து விடுவான். மாறாக, கீழான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மோசமான சூழ்நிலையை உருவாக்கி அதன் தொடர்விளைவாக சமுதாயத்தில் முன்னேற முடியாத நிலையில் இடர்பாடுகளுடன் சிரமப்படுவான்.


ஆகையால் ஒரு மனிதன் தன்னுடைய எண்ணம், சொல், செயல் வாயிலாகவே தன்னுடைய விதியை உருவாகிக் கொள்கிறானேயன்றி, எங்கோ இருந்து கொண்டு கடவுள் அருள்பாலிக்கிறார் என்பதோ அல்லது நம் பாவக் கணக்கை சரிசெய்கிறார் என்பதோ இல்லை. இந்த தத்துவப் பின்னனியின் அடிப்படயிலேயே ஒருவ்ர் தன் வாழ்வின் நிலையையும், பாவ புண்ணியங்களையும் அனுபவப்பூர்வமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் 
கருமமே கட்டளைக் கல்.

என்பது திருவள்ளுவர் வாக்கு.Saturday, March 1, 2014

காதலின் ரகசியம் . .Love's Secret எனும் தலைப்பில் William Blake என்பவர் எழுதிய ஆங்கிலக் கவிதையின் அடியேனின் தமிழ் மொழிபெயர்ப்பு பின்வருமாறு. காதல் எல்லா ஊரிலும் ஒரே மாதிரிதான் இருக்கிறது.

சொல்லாத வரை 
காதல் 
மனதிற்குள் 
தென்றல் போல 
இதமாக வீசிக் கொண்டிருந்தது. . 
ஒரு நாள் 
என் காதலை அவளிடம் 
உரக்கச் சொல்லிவிட்டேன்.
அதன்பிறகு தென்றல் 
வீசவே இல்லை. . . . !

நம் கல்வி முறை - ஒரு ஸ்ட்ரெச்சர் கேஸ். . . .முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு முன் நடந்த ஒரு மூளை-நரம்பியல் (Cognitive Neuroscience) ஆராய்ச்சி, எல்லோருக்கும் தெரிந்த - பலருக்கு உவப்பான - சிலருக்கு கசப்பான  ஒரு  உண்மையை தெரிவித்தது. Jonstone & Percival  என்ற இரு அறிவியல் வல்லுநர்கள் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் விரிவுரைகளை கண்டுகேட்டு ஆராய்ந்ததில் அவ்வுண்மை புலப்பட்டது. ஒரு வாத்தியார் 60 நிமிடங்கள் பாடம் எடுக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள், ஒரு மாணவனால் தொடர்ந்து அதிகபட்சம் 18 நிமிடங்கள்தான் கவனிக்க முடியுமாம். பாடம் முடியும் தறுவாயில் சுத்தமாக கவனம் சிதறி விடுகிறதாம். அதுமட்டுமின்றி, ஒரு ஆசிரியர் நடத்துவதிலிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்வதில்லையாம். ஒவ்வொரு தனிமனிதனின் ஜீன்களிலும் பலதரப்பட்ட அனுபவங்களும், ஞாபகங்களும் பதிந்துள்ளன. அவைகளைப் பொறுத்து(Based on that) ஒருவர் சிலபல தகவல்களை(Information) உள்வாங்கி வைத்துக்கொண்டு - பிறகு தன் தனித்தன்மைக்கேற்ப, மனத்திற்குள்ளாக அலசி (Learning) கற்றுக்கொள்கிறார்.


இவைபோன்ற ஆராய்ச்சி முடிவுகள் நம்முடைய கல்விமுறை எந்த அளவு ஸ்ட்ரெச்சர் கேஸ் என்பதை உணர்த்துகிறது. ஆசிரியர்-மாணவர் உரையாடல்கள்(Teacher-Student Interaction), நிகழ்கால பிரச்சினைகளை ஆராய்தல்(Case study), பாட புஸ்தகங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் உள்ள இடைவெளியை குறைப்பது(Technical seminars of Industry professionals) போன்றசில அவசர முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

ப.லிங்கேஸ்வரன்.
01/03/2014.


Saturday, February 1, 2014

எனது வாழ்க்கை சங்கல்பம். .!நீண்ட நாள் வாழ்ந்திடுவேன்! நல்லறிவு 
--- நற்குணங்கள் பல பெற்று தாமதமே 
ஆண்டுபல கழிந்தாலும் சான்றோன் எனும்பெயரை 
--- பெற்றோருக்கு ஈட்டித் தருவேன்! கருத்துக்கும் 
கண்ணுக்கும் இனிதான பெண்ணை மணந்து 
--- என்ன தவம் செய்தேனோ என அவள்  
எண்ணும்படி நடந்திடுவேன்! இருவரின் தெய்வீக 
--- அன்பில் தழைக்கும் மழலைகளை உலகுக்கே 
தொண்டு செய்ய வளர்த்திடுவேன்! நாளுக்கு 
--- நாள் மனக் களங்கங்கள் நீக்கி உள்நோக்கி 
கண்ட இறைநிலை உணர்ந்து நானே அதுவாகி 
--- இல்லறஞானி எனும் நல்லபெரும் பேறடைவேன்!  

ப.லிங்கேஸ்வரன்.
01/02/2014.
(Poem Inspired by Vethathiri Maharishi's Life)

Monday, January 27, 2014

காதல் பேய் . .காதல் ஒரு 
பேய் போன்றது. .
ஓட ஓட 
விரட்டும்
எதிர்த்து நின்றால் 
பிடித்துக் கொள்ளும். . !

- ப.லிங்கேஸ்வரன்.

Saturday, January 25, 2014

சித்திர விழியார் நெஞ்சம் . .விவேக சிந்தாமணி என்ற தமிழ் நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன் அல்லது பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நூலை தொகுத்தவர் அடையாளம் தெரியவில்லை. புரிதற்கு எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் ஆங்காங்கே சிலபல வியப்பூட்டும் உவமைகளும், அறிவுரைகளும் தென்படுகின்றன. வேசி மோகம், பொருளிலார்க்கு இன்பமில்லை, காம வெறி கோபம் இவற்றால் விளையும் இடுக்கண்கள், மன்னன்-பெற்றோர்-பிள்ளைகளுக்கு முத்தான சில அறிவுரைகள் இவைகள் பொதுவாக நூல் முழுக்க விரவி காணப்படுகின்றன.

உதாரணமாக, 
பெண்களின் மனத்தை ' சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லை. .' என அழகான வார்த்தைகளில் வர்ணிக்கிறது.

வாழ்க்கையில் படும் அல்லல்களில் நொந்து துவண்டு,
'அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம். . ' என்கிறது.

மேலும்,
'செம்மையாக அறம்செய்யார் திரவியம் சிதற வேண்டி 
 நம்மையும் கள்ளும் சூதும் நான்முகன் படைத்தாவாறே. . '
நேர்வழியில் சேர்க்காத செல்வம் விபச்சாரியிடமும், குடியிலும், சூதிலும் சிதறி செலவாகிப்போகும் என்பதே இக்கவியின் பொருள். இது ஒரு விலைமாது தன் தோழியிடம் சொல்வதாக அமைந்துள்ளது. தமிழ் ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இப்புஸ்தகத்தின் விலை ரூ 70 (கற்பகம் புத்தகலாயம், தி.நகர், சென்னை).

Saturday, January 4, 2014

கனவைத் தவிர . .கனவைத் தவிர 
எனக்கு வேறு 
வழியில்லை. .
உன்னுடன் 
பேசுவதற்கு. . !

ப.லிங்கேஸ்வரன்.
04/01/2014.

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...