Wednesday, December 18, 2013

முகமூடி. .முதுகில் குத்துதல், போட்டு கொடுத்தல், வேட்டு வைத்தல், கவிழ்த்து விடுத்தல் போன்றபல ஜாலவித்தைகள் நிறைந்த பூவுலகில் யார் சிநேகிதர், யார் சத்ரு என்றே தெரியவில்லை.  இன்று ஒவ்வொருவரும் மற்றவரிடம் சுமூக உறவு இல்லாமல் ஒரு பயந்த நிலையிலே உளத் தடுப்புகளும்(Psychological safeguard and Mask), முகமூடிகளும் அணிந்தே உலா வருகிறார்கள். மனத்தில் எந்தவித இறுக்கமோ, முகமூடியோ இல்லாமல், மனம் விட்டு சுதந்திரமாக ஒருவரிடம் பேசமுடியுமானால் அது கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் மட்டும்தான். அப்படி ஒரு கணவனோ, மனைவியோ அமையாத வாழ்க்கை சாபக் கேடுதான். சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் கதைநாயகன், நாயகியிடம் 'நான் உன்னைப் பார்கக வரும்போதுதான் ஆயுதம் (Weapon) இல்லாமல் வருகிறேன்' என்கிறான். இந்த வார்த்தையில் ஒரு ரகசியம் அடங்கியிருக்கிறது.


திண்டுக்கல் 
18/12/2013.

Tuesday, December 17, 2013

அவளுக்காக நான் . .
எனக்காக 
அவள்
பிறந்தாள். .
அவளுக்காக
நான்
பிறந்திருந்தேன். . !

- ப.லிங்கேஸ்வரன்.

Sunday, December 15, 2013

திருமணம் என்றால் என்ன . . ?


சித்தர்கள் உங்கள் திருமணத்தை தடுத்து தங்கள் பக்கம் திருப்ப முயற்சிக்கிறார்கள் ஆனால் நீங்களோ திருமணம் செய்து கொள்ள ஆசைபடுகிறீர்கள் என்றார் நான் வழக்கமாக கன்சல்ட் செய்யும் சித்த மருத்துவர். நான், இல்ல ஸார் ஆன்மீகம் எப்போதும் மனதிற்குள்ளேயே இருக்கிறது, திரும்பி வருவேன் என்றேன். திருமணம் ஆகாமல் இருப்பது பெரிய தடைக்கல்லாக இருக்கிறது என்றேன். வாழ்த்துக் கூறி அனுப்பினார். 


திருமணம் என்பது உடல் மற்றும் உள்ளம் சார்ந்த ஒரு வலுவான அடிப்படை தேவையாகும். காலா காலத்தில் திருமணம் ஆகாவிட்டால் மனித உந்து சக்தியானது (Motivation or Drive) தேக்கமோ, திசைமாற்றமோ அடைந்துவிடும். இது வாழ்க்கைக்கு நல்லதல்ல. திருமணம் என்பதை பெரும்பாலோர் பாலுறவு தொடர்பான விஷயமாகவே நினைக்கிறார்கள். இது தவறு. மேலும் சிலர் பாலுறவை பிறப்புறுப்பு சம்பந்தப்பட்ட விஷயமாக நினைக்கிறார்கள். இது அதைவிட பெரிய தவறான கருத்தாகும். பாலுணர்வு உடல் மற்றும் உள்ளம் முழுவதும் பரவியிருக்கிறது. அதனால்தான் சில ரிஷிகள் இதை ஒரு கலை போன்றே கருதினார்கள். 


அன்பு(Love), உதவி(Help), அரவணைப்பு(Emotional warmth), ஆறுதல், நம்பிக்கை(Faith), ஊடல் கூடல் இவை போன்ற பல பகுதிகள்(Components of marriage life) இணைந்ததுதான் மணவாழ்க்கை. இந்த உண்மையை புரிந்து கொண்டவர்கள் வெற்றிகரமாக வாழ்கிறார்கள். அடம் பிடிப்பவர்கள் தோல்வியடைகிறார்கள். சரியாக கூறவேண்டுமானால், கணவன்-மனைவி என்பதே ஒரு நட்பு(Divine friendship) என்பதை தவிர வேறில்லை. இந்த நட்பு சரியாக வாழ்வில் அமையப்பெற்றவர்கள் வாழ்வில் ஒருவருக்கொருவர் ஊக்கம் தந்து முன்னேற்றம் காண்பார்கள்.

திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைய தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி மூன்று மந்திரங்களை கூறுகிறார். அவை:

1. விட்டுகொடுத்தல் 
2. பொறுமை / சகிப்புத்தன்மை 
3. தியாகம். 

விட்டுகொடுத்தல் 
சூழ்நிலைகளுக்கேற்ப விட்டுகொடுத்தல், வளைந்துக்கொடுத்தல்.

பொறுமை / சகிப்புத்தன்மை 
சில நேரங்களில் சில சங்கடங்கள் வரும்போது பொறுத்துக்கொண்டுதான் போக வேண்டும். அதற்கும் மேல் சில நேரங்களில் நமக்கு பிடிக்காத விஷயங்கள் சகித்துக் கொள்ளவும் வேண்டும். சரியான நேரத்தில் நாசூக்காக எடுத்துக்கூறி திருத்திவிடலாம். காரியம் ஆக வேண்டுமே.

தியாகம் 
தியாகம் என்பது நம்முடைய உரிமையையே விட்டுக்கொடுப்பது. இது என்னுடைய் பொருள்தான், ஆனா பரவாயில்ல நீயே வச்சுக்க. 


இவையெல்லாம் கடைபிடிப்பதினால் நாம் மிகவும் குனிந்து போகிறோம் என்பதோ, கோழை என்றோ அர்த்தமல்ல. வரப்போவதெல்லாம் லாபம்தான். இதைவிட திருமண வாழ்வை இனிமையாகி கொள்ள வேறுவழியில்லை. வேண்டுமானால் Psychologist யாரிடமாவது கேட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.

- ப.லிங்கேஸ்வரன் 

Thursday, December 12, 2013

குருவே என் அன்பே !கலங்கினேன் மனம் நொந்தேன் கவலைகளைக் 
---- கண்டு திகைத்தேன் செய்வ தறியாமல்
விலங்கினப் பிறப்பே மேலென்று எண்ணினேன் 
---- மனிதப் பிறவியின் மாண் பறியாமல்  
பலவாறாக சிந்தனைகள் சிதறி ஓடியதை 
---- தடுத்து நிறுத்தி மிகஅரிய மனவளக் 
கலைஎனும் உயர்யோகம் அருளி எனை 
---- ஆட்கொண்ட குருவே என் அன்பே !

ப.லிங்கேஸ்வரன்.

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...