Monday, October 14, 2013

சமீபத்தில் நான் வாங்கிய புத்தகங்கள்...





திண்டுக்கல் இலக்கிய கழகமும், தென்னிந்திய புத்தக சங்கமும் இணைந்து திண்டுக்கலில் அக்டோபர் 04 முதல் 13 வரை ஒரு புத்தக கண்காட்சியை நடத்தியது. புத்தக கண்காட்சியில் நீங்கள் நுழைந்தவுடன் எங்கிருக்கிறோம் எனும் பிரக்ஞையை சட்டென மறந்துவிடும் அனுபவத்தை பெற்றிருக்கலாம். அதற்கு காரணம், புலன்கள்(கண்) வழியாக மனம் விரிந்து அத்தனை வண்ண வண்ண புததங்களாகவும், அதன் தலைப்புகளாகவும் மாறும்போது, உடற்செல்களும் மூளைசெல்களும் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் சிலநிமிடங்களுக்கு நிதானம் (Hibernation) தவறிவிடுகின்றன. 


ரூ 2000 மேல் புத்தகம் வாங்கும் அன்பர்களுக்கு 'நூல் ஆர்வலர்' சான்றிதழ் அளித்தார்கள். நான் வாங்கிய புத்தகங்களை பரிசீலித்து எனக்கு 'நூல் பித்தர்' என சான்றிதழ் வழங்க உத்தேசித்து இருக்கிறார்கள். நான் வாங்கிய புத்தங்கள் பின்வருமாறு:

 1. உளவியல் மேதை சிக்மண்டு பிராய்ட் 
   (எம்.ஏ.பழனியப்பன், செண்பகா பதிப்பகம், மெட்ராஸ்)

 2. நான் கடவுள் - தத்துவ தவ நூல் 
    (பரஞ்சோதி மஹான், உலக சமாதான ஆலயம், திருவோற்றியூர்,   
    மெட்ராஸ்)

 3. குறும்தொகை-ஓர் எளிய அறிமுகம், 401 காதல் கவிதைகள்.
   (சுஜாதா, உயிர்மை பதிப்பகம்)
 
 4. கமல் - நாம் காலத்து நாயகன்.
   (மணா, உயிர்மை பதிப்பகம்)

 5. Albert Einstein - The Revolutionary Scientist and His Ideas.

 6. Mental Disorders - Misconceptions and Realities
   (National Book Trust, Madras)

Tuesday, October 1, 2013

பாரதியார் கஞ்சா அடித்தாரா...


சில நாட்களாக பாரதியார் கட்டுரைகள் என்ற நூலை படித்து படித்து எனக்கு ரத்த கொதிப்பே அதிகமாகிவிட்டது. சமூக அவலங்களின் மீதான தனது ஆவேசத்தையும், மனிதர்கள் இப்படி இருக்கிறார்களே என்கிற ஆதங்கத்தையும் அப்படியே படிப்பவர்களின் மனத்திற்கு கடத்தி விடும் அபூர்வ எழுத்துக் கலை பாரதியாருக்கு வாய்த்திருக்கிறது. தாயுமானவர், திருவள்ளுவர் பாடல்களில் அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.

பாரதியார் கோபத்தை கட்டுப்படுத்த தன் வாய்க்குள் ஜாதிக்காயை வைத்திருப்பாராம். சிலர் கஞ்சா அடித்தார் என்கிறார்கள். ஒருசில க்ரொமாசோம் ஆராய்ச்சியாளர்கள் பாரதியார் ஒரு Mentally challenged person  என்கிறார்கள். அவரின் சிந்தனை-கவிதை மட்டுமன்றி தத்துவம், சயின்ஸ், சமூகம், அரசியல், கல்வி சீர்திருத்தம், இலக்கியம், மதங்கள், பன்மொழி என சகலததுறைகளையும் தொட்டு சென்றிருக்கிறது. என்னை பொறுத்தவரை மஹாகவி என்ற விளிப்பு பாரதியாருக்கு சற்று கம்மிதான்.

- ப.லிங்கேஸ்வரன்.

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)

Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what peo...