Sunday, December 30, 2012

புவனத்திலுள்ள மலர்கள் எல்லாம் ...


புவனத்திலுள்ள 
மலர்கள் எல்லாம் 
ஓரிடத்தில் திரண்டு 
ஒரே பெண்ணானது போல 
தெரிகிறாய் நீ...!

கவிதை: லிங்கேஸ்வரன்.

Friday, December 21, 2012

நீதானே என் பொன்வசந்தம்...


என் தந்தை நவம்பர் 27 காலமானார். தன் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல், அவையில் என்னை முந்தச்  செய்து விடலாம் என் கனவு கண்டவர். நல்ல ஆங்கில அறிவு, மூன்றுவேளை சோறு, மேற்கூரை என நான் கவலைப்படாமல் பார்த்துக்கொண்டார். உயிரோடு இருக்கும்போது திட்டிக்கொண்டே இருந்தவர், இறந்தபின் ஹீரோவாக தெரிகிறார். அவரது வாலிப பிராயத்தில் குறைந்தது ஐந்தாறு பெண்களுக்காகவாவது ஹீரோவாக விளங்கினார் என்று என் மாமா கூற கேள்விப்பட்டேன். கடைசியாக என் தந்தையை  நான்தான் மிகுந்த சிரத்தையோடு கவனித்துக்கொண்டேன். சித்த மருத்துவம்தான் அவரை நலமாக வைத்திருந்தது. நடக்கும்போது எங்கு தடுமாறுவார், எப்படி தாங்கிப்பிடிக்க வேண்டும் என்பதுவரை துல்லியமாக அறிந்து வைத்திருந்தேன்.


தொடர்ந்த துக்க தினங்களில் மீண்டு சகஜ நிலைக்கு வருவதே சிரமமான காரியமாக இருந்தது.  கவனத்தை கலைக்க எங்கள் ஊரில் நடந்த ஒரு புத்தக கண்காட்சியில் நுழைந்துவிட்டேன். நினைவெல்லாம் அப்பாவாக இருந்தார். ஒரு ஸ்டாலில் எஸ்.ராமகிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். ஒருவர்கூட அவரை கண்டுகொள்ளவில்லை. நான் சட்டென கவலை மறந்து அவரை நோக்கி நகர்ந்தேன். நேரில் சற்று பூசினாற்போல் புதுசாய் தென்பட்டார்.  நான் அருகில் சென்று வணக்கம் சார் என்றேன். புன்னகையுடன் கைகுலுக்கினார். உங்கள் புத்தகங்களை படிப்பேன் சார் என்றேன். சிரித்தார். உயிர்மையில் படிப்பேன் என்றேன். சிரித்தார்.  எல்லா புத்தக கண்காட்சிகளிலும் சுஜாதாவின் புத்தகங்களே அதிகம் சேல்ஸ் ஆகிறது என்பீர்களே என்றேன். அப்போதுதான் அவர் என்னை கவனித்து இருக்கவேண்டும்.  தயக்கத்துடன், சார் ஒரு போட்டோகிராப். ஓ! தாராளமாக எடுத்துக்கங்க என்றார். பிறகு உலக சினிமாவை பற்றி தான் எடுக்கப்போகும் செமினார்  நோட்டிசை என்னிடம் ஒன்று கொடுத்துவிட்டு நகர்ந்தார். அடுத்த கவன கலைப்பு, நீதானே என் பொன் வசந்தம்.  படம் முழுக்க இளையராஜாவின் இசை கட்டிப்போடுகிறது என்று சொன்னால் நீங்கள் நிச்சயமாக ஒத்துக்கொள்வீர்கள்.  நீதானே.......எந்தன்.....பொன்வசந்தம்.....ஜீவா பாடுகையில் ஒரு கிடார் இசை ஒலிக்கிறது பாருங்கள்!  இதயத்தை சுண்டி இழுக்கிறது. நிஜமாகவே இழுக்கிறது.


கௌதம் மேனன்  Aesthetic feeling எனப்படும் அழகியலை பிரதானப்படுத்தி படம் எடுக்கிறார்.  அழுக்கில்லாமல் எப்போதும் அழகாக தோற்றமளிக்கும் கதாபாத்திரங்கள், நுண்ணிய முகபாவங்கள், பின்னணி இசை என மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி சேர்ந்து நம்மை படத்தில் ஒன்ற வைக்கின்றன. சமந்தாவிற்கு எல்லாம் அளவெடுத்தது  மாதிரி சரியாக இருக்கிறது.

Saturday, December 15, 2012

பெண்ணொருத்தியின் ரசனை...சமூகம் ரொம்பவே மாறிவிட்டது. 1988,89,90-களில் பிறந்த பெண்கள் திடீரென கல்யாண சந்தைக்குள் நுழைந்து விட்டார்கள். இதில் 1981-ல்  பிறந்த என் போன்றவர்களின் பாடு திண்டாட்டம்தான். சரிதாவுடன் பேசும் போது நன்றாக தெரிகிறது.


யோசித்து பார்த்தால் இம்மாற்றம் திடீரென நிகழவில்லை. சத்தமில்லாமல் அதிகரிக்கும் ரத்த அழுத்தம் போல, நம்மை பாதிக்கும்போதுதான் சமூகத்தின் இயல்பான  இம்மாற்றங்கள் தெரிகிறது. 

அசுர வேகத்தில் வளர்ந்து மாறி வரும் தகவல் தொழில்நுட்பம், விரைவான போக்குவரத்து, இளைய தலைமுறையினரின் பார்வையை அகல விரியச்செய்யும்  இன்டர்நெட் போன்றவற்றால் பெண்ணொருத்தியின் ரசனை, எதிர்பார்ப்புகள் யூகிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டன . உலகமயமாக்கலின்  இரக்கமற்ற இத்தகைய விளைவுகளை சகித்துக்கொண்டு அவ்வப்போது நிலைமையை சமாளிப்பதை தவிர வேறு வழி இல்லை என்றே நினைக்கிறேன்.

Thursday, December 13, 2012

என் வாழ்க்கை...பரணி நட்சத்திரம் கும்ப லக்கினத்தில் 
--- ஆண் மகவு ஒன்று பிறந்திருக்க 
தரணி ஆளுமென என் பெற்றோர்கள் 
---  மகிழ்ந்திருக்க, சுக்கிரனோ எட்டில் பலமிழந்து  
சிரமங்களுக்கிடையே அவன் வாழ்க்கை என 
--- விதித்திருக்க, எனினும் அன்பும் பெருங் 
கருணையும் கொண்ட இறைவன் வாழ்க்கையில் 
--- சகல அறிவையும் பெற புதனையும் 
சூரியனையும் ஒன்றாக ஏழில் நிற்க 
--- வைத்து இதுவரை பலபிறவிகளில் சேர்த்த 
கர்ம வினைகளைஎல்லாம் கழித்து தன்னைசேர  
--- கேதுவை பன்னிரெண்டில் நிறுத்தி வைத்தான்.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...