Monday, November 12, 2012

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?செவ்வாய் தோஷம் - திருமண வயதில் மகனோ மகளோ உள்ள பெற்றோர்களுக்கு பீதியை கிளப்பக்கூடிய வார்த்தை. செவ்வாய் தோஷமுள்ளவர்களை திருமணம் செய்து கொண்டால் அது உயிரையே பறித்து விடும் என்ற எண்ணமே அதற்கு காரணமாகும். இதை மூட நம்பிக்கை என்று சொல்பவர்களும் உண்டு. நானும் இதை அவ்வாறே எண்ணிக் கொண்டிருந்தேன். போதாக்குறைக்கு, என் அம்மாவும் செ.தோஷத்தால் மாண்டவர்களின் பட்டியலை நினைவு கூர்ந்து வயிற்றில் புளியை கரைப்பார்.  செ.தோஷம் என்பதை மூட நம்பிக்கை என்பதுதான் மூட நம்பிக்கை என்றுணரும் காலம் வந்தது (2012).  செ. தோஷம் தொடர்ப்பான கருத்துக்கள் நமது இந்திய தத்துவ-விஞ்ஞானிகளின் ஆழ்ந்த, பரந்து விரிந்த வானியல் அறிவுக்கும் -  வானுலவும் கோள்களுக்கும் மனிதர்களுக்கும் உள்ள தொடர்பை பற்றிய அறிவுக்கும் - தனிமனித உளவியல், உடற்செயலியல், உடற்கூறு அறிவுக்கும் - மிகச்சிறந்த சான்றாகும்.சிலமாதங்களாகவே செ.தோஷம் என்றால் என்ன, அது எவ்வாறு மனிதர்களை பாதிக்கிறது, அதன் பின்னணியில் உள்ள ரகசியங்கள் என்ன என்ற ரீதியில் என் சிந்தனை ஓடிக்கொண்டே இருந்தது. அதற்கான விடையும் சிறுக சிறுக கிடைத்து விட்டது. எண்ணற்ற, தமிழ்மொழி படிக்கத் தெரிந்த மக்களின் நலனுக்காக ஆழ்ந்த சிந்தனையிலும் ஆராய்ச்சியிலும் எனக்கு கிடைத்த விடையை அப்படியே வெளியிடுகிறேன். முதலிலேயே, நான் எவ்வாறு இந்த ஆராய்ச்சியை செய்தேன் எனக்கூறி விடுகிறேன்.  இது  ஒரு Empirical research அல்ல.  Unempirical research  என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என் தாயார் கூறிய விவரங்கள்,  சிறிய அளவிலான என் ஜோதிட அறிவு, வேதாத்திரி மகரிஷியின் காந்த அலைத்தத்துவம், மனித உளவியல்  மற்றும் உடற்கூறு, நேரடியாக நான் கவனித்த அனுபவங்கள் - இவற்றை ஒருங்கிணைத்து சிந்தித்தபோதே செ.தோஷம் என்ற முடிச்சு அவிழ்ந்தது.


முதலில் ஆண் மற்றும் பெண்ணின் உடல் அமைப்பை சற்று ஆராய வேண்டும். ஆண் பெண்ணின் உடல்கூறிற்கும், அவர்களின் பாலியல் உணர்வியற்கும் உள்ள தொடர்பை தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக, ஆண்களுக்கு உடலுறவில் உச்சகட்ட நிலையில் விந்து வெளியேறிவிடுகிறது. ஒரே தடவையில் சற்று அதிகமாக வெளியேறிவிடுகிறது. பிறகு ஆண்களால் உடனடியாக உறவில் ஈடுபட இயலாது. ஆனால் பெண்களுக்கு அதுபோல் அல்ல. விந்துபோன்ற ஒரு வகையான திரவம் பெண்களுக்கு உடலுறவின்போது வெளியாகிறது. ஆண்களுக்கு போலல்லாமல், சிறிது சிறிதாக சில நிமிடங்கள் விட்டுவிட்டு இந்த திரவம் வெளிவரும். விந்து வெளிவரும் நிலையில் ஏற்படும் இன்ப உணர்வை ஆங்கிலத்தில்  Orgasm  என்கிறார்கள். எனவே ஆண்களுக்கு Single Orgasm  ஆகும். பெண்களுக்கு Multiple Orgasm  ஆகும்.  இந்த காரணத்தால் உடலுறவில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் முழு இன்பத்தை துய்ப்பது அரிதான காரியமாகிறது.  ஒருவரை ஒருவர் அன்புடன் புரிந்துகொண்டு , உடலுறவின் உணர்ச்சி நிலைகளுக்கேற்ப விட்டுக்கொடுத்தும் வளைந்துகொடுத்தும் நிகழ்த்தப்படும் கலவியில் மட்டுமே முழுமையான இன்பம் சாத்தியமாகும். பெரும்பாலான திருமணமான தம்பதியினருக்கே இந்த விஷயம் தெரியவில்லை.  அப்படியெனில், இளைஞர்களின் நிலை?   இந்த பின்னணியிலேயே  (In this backdrop)   செ.தோஷம் ஆராயப்படுகிறது.


செவ்வாய் கிரகமானது மனித உடலில் எலும்பு மஜ்ஜையோடு தொடர்புடையதாகும். மஜ்ஜையிலிருந்தே  ரத்தம் உற்பத்தியாகிறது.  ரத்தத்திலிருந்து சுத்தமான சாறு போன்று வடிந்து இறுதியில் விந்து உருவாகி உடலின் மையப்பகுதியில் சேகரமாகிறது.  ஒருவருக்கு செ.தோஷம் இருக்கிறது என்றால்  அவருக்கு செவ்வாய் கோளிலிருந்து வீசும் அலை வீச்சும், அவரது உடலிலிருந்து வீசும் அலை வீச்சும் (Bio-magnetic waves)   வலுவாக பொருந்தி இருக்கிறது என்று அர்த்தமாகும். அதாவது செவ்வாயின் அலையும், மனித உடலின் அலைவீச்சும் கணக்காக பொருந்தி அவரது வாழ்நாள் முழுவதும் இது தொடர்கிறது. இதன் காரணமாக  செ.தோஷம் உள்ளவரது உடலில் விந்து உற்பத்தி சற்று அதிகமாகவே இருக்கும்.  செ.தோஷம் உள்ளவர்கள் நல்ல உடற்கட்டு, மன உறுதி, தன்முனைப்பு (Ego), உடலுறவில் சற்று அதிகமான ஆர்வம் - இவற்றை பெற்று இருப்பார்.  இக்கருத்துக்களை  முந்தையை பத்தியில் கூறப்பட்டுள்ள கருத்துக்களோடு இணைத்து சிந்தித்து பாருங்கள்.செ.தோஷம் உள்ள ஒரு பெண்ணை, செ.தொஷமல்லாத ஒரு ஆண் திருமணம் செய்து கொள்வாரேயானால், அது நிச்சயமாக அவருக்கு விடுக்கப்பட்ட சவாலே ஆகும். அப்படி ஒரு பெண்ணை தாம்பத்திய உறவில் திருப்திபடுத்துவது என்பது கடுமையான காரியமாகும்.  ராமலிங்க சுவாமிகளின் கூற்றுப்படி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தாம்பத்திய உறவு கொள்வதே உத்தமம்.  நடைமுறையில் இது சாத்தியமில்லையாதலால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவை என்பது ஓரளவு ஏற்றுக்கொள்ள கூடியதும், உடல்நலனுக்கு உகந்ததும் ஆகும்.  வயது கூட கூட தாம்பத்திய உறவில் ஈடுபடும் காலங்களிலும் மாற்றம் வேண்டும் என்பதையும் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். 


ஆனால் செ.தோஷமுள்ள பெண்ணிற்கு ஈடுகொடுக்க ஒரு ஆணானவர் அடிக்கடியும், சற்று ஆக்ரோஷமாகவும் தாம்பத்திய உறவில் ஈடுபட் வேண்டியிருக்கும். இந்த முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டாலும், செ.தோஷமுள்ள பெண்ணின் வலுவான உடலமைப்பால் இம்முயற்சி திருப்தியளிக்காமல் தோல்வியிலேயே முடியும். இந்த இடத்தில்தான், கணவன்-மனைவி இருவரிடையே விரிசலும், அதிருப்தியும் துவங்கும். தாம்பத்திய உறவில் ஈடுகொடுத்து செயல்பட முடியாததால், மன அழுத்தமும் விரக்தியும் காலப்போக்கில் ஓர் ஆணுக்கு உண்டாகும். இது ஒரு தாங்க முடியாத மன அழுத்தமாகும். முறையான கால இடைவெளியில்லாமல் தாம்பத்ய உறவில் ஈடுபடுவதால் ஆணின் உடல்நிலை பாதிக்க துவங்கும். அடிக்கடி விந்து வெளியேறுவதால், அதற்கு முந்தைய நிலைகளான மஜ்ஜை, எலும்பு போன்றவை பலகீனமாகி ( தூர்ந்து போவது போன்று - Porous) உடல் மிகுந்த சோர்வுக்கு உள்ளாகும். சில வருடங்களில் நரம்பு தளர்ச்சி, ரத்த சோக போன்ற பாதிப்புகளும் உண்டாகலாம்.


இவ்வாறு உடலும் மனமும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவதால் ஆணானவர் ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு ஏதேனும் ஒரு கடுமையான நோய்க்கு ஆளாவார். மேலும் கணவன மனைவிக்கிடையில் சண்டை சச்சிரவுகள் அதிகமாக துவங்கும். இதுவரை கூறப்பட்டுதை அடிப்படையாக வைத்துப்பார்த்தால், செ.தோஷமுள்ள ஒரு பெண்ணை மனம் செய்து கொண்டவர்   (1 )  உடல் உபாதைகள் மற்றும் நோய்கள்  (2 )  தற்கொலை  (3 ) விபத்துகள்  இவற்றில் ஏதேனும் ஒன்றால் மரணத்தை தழுவும் வாய்ப்பு மிக அதிகம்.  மரணிக்காவிட்டாலும் உடல் உபாதைகளால் நீண்ட நாட்கள் அவதியுறும் வாய்ப்பும்  அதிகம்.  மன சோர்வு, விரக்தி இவற்றால் உண்டாகும் தடுமாற்றத்தால் விபத்தை சந்திக்கும் நிகழ்தகவும் அதிகமாகிறது.செ.தோஷம் ஒரு குறைபாடோ, கேவலமான விஷயமோ அல்ல.  செ. தோஷமுள்ள பெண்ணை ஒரு செ.தோஷமுள்ள ஒரு ஆண் மணம் புரிந்துகொண்டால் அவர்களது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகவும், நிறைவளிப்பதாகவும் அமையும்.   செ.தோஷம் என்பது  ஒருவர் ஜனிக்கும்போது அவருக்கு இயற்கையாக அமைந்த உடல்-மன அமைப்பை குறிப்பதாகும். இயற்கையின் படைப்பில் தாழ்வு என்பதற்கோ, சங்கடப்படுவது என்பதற்கோ ஒன்றுமில்லை.  மழை பெய்யும்போது குடையெடுத்து செல்வது போல,  காற்றடிக்கும் திசையில் சைக்கிள் ஓட்டினால் எளிதாக செல்ல முடிவதுபோல - செ.தோஷமுள்ள ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வது இயற்கையை அனுசரித்து நடக்கும் மதிநுட்பமே ஆகும். அதுவே கணவன் மனைவி இருவருக்கும் பாதுகாப்பாகும்.மன உறுதி எல்லாவற்றையும் விழ மேலாகும்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் 
ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு  -  என்கிறார் வள்ளுவர்.

இங்கு, நோற்றல் என்பது,  மனதாலும் செயலாலும் யாருக்கும் துன்பம் தொந்திரவு அளிக்காமல், சிரமப்படுபவர்களுக்கு  முடிந்தவரை உதவி செய்து வாழும் அறநெறியை குறிக்கிறது.  சரியாக சொல்லவேண்டுமானால், நோற்றல் என்பது தவ வாழ்வை குறிக்கிறது. யாருக்கும் துன்பம் தராமலும், வரும் துன்பத்தை பொறுத்துக் கொள்ளுதலுமே  தவத்திற்கு இலக்கணமாகும். அத்தகையோர் மரணத்தையும் தவிர்த்து விடுவர் என்பதே இக்குறளின் பொருளாகும்.   ஜாதகத்தையும் தோஷங்களையும் புறக்கணித்துவிட்டு மன வலிமையையும், தன்னம்பிக்கையையும் நம்பி வாழும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன்.  இந்த செ.தோஷ ஆராய்ச்சியில், செ.தோஷமுள்ள ஆணை ஒரு செ.தொஷமல்லாத பெண் மணம் செய்தால் என்னவாகும் என ஆராயப்படவில்லை.  மேலும் இங்கு ஆராயப்படாத சங்கதிகளும் விவாதத்திற்குரியவை.  எனக்கு தெரிந்தவரை, செ.தோஷத்தை பற்றி தெளிவான ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கம் எங்கும் காணப்படவில்லை. இதற்கான மூல காரணம் ஒரு தம்பதியினரின் அந்தரங்கத்தில் புதைந்து கிடப்பதால், யாராலும் ஒரு முழுமையான விளக்கத்தை தர முடியவில்லை.


தீபாவளி நாள்,  2012.
திண்டுக்கல்.


ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...