Sunday, October 21, 2012

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம்...

டெங்கு சுரம் விரைவாக தமிழகத்தில் பரவி வருகிறது. அதாவது அவ்வாறு சொல்லப்படுகிறது. உலகமயமாக்கல் சூழலில் எல்லாமே வியாபாரம்தான். காலம்காலமாக பலவிதமான நோய்கள் பருவநிலை மாறுதல்களுக்கு தக்கவாறும், அங்கங்கு அமையும் சூழ்நிலைகளுக்கு தக்கவாறும் உருவாகி மக்களை வாட்டி வதைக்கின்றன. ஆனால் எல்லாப் பொருட்களிலும் எல்லா உயிர்களிலும் ஊடுருவி நிற்கும் தெய்வமானது அதற்கேற்ற தீர்வையும் சேர்த்தே அளிக்கிறது. டெங்கு சுரமும் அதற்கு விதிவிலக்கல்ல. 


ஆங்கில மருந்துகள் மனித அறிவால் உருவாக்கப்படுகின்றன. மனித அறிவென்பது சிற்றறிவாகும் (Fractional consciousness).  தெய்வம் என்பது பேரறிவு அல்லது முற்றறிவாகும் (Total consciousness). அதனால்தான் மனிதர்கள் தயாரிக்கும் மருந்துகளில் தவறுகள் (Human error)  ஏற்படுகின்றன. இத்தவறுகளே ஆங்கில மருத்துவத்தில் பக்க விளைவுகள் எனப்படுகின்றன. ஒவ்வொரு ஆங்கில மருந்து வெளியிடப்படும் போதும் அது என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எனபதும் சேர்த்தே மருத்துவர்களால்     
வெளியிடப்படுகிறது. 


தெய்வம் அல்லது இயற்கை எனும் பேரறிவால் உருவாக்கப்படும் மருந்துகளே தாவரங்கள் அல்லது மூலிகைகளாகும்.  தாவரம் என்ற வார்த்தையை உற்று நோக்கினால் 'வரம்'  என்ற வார்த்தையை அதில் காணலாம். மூலம் + ஈகை என்பதே மூலிகை. இறைவனின் கொடையே மூலிகைகள்.  இயற்கையின் தயாரிப்பில் உருவாகும் தாவரங்களில் பக்க விளைவுகளே இல்லை. ஒவ்வொரு மூலிகையும் நூற்றுக்கணக்கான நோய்களை தீர்க்கக் கூடியது. அதுபோல் ஆயிரக்கணக்கான மூலிகைகள் உள்ளன. உதாரணத்திற்கு, பொன்னாவரை என்ற மூலிகை (சூரண வடிவில் கடைகளில் கிடைக்கிறது) மிக எளிதில் மலச்சிக்கலை தீர்க்க கூடியது; எந்த பக்கவிளைவும் இல்லாதது.  இந்தவகையில் பார்த்தால், டெங்கு காய்ச்சல் என்பது சித்த-ஆயுர்வேத மருத்துவ முறையில் மிக எளிதாகவும், பக்கவிளைவுகள் இல்லாமலும், நோயாளிக்கு எவ்வித சிரமமும் இல்லாமலும் குணமாக்கும் மருத்துவமாகும். என்னை பொறுத்தவரை, டெங்கு காய்ச்சலுக்கு அஞ்ச வேண்டியதே இல்லை.


நான்கு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை நான் கடுமையான வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டேன். மூன்று நாட்கள் தொடர்ந்து ஆங்கில மருந்துகள் எடுத்தும்  காய்ச்சல் நிற்கவே இல்லை. சிக்குன்குனியா பரவிவந்த காலம் அது.  வெப்பத்தால் எனது தலை முடி உலர்ந்து விட்டன, கண்கள் சிவந்து உடல் மிகவும் சோர்ந்து விட்டது. கடைசி முயற்சியாக, நானாக தனியே ஒரு ஆட்டோ பிடித்து எனக்கு முன்பே பழக்கமான சித்த மருத்துவர்  டாக்டர். அறிவொளி என்பவரிடம் சென்றேன். அவர் என் நிலைமையை பார்த்தே சிரித்து விட்டார்.  என்னங்க....இப்படி வந்துறிங்கிங்க......சொல்லிருக்கேன்ல....முதலிலேயே வந்திருக்கலாம்ல என்றார். எனக்கு பேச திராணி இல்லை. அவர் நிலவேம்பு என்ற கஷாய பொடியை கொடுத்து இதை தினமும் இரண்டு வேளை கஷாயம் போட்டு  குடியுங்கள், காய்ச்சல் நின்றுவிடும் என்றார். எனக்கு சுத்தமாக நம்பிக்கையே இல்லை. எனினும் கஷாயம் போட்டு குடித்தேன். நீங்கள் நம்ப மாட்டர்கள், மறுநாளே காய்ச்சல் நின்றுவிட்டது. ஐந்து நாட்களில் நார்மலான நிலைமைக்கு வந்துவிட்டேன்.  பிறகு அவர் கூறினார், பொதுவாக கடுமையான வைரஸ் காய்ச்சல் என்றாலே மக்கள் அலோபதி மருத்துவத்தைதான் நாடுகிறார்கள். படித்தவர்கள் கூட இதை விளங்கிகொள்வதில்லை என்றார்.  சித்த வைத்தியத்தின் மூலம் எத்தனையோ முறை என் அம்மாவையும், அப்பாவையும் அவர் மரணத்தின் விளிம்பிலிருந்து காப்பாற்றியிருக்கிறார்.  அவருக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்.அதிலிருந்து இரண்டு வருடம் கழிந்தது. மீண்டும் ஒரு வைரஸ் காய்ச்சல். இந்தமுறை எந்த வைத்தியம் பார்ப்பது என்பதில் நான் தெளிவாகவே இருந்தேன். வேதாத்திரி மகரிஷி என்ற புனிதரின் கருணையால் நான் பலவருடங்களுக்கு முன்பிருந்தே ஆன்மீக கலையில்  ஈடுபட துவங்கியிருந்தேன். ஆன்மீகத்தில் நான் பெற்ற வந்த தேர்ச்சிக்கேற்ப வாழ்க்கையில் ஒவ்வொரு துறையும் எனக்கு தெள்ளதெளிவாக விளங்கிவந்தது. நோய்கள் வர காரணம்,  நோய்கள் வரமால் எப்படி தடுத்துக்கொள்வது,  எந்த நோய்க்கு எந்தவித மருத்துவம் உகந்தது என்ற தெளிவெல்லாம் அப்போது நான் பெற்றேன்.  இந்த பெருமையெல்லாம் என் குருநாதர் மகரிஷியையே சாரும். நிற்க.  இந்த தடவை வைரஸ் காய்ச்சல் வந்த பொது நான் நாடியது ஹோமியோபதி வைத்தியம். ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படை எனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது.  இப்படியும் ஒரு மருத்துவம் உலகில் இருக்கிறதா என வியப்பு எனக்கு.


ஹோமியோ மருத்துவத்தில் மூலப்பொருட்கள் என்பவை தாவரங்கள், தனிமங்கள் மற்றும் உலோகங்கள் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் இவற்றை நேரடியாக மருந்தாக கொடுக்கப்படுவதில்லை. தாவரங்கள் அல்லது தனிமங்கள் அல்லது உலோகங்கள் இவற்றின் சாரத்தை எடுத்து அவற்றை நீர்த்துப்போக செய்து - இறுதியில் மருந்தானது ஆற்றல் வடிவில் (Energy Form)   நோயாளிக்கு தரப்படுகிறது.  இப்படி மருந்தை நீர்த்து போக செய்வதை  Potentiation  என்கிறார்கள். அப்படி  செய்தால்தான்  மூலப்போருளிருந்து ஆற்றல் முழுமையாக வெளிப்படும் என்கிறர்கள். ஹோமியோபதி மருந்தானது ஆற்றல் வடிவில் செயல்படுவதால்  உடல் மற்றும் மனம் இரண்டையும் சரி செய்து நோயாளியை இயல்பு நிலைக்கு கொண்டுவருகிறது.  மேலும் மனித உடலில் இதமாகவும், விரைவாகவும் செயல்படுகிறது. ஹோமியோபதி மருத்துவமானது நோயாளியை பீதிக்கு உள்ளாக்காத ஓர் எளிய, சிக்கனமான மருத்துவமாகும்.


டாக்டர். சாமுவேல் ஹானிமன் என்பவரே ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை ஆவார். இவர் ஜெர்மனியில் பிறந்தவர்.  போதிதர்மர்  எப்படி சீனாவில் (ஏழாம் அறிவு) தனது வைத்திய புலமையால் மக்களை விஷக் காய்ச்சலிலிருந்து காப்பற்றினாரோ, அதேபோல டாக்டர்.சாமுவேல் ஹானிமன் ஹோமியோபதி மருத்துவம் மூலமாக ஜெர்மனியில் ஏராளமான மக்களை காலரா, வைரஸ் காய்ச்சல் போன்ற கொள்ளை நோய்களிலிருந்து தனது அபாரமான வைத்திய திறமையாலும், உள்ளுணர்வாலும்  காப்பாற்றினார்.  அக்காலகட்டத்தில்  ஆங்கில மருத்துவத்திற்கு சவாலாக விளங்கிய டாக்டர்.ஹானிமனை  ஆங்கில மருத்துவர்கள் கூட்டமாக சேர்ந்துகொண்டு ஊரைவிட்டு விரட்டி அடித்தனர். தன் வாழ்நாளின் இறுதிவரை போராட்டமாகவே நாட்களை கழித்தார் ஹானிமன்.

Sunday, October 7, 2012

தவம்...
தேவதைகள் 
வருகிறார்கள் 
போகிறார்கள்...
தவம் மட்டும் 
தொடர்கிறது...!


கவிதை: ப.லிங்கேஸ்வரன்.

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...