Sunday, April 29, 2012

மாயையில் சிக்கி மதிகலங்கி...
மாயையில் சிக்கி  மதிகலங்கி ஆகாத 

--- செயல்கள் செய்து உழல்வதை பெற்ற 
தாயைப் போல கருணையுடன் பார்த்திருக்கும் 
--- என் இறைவா! மீளாத பிறவி 
நோயை போக்கி அழுத்தும் கர்ம 
--- வினைகளை மனக்  கிலேசங்களை நீக்கி 
காய் கனிந்து தரையில் விழுவதுபோல 
--- உன்னைச் சேர்ந்து அமைதி பெறுவது எக்காலம்.


கவிதை: லிங்கேஸ்வரன்.

Sunday, April 15, 2012

ஒருவருக்கொருவர் குழந்தையாகி...தலைமுடி கோதி
மடியில் முகம் புதைத்து 
கிடைக்கும் ஒரு நொடியில் 
இதழ் மேல் இதழ் பதித்து 
சாதி உடைத்து 
போராடி திருமணம் செய்துகொண்டு 
நிஜமாக, பொய்யாக கோபித்துக் கொண்டு 
மழை பெய்யும் மாலை வேளையில் 
பின்னால் இருந்து கட்டியணைத்து 
கோபங்கள் கரைந்து 
உடம்புக்கு நோவு வந்த வேளையில் 
தோளில் சாய்த்துக்கொண்டு 
ஒழுகும் மூக்கை சிந்தி 
மருந்து மாத்திரை ஊட்டி விட்டு 
வருடங்கள் பலகடந்து 
முதுமை வயதில் 
ஒருவருக்கொருவர் குழந்தையாகி 
முற்றுப் பெரும் 
வாழ்வே காதலுக்கான 
என் அர்த்தம்.....!


கவிதை: லிங்கேஸ்வரன்.

Saturday, April 14, 2012

Queen of my heart...


I miss you very much
Your memory makes full of Joy in my Life
They say, God is within the mind
Well, true or not
You are within my mind
You are the queen of my heart
I miss you very much
I love you.....!


Lingeswaran

Friday, April 13, 2012

ஜாதகம் உண்மையா...
அனைவருக்கும் மனங்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.  சூரியனானது மேஷ ராசியில் நுழையும் நாளே தமிழ் வருடத்தின் முதல் நாளாகும். ராசி என்றவுடன் ஏதோ விநோதமாக நினைத்துவிட வேண்டாம்.  வானத்தில் காணப்படும் எண்ணற்ற நட்சத்திர கூட்டங்களை, கொத்து கொத்தாக பிரித்து ஒவ்வொரு கொத்திற்கும் நமது முன்னோர்கள் சூட்டிய பெயர்கள்தாம் ராசிகளாகும்.  நட்சத்திரங்களை இருபத்தி ஏழு தொகுதிகளாக பிரித்தார்கள். ஒவ்வொரு நட்சத்திர தொகுதியும்  ஒரு பெயரால் அழைக்கப்படுகிறது. மொத்தம்  27 நட்சத்திரங்கள். அதாவது தொகுதிகள்.  பிறகு வசதிக்காக இரண்டே கால் நட்சத்திர தொகுதிகளை  ஒன்றுசேர்த்து  ஒரு ராசியாக பெயரிட்டார்கள். பன்னிரண்டு ராசிகள்.


தற்போது எல்லோரும் நல்ல படிப்பறிவு பெறும் வாய்ப்பு வசதியை பெற்றுள்ளனர்.  ஒரு கிராமத்தில் வசிக்கும் பெண்  B.E., M.Sc., MBA வரை வந்துவிடுகிறார்கள். நல்ல சம்பளம் கிடைக்கும் உத்தியோகத்திலும் சேர்ந்து விடுகிறார்கள்.  அறிவு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி  வரவர பழைய கருத்துக்களை புறந்தள்ள தொடங்கிவிடுகிறார்கள்.  உதாரணமாக  ஜாதகம், ஜோசியம் போன்றவை எல்லாம்  மூட நம்பிக்கை என்பது  பெரும்பாலான படித்தவர்களின் எண்ணமாகும்.  அவ்வாறு சொல்பவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்பேன்,  வானத்தில்  சூரியன், நிலா, நட்சத்திரங்கள்  போன்றவை இருக்கின்றன என நம்புகிறீர்களா?   அதிலென்ன சந்தேகம் என்பார்கள். 


உண்மையில் , ஜோதிட சாஸ்திரம்  என்பது  ஒரு மூடநம்பிக்கை என நினைப்பதுதான் மூடநம்பிக்கை ஆகும்.  ஜோதிட சாஸ்திரம் என்பது சுத்தமான வானியல் அறிவு ஆகும்.  இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதவேண்டும் என நினைக்கிறேன். ஆனால் மேலோட்டமாகவோ, அரைகுறையாகவோ எழுதிவிட்டால் மீண்டும்  அது மூடநம்பிக்கையாகி  விடும் அபாயம் இருப்பதால், சில நாட்களில்  விரிவாக ,தெளிவாக ,அறிவியல் கண்களுக்கு விளங்கும் வகையிலேயே  எழுதிவிடுகிறேன்.  சூரியன், நிலா மற்றும் வானில் உலாவும் கணக்கிலாத நட்சத்திர கூட்டங்கள்  ஒவ்வொரு மனிதனின்  உடலிலும் ( ரசாயன மாற்றங்கள்), மனதிலும் ( எண்ணங்கள் மற்றும் குனாதிசங்கள் )  பிறந்த நொடிமுதல்  மரணம்வரை  மாற்றங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கிறது.  ஒரு மனிதனின் உயிர் உடலிலிருந்து பிரிவதற்கும்  கோள்களே காரணமாக அமைகின்றன.  இது பற்றி  விரிவாக எழுதுகிறேன். அதுவரை உங்கள் விழிகள் விரிவதற்கு  சில ஆச்சர்யமான உண்மைகளை படியுங்கள்.


பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  நல்ல கலையுணர்வும், அதிக காம உணர்வு  உடையவர்களாகவும் இருப்பார்கள். சற்று சுறுசுறுப்பில்லாமல் இருப்பார்கள்.  அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் Energetic  ஆகவும், Active ஆகவும் இருப்பார்கள். இவர்களுக்கும் காம உணர்வு அதிகம் உண்டு.   சித்திரை மற்றும் ஹஸ்தம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  நல்ல உடற்கட்டு  உடையவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு  Ego அதிகம் உண்டு.   விசாகத்தில் பிறந்தவர்கள்  தாங்கள் கொண்ட கொள்கையை அவ்வளவு எளிதில்  மாற்றிக்கொள்ள மாட்டார்கள். இவர்களை தங்கள் அழகை திருத்தமாக, நேர்த்தியாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.  சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சாந்தமான குணமுடையவர்கள், தாங்களுண்டு தங்கள் வேலையுண்டு என்றிருப்பவர்கள்.  தானாவே யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். ஆனால் உதவி கேட்டால் செய்வார்கள்.  புனர்பூசத்தில் பிறந்தவர்கள்  சிறந்த பேச்சாற்றல் உடையவர்கள். இவர்களுடன்  யாரும் பேசி ஜெயிக்க முடியாது.  மகத்தில் பிறந்தவர்கள் ஆளுமை திறனும், சோர்வில்லாமல் வேலை செய்யும் திறனும் ( அந்த வேலை அல்ல !)  உடையவர்கள்.  கேட்டை நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் முன்கோபிகள். எரிந்து விழுவார்கள்  பின்பு அதற்காக வருத்தப்படுவார்கள். ரோகிணியில் பிறந்தவர்கள் அடக்க ஒடுக்கமாக எந்த வம்புதும்புக்கும் போகாமல் இருப்பார்கள். ஆன்மீக ஈடுபாடு கூட இருக்கும்.

Monday, April 9, 2012

ஒரு நொடிதான்...ஒரு நொடிதான் 
அவள் 
பார்த்தாள்...
என் உலகம் 
அங்கேயே 
நின்று விட்டது...!

லிங்கேஸ்வரன் 

Saturday, April 7, 2012

தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டை குறைப்பது எப்படி?

சமீப நாட்களாக எங்கள் ஊரில் (தமிழ்நாட்டில் தான்) நிலவி வரும் கடுமையான மின்வெட்டை தாங்கவே முடியவில்லை. வியர்வை புழுக்கத்தில் தூக்கமே வரமாட்டேன் என்கிறது. செம கடுப்பாக இருக்கிறது. அதாவது பரவாயில்லை குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள்,  தொழிலாளர்கள் இவர்களின் நிலைதான் பரிதாபம். 


இது மாதிரி பிரச்சினைக்களுக்கெல்லாம் தடவிக் கொண்டிருக்க கூடாது.  அதிகாரிகள், அனுபவமும் திறமையும் மிக்க பொறியியல் வல்லுனர்கள், சமூக சிந்தனையாளர்கள்  இவர்களை அவசரமாக கூட்டி, கலந்தாலோசித்து, போர்க்கால அடிப்படையில் முடிவெடுத்து  அமுல்படுத்தினால் பலரும் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள்.  தமிழ்நாட்டில் தினமும்  12 நேரம் நிலவும் மின்வெட்டை ஒரே வாரத்தில் உத்திரவாதமாக பாதியாக குறைக்க எனது ஆலோசனைகள்  இவை:


ஒன்று:   மின்கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி விட வேண்டும் (அர்த்த சாஸ்திரம்).  சிக்கனமாக பயன்படுத்தி உதவுங்கள் என்று மாண்புமிகு முதல்வரே ஊடகங்களில் வேண்டுகோள் விடுக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். யாராவது கேட்பார்களா?


இரண்டு:  எந்த ஒரு வணிக நிறுவனமும்   (ஆஸ்பத்திரி, அரசாங்க அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகள் விதிவிலக்கு) இரவு எட்டுமணிக்கு மேல் திறந்திருக்க கூடாது (கேரளா).  மின்சாரத்தை அணைத்துவிட்டு, கதவை இழுத்து பூட்டிவிட வேண்டும்.  இதற்கு தயார் செய்துகொள்வதற்கு ஒரு வாரம் அவகாசம் கொடுக்கலாம்.  மீறினால், ஸ்பாட் பைனை போட்டுத்தீட்டி, வசூலாகும் தொகையை, ஒரு வங்கிக்கணக்கில் போட்டுவைத்து,  தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கு  அரசாங்கம் செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்த பயன்படுத்திக்கொள்ளலாம்.

அடிப்படை உரிமை நசுக்கப்படுகிறது என சிலர் கூப்பாடு போடுவார்கள்.  அரசாங்கம் அதற்கெல்லாம் அசைய கூடாது. வாழ்வாதாரமே ஊசலாடுகிறது. முதலில் பிறப்பு உரிமை அப்புறம்தான் அடிப்படை உரிமை.


மூன்று:  எந்த மதமானாலும்  கத்தி காதை கிழிக்கும் திருவிழாக்கள், பொதுக்கூட்டம் பிரச்சாரம், தேரோட்டம், பூச்சொரிதல்  இவை எதற்கும் அனுமதி கூடாது.  டியுப் லைட்டிற்கே  ஏராளமான மின்சாரம் திருடப்படுகிறது அல்லது அனாவசியமாக செலவாகிறது.நான்கு:   MNC கம்பெனிகளுக்கு தடையில்லாமல் வழங்கப்படும் கரெண்டில் தினமும் நாலு மணிநேரம் புடுங்கிவிட வேண்டும். பன்னாட்டு கம்பெனிகளால் வளரும் பொருளாதாரம் உண்மையான பொருளாதாரமல்ல.  பர்சில் உள்ள அதிகப்படியான பணத்தை மறைமுகமாக உருவி, செலவழிக்க செய்யும்  பகட்டுப் பொருளாதாரம் அது.

விவசாயம், சிறு-குறு தொழில்கள் ( Tiny and Small Scale Industries )  இவற்றால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், அடித்தட்டு-நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு, அதனால் உண்டாகும் பணபுழக்கம்  இவைதான் உண்மையான பொருளாதார வளர்ச்ச்சியாகும்.


ஐந்து:  சோலார் பேனல்கள் கொண்டு (சூரிய ஒளி) மின்சாரம்  தயாரிக்கும் திட்டம் ஒரு நீண்டகால திட்டமாகும். அதிக செலவு, கூடுதலான மின்விரயம் போன்ற அதிலுள்ள சிலபல சிக்கல்களை நீக்க இப்போதே முயற்சியையும் ஆராய்ச்சியையும் துவக்குவது  நல்லது.  இல்லையெனில்  வருங்கால குழந்தைகள் நம்மை சபிப்பார்கள்.

கூடங்குளம் அணு உலை...
கூடங்குளம் அணு உலை பிரச்சினை தற்போது கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. ஒன்று மட்டும் நிச்சயம். கூ.அ.உலை துவங்கினால் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு தீர்ந்து விடும் என்றால் அது அண்டப்புளுகு. அதில் நிறையவே டெக்னிக்கல் சமாச்சாரங்கள் இருக்கிறன. மின்சாரத்தை உற்பத்தி செய்து தேவையான இடங்களுக்கு விநியோகம் செய்வதிலுள்ள முக்கிய பிரச்சினை Energy Loss  என்பதாகும், கரண்ட் கம்பிகளில் மின்சாரம் பாயும்போது ஒரு குறிப்பிட்ட அளவு விரயமாகி விடுகிறது.


கூ.அணு உலை எதிர்ப்பு ,ஆதரவு என இரு பிரிவாக மோதிக்கொள்கிறார்கள். அணு உலைக்கு எதை அடிப்படையாக வைத்து ஆதரவு தருகிறார்கள் என புரியவில்லை.  சொந்த காசில் யாராவது மொத்த குடும்பத்திற்கே சூனியம் வைத்துக் கொள்வார்களா?  ஸ்கூல் பிள்ளைகள் மாதிரி பேசக்கூடாது.   அணு உலையில் மின் உற்பத்தி துவங்கினால் பின்வரும் இரண்டில் ஒன்று நிச்சயமாக நடந்தேறும். ஒன்று,  ஏதேனும் விபரீதம் நேர்ந்தால்,  தமிழக மக்கள் அனைவரும் கூண்டோடு வைகுண்ட பதவியை அடைவது.  அல்லது, அணுக்கதிர் கசிவினால் ஏதோவொரு கொடிய நோயால் பீடிக்கப்பட்டு தலைமுறை தலைமுறையாக சாவடி வாங்குவது.


நான் அணுப் பொறியியலோ, அணு இயற்பியலோ படிக்கவில்லை. ஆனால் இயற்பியல் படித்த என்னால்  எது நிஜம், எது சரடு என்று பிரித்தறிய முடியும்.  அணுக்கரு உலை கதிர்வீச்சு எவ்வாறு உடல்நலனை பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்வது சுலபமான காரியம்தான்.


ஒரு அணு என்பது கண்களுக்கு புலப்படாத, மைக்ராஸ்கோப்பில் மட்டும் அகப்படும் ஒரு கோள (உருண்டை) வடிவ அமைப்பாகும்.  ஒரு அணுவில் மூன்று வகையான துகள்கள் உள்ளன. அந்த துகள்களும் கோள வடிவமானவைதான். அணுவின் மையப்பகுதி  உட்கரு எனப்படும்.  உட்கருவில் நியுட்ரான் எனப்படும் துகள்களும், புரோட்டான் எனப்படும் துகள்களும் இடம்பெறுகின்றன.  உட்கருவை சுற்றி பல்வேறு வட்டப்பாதைகளில் எலெக்ட்ரான் எனப்படும் துகள்கள் பயங்கரமான வேகத்தில் சுழல்கிறன.


இவ்விடத்தில் ஒரு முக்கியமான விஷயம் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இருக்கிறது.  நாம் பார்க்கும் நட்சத்திர மண்டலத்தில் (பிரபஞ்சத்தில்)  நான்கே வகையான விசைகள்தான் செயல்படுகின்றன. ஒன்று, இரண்டு  அணுக்களிடையே /  பொருட்களிடையே  நிலவும் ஈர்ப்பு விசை.  இரண்டு , ஒரு அணுவில் எலெக்ட்ரான்-களை பிடித்து வைத்திருக்கும் மெலிதான விசை. மூன்று, அணுவின் உட்கருவில்  நியுட்ரான்-களையும், புரோட்டான்-களையும்  இறுக்கி பிணைத்திருக்கும் ஒரு வலுவான விசை.  நான்கு, மின்காந்த விசை.  இந்த நாலு வகையான விசைகளையும்  ஒன்றிணைத்து நோக்கிவிட   (Finding a single force which is known as Unified Force)  அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக முயன்று வருகிறார்கள்.


வெளிப்புறத்திலிருந்து ஒரு வலுவான விசையை கொண்டு தாக்கினால், அணுவில் சுழலும் எலெக்ட்ரான்கள் கழன்று ஓடிவிடும்.  ஆனால் உட்கருவில் இறுக்கி பிணைக்கப்பட்டுள்ள நியுட்ரான் மற்றும் புரோட்டான் கள்  அப்படி அல்ல.  அணுக்கரு உலையில் நடப்பது என்னவென்றால்,  இன்னொரு மிக ஆற்றலுள்ள விசையால், உட்கருவிலுள்ள  நியுட்ரான் புரோட்டான் துகள்கள்  சிதறடிக்கபடுகின்றன.  அப்போது மாபெரும் ஆற்றல் அணுவிலிருந்து வெளிப்படுகிறது.  இந்த ஆற்றலே மின்சாரமாக மாற்றம் செய்யப்படுகிறது. உண்மையில் நடப்பது என்னவென்றால், ஒரு அணுவின் கட்டமைப்பே  சிதறடிக்கபடுகிறது.  ஒரு அணுவின் மையப்பகுதியான உட்கரு சிதையும்போது, மிக நுட்பமான அலைகள் ( கதிர்வீச்சு) வெளிப்படுகிறது.


அணுவிலிருந்து வெளிப்படும் இந்த அலைகள் (கதிர்வீச்சு) மிகமிகமிக நுண்ணியதாகவும், மிகமிகமிக அதிக அலைவேகமும் கொண்டதாகும்.  எங்கும், எவ்வளவு தடிமனான பொருளையும் எளிதில் ஊடுருவி செல்ல கூடியவை இந்த அலைகள்.  இவை மனித மன கணக்குக்கு அப்பாற்பட்டவையாகும்.  எவ்வளவு திறமையான பாதுகாப்பு வசதிகளும் அணுக்கதிர் வீச்சை தடுத்து நிறுத்தக்கூடும் என்று சொல்வதற்கில்லை, அதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை.


நுண்ணிய, வேகமான - அணுக்கரு சிதைவின்போது  - வெளிப்படும் இந்த அலைகள் மனித சதைகளையும், எலும்புகளையும், ரத்தத்தையும் சுலபமாக ஊடுருவி செல்லும். அவ்வாறு செல்லும்போது, இன்னதென கணிக்க முடியாத, ரசாயன மாற்றங்களை உடலில் அவை ஏற்படுத்தி விடும்.  அதன் விளைவாக, ரத்த புற்றுநோய், எலும்பு புற்றுநோய், உடலின் ரசாயன திணிவு மையங்களான நாளமில்லா சுரப்பிகளில் பாதிப்புகள் ( தைராய்டு போன்றவை), மூளை பாதிப்பு  போன்ற பல்வேறு நோய்கள் உருவாக நிச்சயம் வாய்ப்புண்டு.


மனித உடலின் மிகவும் மென்மையான செல்களான, விந்து செல்களையும்  அணுக்கதிர் வீச்சு பாதிப்பிற்குள்ளாக்கும். விந்து செல்கள் பாதிக்கப்படுவதால்  குழந்தை பேறின்மை கூட  ஏற்படலாம்  என நாமே யூகித்துக்கொள்ளலாம்.  ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் விந்து மற்றும் அண்ட செல்கள் மூலமாகவே உருவாவதால் , தலைமுறை தலைமுறையாக  மேற்கூறிய நோய்களோடு  உடல் ஊனம் , மூளை வளர்ச்சி குறைவு, ஆட்டிசம்  போன்ற பல்வேறு வியாதிகள் உடலில் தொற்றிக்கொண்டு  மனித குலத்தை தொடர்ந்து நாசமாக்கும்.


அழகாக, பேரறிவோடு அடுக்கப்பட்டிருக்கும் அணுவின் கட்டமைப்பை சிதைப்பதென்பது  ஆண்டவனோடு விளையாடுவது போன்றதாகும்.  தொடர்ந்து  தன்னை சீண்டிக்கொண்டே இருப்பவர்களை இயற்கை அன்னை இரக்கமின்றி ஒறுத்து விடுவாள். ' அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது '  என்ற  தாயுமானவர்  வாக்கை நினைவுக்கு கொண்டு வருவது நல்லது.

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...