Monday, March 26, 2012

மலரினும் மெல்லியது காமம்...மலரினும் மெல்லிது காமம் சிலர்-அதன்  


செவ்வி தலைப்படு வார்.காட்டுத்தனமாக செக்சில் ஈடுபடாமல், நிதானமாக மென்மையாக காமத்தை நுகரவேண்டும். ஒருசிலரே இந்த உண்மையை அறிந்தவர்கள் என்பதே இத்திருக்குறளின் பொருள்.மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உடலுறவில் ஈடுபடும்போது, மூச்சு வெளியேறும் அளவும் வேகமும் அதிகமாகி உடலிருந்து Vital Force

அதிகளவு செலவாகிறது. உடல் சூடும் அதிகரிக்கிறது. இதன் விளைவாக நாளடைவில் நரம்புகள் தளர்ந்து, மூளை மழுங்கி , உடல் சோர்வுற்று ஆயுள் குறைந்து விடும்.

திருவள்ளுவர் சாதாரணமான மனிதர் அல்லர். அவர் இருநூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு). அழகும் அன்பும் ஒருங்கே வாய்ந்த ஒரு பெண்மணியுடன் (வாசுகி) இல்லறம் நடத்தியவர். வள்ளுவர் எழுதிய ஒவ்வொரு திருக்குறளையும் கட்டுடைத்தால் (De-construction) அவரது பரந்துவிரிந்த அறிவும், சுவையான அனுபவங்களும், நல்ல வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளும் கிடைக்கும். அதனால் திருக்குறளை ஆராய்வது எனக்கு எப்போது பிடித்த ஒரு செயல்.

பெண்கள் மலர்களை போன்றவர்கள். பெண்கள் என்றாலே மென்மைதான். மென்மை என்ற சொல்லிலிருந்துதான் பெண்மை என்ற சொல்லே உருவாக்கப்பட்டது. இரண்டு சொற்களையும் உச்சரித்துப் பாருங்கள், உங்களுக்கே புரியும்.

இறைவனின் படைப்பில் ஒரு அற்புதம் உண்டென்றால் அது பெண்கள்தான். ஆண்கள் நீண்ட நேரம் விவாதம் புரிவார்கள். பெண்கள் அப்படியன்றி, விவாதத்தின் நடுவே நிறுத்திவிட்டு சட்டென அமைதியாகி விடுவார்கள். அல்லது மண்டையை ஆட்ட துவங்கி விடுவார்கள். பெண்களுக்கு உள்ளுணர்வு (Intution) அதிகம். பேச்சே இல்லாமல் உள்ளுணர்வு நிலையிலேயே எதையும் புரிந்துகொள்ளும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு. உதாரணமாக, ஒரு பையன் காதலிக்கும் நோக்கில் ஒரு பெண்ணை அப்ரோச் செய்கிறான் என வைத்துக்கொள்ளுங்கள். அது அந்த பெண்ணுக்கு தெரியாமல் எல்லாம் இருக்காது. ஒரு சின்ன பெண் குழந்தையிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றால் கூட அந்த குழந்தையால் அதை உணர்ந்துகொள்ள முடியும். பெண்கள் இல்லாமல் உலகமே கிடையாது.

Sunday, March 18, 2012

பேரழகியாக ...


கோபப்படும் போது
நீ 
பேரழகியாக 
மாறி விடுகிறாய்...
அதனால் தான் 
உன்னை 
சீண்டிக்கொண்டே 
இருக்கிறேன்...!

லிங்கேஸ்வரன் 

Saturday, March 17, 2012

இயக்குனர் ஷங்கர் - எழுத்தாளர் சுபா கூட்டணி...


கோ திரைப்படம் வெளிவந்தபோது எழுத்தாளர் சுபாவைப் பற்றி சிறுகட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன்.  சுபாவின் எழுத்துநடையின் சிறப்பம்சம், அதில் மிளிரும் பன்முக அறிவு, வெகுஜனங்களை கவரும் திறன் ஆகியவற்றை அதில் குறிப்பிட்டு இருந்தேன். அவற்றின் ஊடே என் அனுபவமும் ஒன்றிருந்தது.


கட்டுரையின் நிறைவில்  ' கதைப்பஞ்சத்தில் வாடும் தமிழ் திரையுலகிற்கு சுபாவின் வருகை வரவேற்கத்தக்கது என்றும், எழுத்துலக பிதாமகன் சுஜாதாவின் இடத்திற்கு சுபா நிச்சயம் தகுதியானவர்தான்  ' என்றும் கூறி முடித்திருந்தேன். அந்த கட்டுரை பலரும் படித்திருப்பார்கள். ஆனால் ஒருவர்கூட கமென்ட் போடவில்லை, ஒரு வார்த்தை கூட அதுகுறித்து பேசவில்லை என்பதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை என்று நான் பொய் சொல்லமாட்டேன்.  கொஞ்சம் வருத்தம்தான்.


ஆனால் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சுஜாதாவின் இடத்தை நிரப்பும் விதமாக, இயக்குனர் ஷங்கர்  தனது அடுத்த படத்திற்கு எழுத்தாளர் சுபாவை (கதை,திரைக்கதை,வசனம்?)  அழைத்திருக்கிறார். என்னுடைய கணிப்பு சரியானது என்று பெருமைப்பட்டுக் கொள்வதைவிட , ஒரு நல்ல ரசிகனாக என் ஆசை நிறைவேறியது என்பதே சரி.


சுரேஷ் - பாலா என்ற இரண்டு நபர்கள் சேர்ந்துதான் எழுத்தாளர்கள் சுபா.  முற்றிலும்  மாறுபட்ட கதைக்களத்தில், விறுவிறுப்பான திரைக்கதை, எதிர்பாராமல் திகைக்கவைக்கும் அடுத்தடுத்து வரும் வசனங்கள் , ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் அறிவியல் மேதாவித்தனம்,  (கொஞ்சம் அதிகமாகவே) நெருங்கிப்பழகும் ஹீரோ-ஹீரோயின் -  என ஒரு  Complete Entertainer  ஆக அமைவதுதான்  சுபாவின் திரைப்படங்கள்   (  கனா கண்டேன், அயன் , கோ).  சுபாவைப்பற்றிய எனது முந்தைய கட்டுரையை படிக்க விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட சங்கிலியை பிடித்துக் கொள்ளலாம்.

Friday, March 16, 2012

உன் முகத்தில்...உன் முகத்தில் 
என் முகத்தை 
பார்க்கிறேன்...
உன் இரண்டு 
விழிகளில்...!

லிங்கேஸ்வரன் 

Sunday, March 4, 2012

ஒரு நதி ...வாழ்க்கை ஒரு நதி 
போல 
முன்னோக்கி 
ஓடிக்கொண்டே 
இருக்கிறது...
ஞாபகங்கள் மட்டும் 
மிச்சம் இருக்கின்றன...!

லிங்கேஸ்வரன் 

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)

Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what peopl...