Tuesday, February 21, 2012

ஜப்பானிய ஐந்து விதிகள்...கடுமையான உழைப்புக்கு பெயர்போன ஜப்பானியர்கள், எந்த ஒரு காரியத்தையும்  நேர்த்தியாக செய்யவும், தொழிற்சாலைகளில் உற்பத்தி தடங்கலின்றி விரைவாக நடக்கவும், உற்பத்தி திறனை (Productivity) பெருக்கவும்  எளிமையான ஐந்து விதிகளை வகுத்து வைத்திருக்கிறார்கள்.  உலகெங்கும் ஏறக்குறைய எல்லா மொழிகளிலும் மாற்றம் செய்யப்பட்டு  பெரிய பெரிய கம்பெனிகள் முதல் சிறுதொழிற்சாலைகள் வரை இவை  Japanese 5 s Principle என்ற பெயரில் பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த ஆலைகளிலே அதிகம் பின்பற்றப்படுகிறது. இந்திய திருநாட்டில் தேனி என்ற ஊருக்கருகில் உள்ள ஒரு சிறு இரும்பாலையில் கூட நீங்கள்  5 s principle என்ற போர்டை காணலாம்.  எளிமையான அந்த ஐந்து விதிகளை அலுவலகத்திலும், வீட்டிலும் கூட நாம் அமுல்படுத்தலாம். அவை:

1. தேவையற்றவைகளை அகற்றினேன் (Seiri). 
2. தேவையானவைகளை சீரமைத்தேன் (Seiton).
3. தினமும் சுத்தம் செய்கிறேன் (Seiso).
4. விதிமுறைகளை  கடைபிடிக்கிறேன் - மேற்கண்ட மூன்று மற்றும் இன்னபிற (Seiketsu).
5. பயிற்சியுடன் தொடர் முன்னேற்றத்தை காண்கிறேன் (Shitsuke).


தமிழர்களிடம் ஒரு பொதுவான குணம் உண்டு.   கையில் தங்கத்தை வைத்துக்கொண்டு வெள்ளிக்காக அலையும் மனோபாவம்தான் அது.   என்ன.....தங்கம் பொடியாக இருக்கிறது.  சற்றே சிரமப்பட்டால், ஆபரணமாக அணிந்து அழகு பார்க்கலாம். முடியாத காரியமா?  மேற்கண்ட  ஜப்பானிய விதிகள் ஒன்றும் பெரிய கண்டுபிடிப்பல்ல. சாதாரணமாக சிந்தித்தால் பொது அறிவுக்கு எட்டக் கூடியதுதான். நாம் கொஞ்சம் முந்திக்கொண்டிருந்தால்  Tamilian 5 s principle  என்றாயிருக்கும்.  திருக்குறள் என்றாலே ஸ்ஸப்பா என்கிறார்கள்.  மணிமேகலையில்  Evolution of universe -ஐ பற்றி பத்து வரிகளில் (கடைசி அத்தியாயங்களில்)ஒரு குறிப்பு உள்ளது.  MBA -ல் கற்றுக்கொடுக்கப்படும்  .Halo effect.-ஐ  ' உருவு கண்டு எள்ளாமை வேண்டும்'  என்ற குறளிலும்,  Delegation of authority- ஐ  ' இதனை இதனால் இவன்முடிக்கும் '  என்ற குறளிலும் வள்ளுவர் எழுதி வைத்திருப்பது, ஆங்கிலத்தை மட்டும் சிலாகிக்கும்  .sms  தமிழர்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1 comment:

  1. இதை இப்பொழுது சொல்லி என்ன பயன்? "தாயை போல பிள்ளை; நூலை போல சேலை" என்ற பழமொழிக்கு மாறாக பகுத்தறிவாளராக, தன்னையே அடக்கக திறன் மிக்க மாவீரராக, எல்லா நோய்களுக்கும் மருந்து செய்ய தெரிந்த மருத்துவராக, இருந்த நம் முன்னோர்களின் வம்சாவளிகள் இப்போது கோழைகளாக, குறுக்கு வழயில் செல்பவராக, செவிடர்களாக, குருடர்களாக, ஊமைகளாக, இருக்கிறார்களே...

    ReplyDelete

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...