Sunday, August 28, 2011

மனதில் அலைமோதும் கேள்விகள்...நீண்ட நாட்களாக சமூகத்தை பற்றி என் மனதில் அலைமோதிக் கொண்டிருக்கும் கேள்விகளை கீழே பட்டியலிடுகிறேன். கேள்விகள் என்னவோ எல்லோருக்கும் தெரிந்தவைதான்; பதில்களும் தெரிந்தவைதான். நான் அவற்றிற்கு ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன். சில கேள்விகளுக்கு பதில்கள் வெளிப்படையாக தெரியும்; சிலவற்றில் கேள்வியிலேயே பதில் தொக்கி நிற்கும்.


எப்படியானாலும் இதைப் படிப்பவர்களின் சிந்தனையை தூண்டுவதே என் நோக்கம். என் மேதைமையை காட்டிக் கொள்வதற்கோ, பல விஷயங்களை அறிந்தவன் எனக் காட்டிக்கொள்ளவோ இதை நான் எழுதவில்லை. சமூக பிரச்சனைகளையும், அவற்றிற்கான தீர்வுகளையும் பற்றி யோசிப்பதால் மட்டும் என்ன ஆகிவிட போகிறது என சிலர் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இயற்கை நியதியின்படி, ஒவ்வொருவரின் சிந்தனை அலைகளும், பண்பேற்றப் பட்ட நுண்ணிய அலைகளாக வானவீதியில் பரவி, பலரின் மூளைகளை தாக்கி அதே பண்பை அவர்களிடத்தில் ஊட்டுகிறது. இம்முறையில் இன்று நாம் சிந்திக்கும் சீர்திருத்தங்களானது - இன்று இல்லாவிட்டாலும் எதிர்கால சமூகத்திற்காவது பலனளிக்கும். ஆயிரம் வருடங்கள் போனாலும் உலகம் ஒரு அமைதிப்பூங்காவாக திகழும். அப்படிப்பட்ட ஒரு எதிர்கால் கனவு உலகு உருவாக இப்போதே நாம் ஒரு தீபத்தை ஏற்றி வைப்போம்.


என் கேள்விகள் பின்வருமாறு:


உலகில் ஏன் அமைதி இல்லை?


பயங்கரம் தெரிந்தும் ஏன் ஒவ்வொரு நாடும் அணுகுண்டுகளை வைத்திருக்கிறார்கள்?ஏன் பெரும்பாலோர் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்?இன்றைய இளைஞர்கள் ஏன் காட்டுமிராண்டித்தனமாக பைக்குகளை ஓட்டுகிறார்கள்?மது அருந்தும் இளைஞர்களின் எண்ணிக்கை ஏன் இன்று அதிகரித்து விட்டது?தமிழில் பேசுவதை கேவலமாகவும், ஆங்கிலத்தில் பேசுவதை உயர்வாகவும் ஏன் நினைக்கிறார்கள்?அரசியலில் நுழைவதற்கு ஏன் ஒரு குறைந்தபட்ச கல்வித்தகுதி கூட இல்லை?இறைவன் படைத்த பூமியை கூறுபோட்டு விற்க யார் மனிதர்களுக்கு உரிமை கொடுத்தது?தண்ணீரை எப்படி ஒருவர் விற்று பணமாக்கலாம்?ஒருவர் கல்லூரியில் படிக்கும் படிப்பிற்கும், செல்லும் வேலைக்கும் ஏன் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது?ஆங்கில மருத்துவத்தில் ஏன் புதிது புதிதாக மருந்துகளையும், அறுவை சிகிச்சை முறைகளையும் கண்டிபிடித்து கொண்டே இருக்கிறார்கள்?கார்ப்பரேட் கம்பெனிகளை போல ஏன் மருத்துவமனைகள் முளைக்கின்றன?டீக்கடைகள் அருகே ஏன் சில்லறைக் காசுக்காக மூதாட்டிகளும், முதியவர்களும் பிச்சை எடுக்கிறார்கள்?ஏன் முன்பு போல ஆபாசப் படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பவதில்லை?ஏன் இன்று மார்கெட்டிங் எசிகியுடிவ்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது?விவசாயிகளின் மகன்கள்/மகள்கள் எல்லோரும் ஏன் எல்லோரும் வேறுவேறு படிப்புகளுக்கு படிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள்?விவசாயம் நலிந்து விட்டால் யார் உணவு உற்பத்தி செய்வார்கள்?பிளஸ் டூவில் முதல் மதிப்பெண் பெறுபவர்கள் அனைவரும் ஏன் மருத்துவும், பொறியியலும் படிக்க போகிறார்கள்?


பிள்ளைகள் தானாகவே ஒழுக்கமாக வளரவேண்டும் என எப்படி பெற்றோர்கள் நினைக்கிறார்கள்?


ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு உருவானதுபோல காதல்கள் ஏன் இப்போது உருவாவதில்லை? இருந்தாலும் நிலைப்பதில்லை?நன்றி. வணக்கம்.


5 comments:

 1. All questions are reasonable and everyone should ask themselves..good

  ReplyDelete
 2. பிள்ளைகள் தானாகவே ஒழுக்கமாக வளரவேண்டும் என எப்படி பெற்றோர்கள் நினைக்கிறார்கள்?


  ..... mmmmmmm.....
  ஒவ்வொரு கேள்வியும் - சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

  ReplyDelete
 3. I accept what both people said from above.

  I've all answers for all questions. but no solutions.
  Even though I'm having solutions. How will that to be implemented?

  I think we came by a wrong way. we should correct it and better to find a right way.

  ReplyDelete
 4. அலட்சியத்தின் தவறால் பாதை மாறி வந்து இருக்கின்ற நமக்கு திரும்பி போக நேரம் இல்லை.
  அதற்கு மாறாக, வேறு ஒரு நல்ல வழியை கண்டுபிடிப்பது உசிதம்

  ReplyDelete
 5. இந்த கேள்விகளை சொன்னதற்கு மிகவும் நன்றி..............
  அனைத்து வினாக்களும் சிந்தனையய் தூண்டும் விதம் இருக்கிறது..........

  மிக்க நன்றி........நன்றி........நன்றி

  ReplyDelete

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...