Sunday, May 29, 2011

ஆழ்மனதில் பதிந்த ரேகா டீச்சர்...
எனக்கு பிடித்த திரையுல நடிகைகளின் பெயர்களை சொல்லும்போது என் நண்பர்களுக்கெல்லாம் பெரும்வியப்பாக இருக்கும். இப்படி ஒரு ரசனையா என நினைப்பார்கள். சிலர் கேட்டும் விடுவார்கள். அந்த நடிகைகளின் பட்டியல் இதுதான்: சரிதா, ஸ்ரீப்ரியா, பூர்ணிமா, அர்ச்சனா, ரேகா, சுவலட்சுமி. இதில் ரேகாவை தவிர்த்து மற்றவர்களை கவனித்தால் ஒருவித சாயல் ஒற்றுமை Resemblance தெரியும்.ரேகா நடித்த புன்னகை மன்னன், கடலோர கவிதைகள் மற்றும் அவர் வரும் சில பாடல்களை பார்க்க நேர்ந்தால் அப்படியே நின்றுவிடுவேன். எனக்கு ரேகாவை ஏன் மிகவும் பிடித்திருந்தது என்று நான் யோசித்ததே இல்லை.பிறகு ஒரு காலத்தில் உளவியல் பேரறிஞர் சிக்மண்டு பிராய்ட் அவர்களின் கருத்துக்களை படித்தபோதுதான் எனக்கு ஏன் ரேகாவின் மேல் ஈர்ப்பு வந்ததென அறிந்துகொண்டேன். குழந்தைபருவம் முதல் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள், பெறும் அனுபவங்கள் எல்லாம் ஒரு மனிதனின் ஆளுமை வளர்ச்சியில் (Development of Personality) தாக்கத்தையும், பாதிப்பையும் உண்டாக்குகின்றன எனப்தே அவரது கருத்து.நான் எல்.கேஜி மற்றும் யு.கேஜி - செல்லம்மாள் நர்சரி பள்ளியில் படித்தேன். அங்கு அப்போது எங்களுக்கு ஒரு டீச்சர் இருந்தார். குண்டாகவும் இல்லாமல் ஒல்லியாகவும் இல்லாமல் நடுத்தர உடல்வாகுடன் மாநிறத்தில் இருப்பார். அளவான பவுடர் அடித்த அவர் முகம், கருநிற கூந்தல், அழகான கண்கள் என பார்த்த உடனே மனதில் பதியும் உருவம் அந்த டீச்சருடையது. நானும், கண்ணனும் அங்கு படித்தோம். வாஞ்சையுடன் எங்களை கவனித்துக் கொள்வார். மெலிதான குரலில் பேசுவார். பிஞ்சு வயதில் அவர் என் மனதில் பதிந்ததில் ஆச்சரியமே இல்லை. சாயலில் நடிகை ரேகாவை போலவே இருப்பார்.என்னுடைய வீடு, டீச்சருடைய வீடு, எங்கள் பள்ளி எல்லாம் அருகருகில்தான் இருந்தது. ஒருதடவை என் வீட்டருகே ஒரு பெரிய வட்ட பட்டியில் கலர் கலராக சாயமிட்ட கோழிக் குஞ்சுகளை விற்றுக்கொண்டு இருந்தார்கள். பலவண்ணங்களில் அந்த கோழிக்குஞ்சுகள் அவ்வளவு அழகாக இருக்கும். என் அப்பாவிடம் இரண்டு கோழிகள் வாங்கி குடுப்பா....வளர்க்கலாம் என் கெஞ்சினேன். என் அப்பா வாங்கித்தரவே இல்லை. அதை பார்த்துக்கொண்டிருந்த டீச்சர்...அழுகாதப்பா.....நான் வாங்கித்தர்றேன் என்று கூறிக்கொண்டே அருகில் வந்தார். எனக்கு சந்தோசத்திற்கு அளவே இல்லை. திடீரென என் அப்பா.....அதெல்லாம் வேணாங்க.....டேய்.....சும்மா இருக்க மாட்ட .....என திட்டிக்கொண்டே என்னை அழைத்து சென்று விட்டார். எனக்கு செம கடுப்பாக இருந்தது.யு.கேஜி முடிந்தவுடன் அந்த பள்ளியிலிருந்து விலகி வேறுபள்ளியில் ஒண்ணாம் வகுப்பு சேர்க்க என் அம்மா முனைந்தார்கள். பள்ளியில் இருந்து கிளம்பும் போது....என் அம்மாவிடம் பையன நல்லா பாத்துக்கங்க....என் அன்போடு கூறினார். நான் மிகுந்த சோகத்தில் இருந்தேன். பாலு மகேந்திராவை போல் காதல் என்று சொல்லமுடியாவிட்டாலும் ரேகா டீச்சர் மேல் எனக்கு ஒரு பிரியம் இருந்தது. அதன்பிறகு ரேகா டீச்சரை எங்குமே பார்க்கவில்லை.இதுநடந்தது 1986-87வருடங்களில் . ஒரு பத்து வருடங்களுக்கு முன் என்னுடைய சின்னம்மாவின் ஹாஸ்பிட்டலில் நானும் என் அம்மாவும் உக்காந்திருந்தபோது ரேகா டீச்சர் வந்தார். அப்போது அவருக்கு முப்பைந்து வயதிருக்கும். நான் அடையாளம் கண்டுவிட்டேன். என் அம்மாவும், ரேகா டீச்சரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.....டீச்சர்....நான் உங்களிடம் படித்தேனே நினைவில்லையா.....நான் இப்போது பொறியியல் படிக்கிறேன்....என்ற வார்த்தைகள் தொண்டை வரைவந்து அப்படியே நின்றுவிட்டன.
Tuesday, May 24, 2011

Vision & Mission Statements - Management Concepts.மேனேஜ்மென்ட் உலகத்தில் அடிக்கடி தட்டுப்படும் Vision & Mission Statements பற்றி அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஒரு கார்பரேட் கம்பெனியின் வெப்சைட்டிலோ, பெரிய கல்வி நிறுவனங்களின் வெப்சைட்டிலோ பார்த்தீர்களானால் அதில் Vision & Mission என்று ஒரு Column இருக்கும். Vision & Mission Statements ஒரு கம்பெனியின் Strategic Planning எனப்படும் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திட்டமிடுதலில் ஒரு அங்கமாகும். அடுத்த ஐந்து வருடங்களில் புதிதாக பத்து கிளைகள் துவங்குவது, அடுத்த ஐந்து வருடங்களில் நிறுவனத்தின் சேல்சை இரண்டு மடங்காக எவ்வாறு ஆக்குவது போன்றவை Strategic Decision க்கு உதாரணங்களாகும். Vision & Mission Statements ஒரு நிறுவனத்தின் இலக்குகளை (Goals & Objectives) வரையறுக்கின்றன.


Mission Statement என்பது ஒரு நிறுவனம் ஆதாரமாக எந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளது என்பதை சுருக்கமாக கூறுகிறது. அதாவது என்னவிதமான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன அல்லது என்னவிதமான சேவைகள் தரப்படுகின்றன என்பதை வரையறுக்கிறது. மேலும் தங்களது வாடிக்கையாளர்கள் யார்யார், தங்களின் உற்பத்தி/சேவை அளிப்பில் எந்தவித சிறப்பம்சங்கள் உள்ளன, எந்தவித மேனேஜ்மென்ட்/ப்ரொடக்ஷன் உத்திகளை கையாளுகிறோம் என்ற குறிப்புகளும் Mission Statement -ல் தரபட்டிருக்கும். Mission என்பது Specific ஆக இருக்கும்.


Vision Statement , Mission Statement போன்றது அல்ல. Vision Statement எதிர்காலத்தை சார்ந்தது. Vision Statement is of long-term significance. எதிர்காலத்தில் நிறுவனம் இருக்கப்போகும் ஒரு உன்னதமான நிலையை- திருக்குறள் போல- ஒரு சில வரிகளில் கூறக்கூடியது Vision. ஆங்கிலத்தில் இதை Ideal State of the Organization என கூறலாம். Visionil கூறப்பட்டுதை சாதிப்பது மிகக்கடினம் என்றாலும், ஒரு நிறுவனம் அதை நோக்கியே நடைபோட முயற்சி செய்கிறது. தங்களது ஊழியர்களின் செயல்பாடுகள், உற்பத்தி போன்றவற்றை Vision .ஐ நோக்கியே அமைத்துக்கொள்கிறது.
Mission Statement, Specific ஆனது. ஆனால் Vision Statement சற்று பரந்துபட்ட Broader Meaning கொண்டது.


Vision & Mission Statements இரண்டும் வேறுபட்டவை அல்ல. Vision ஐ அடைய Mission உதவுகிறது. Mission ல் சொல்லப்பட்டுள உத்திகளை கண்டறிந்து கையாள Vision உதவுகிறது. ஒன்றில்லாமல் மற்றது இல்லை. இரண்டும் ஒரு நிறுவனத்தின் மேலாளர், ஊழியர்கள் ஆகியோரை Motivate , Inspire செய்ய உதவுகிறது. ஏனெனில் இவைதான் இலக்குகள்....அவற்றை இப்படித்தான் அடைய வேண்டும் என வழிகாட்டுவதால் வி.மி. Statements ஒரு நிறுவனத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை; பயனளிப்பவை. கம்பெனி முழுக்க ஆங்காங்கே சிறுசிறு போர்டுகளில் இவை பார்வைக்கு படும்படி மாட்டப்பட்டிருக்கும். வாடிக்கையாளர்களை கவரவும், நிறுவனத்தை பற்றி மனதில் ஒரு Clear Picture ஐ கொண்டு வரவும் இந்த Statements உதவுகின்றன.


நான் குவாலிட்டி மேனேஜ்மென்ட் என்ற ஒரு பரிட்ஷை எழுதும்போது Vision & Mission Statements தலா ஒரு உதாரணம் எழுதவும் என ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். எனக்கு அப்போது ஒரு நிறுவனமும் நினைவுக்கு வரவில்லை. கடைசியில் நானாக யோசித்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் Vision & Mission என சொந்தமாக எழுதினேன். உலகம் முழுவதும் போர், பஞ்சம், பசி இல்லாது அமைதியை கொண்டு வருவது Vision எனவும்----------போருக்கு பின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வது, மருத்துவ சேவைகள் செய்வது, பகை நாடுகளிடையே சமாதான பேச்சு வார்த்தை நடத்துவது பூசல்களை சரிசெய்வது போன்றவற்றை Mission ஆகவும் எழுதினேன். என்னுடைய பேப்பரை திருத்தியவருக்கு சமாதானமாகத்தான் இருந்திருக்கும் என நினைக்கிறேன். எழுபது மார்க் போட்டிருந்தார்கள்.

Monday, May 23, 2011

நான் கடவுளெனும்...
நான் உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்சொல்
----வார்த்தையின்றி வேறில்லை என்றார் ராமலிங்கர்.
நாவை எத்தனைமுறை அசைத்து கேட்டாலும்
----பார்த்தாலும் இறைவன் கண்ணுக்கு புலப்படுவதில்லை.
நானா நீயா என் வார்த்தை ஜாலத்தில் ஈடுபடும்
----தான் எனும் தன்முனைப்பை விட்டுவிட்டு- உள்ளத்தில்
நடனமிடும் எண்ண அலைகளை தியானத்தால் படிப்படியாக
----குறைத்து தானே அதுவாகியுணரும் சாதனையாலன்றி
நான் கடவுளெனும் புதிரான சொல்லின் பொருளறிய
----வேறுவழியே இல்லை. சித்தர்கள் கண்ட உண்மை.


- லிங்கேஸ்வரன்

Tuesday, May 17, 2011

அன்னைபோல்...


கண்கள் வழியாக நுழைந்து உயிரில் நிறைந்தவள்..
மின்னெலென சிந்தனையில் தோன்றி மறைபவள்..
சின்ன பிம்பமாக உள்ளத்தில் பதிந்திருந்தாலும்...
பின்னமென நான் தனித்து இருக்கையில்...
அன்னைபோல் சேர்த்தணைத்து முழுமைஆக்கினாள்
------------------------------------------------------------------------ என்னை !


Monday, May 16, 2011

நிலா...நிலாவுக்கு எதற்கு
அலங்காரம் - ஒப்பனை
இலாத உன்னுடைய
முகமே ஸ்ருங்காரம் !
---------------------------------------------------------------------------------------------------

Saturday, May 14, 2011

எது அழகு? - ஒரு மறுபார்வை.சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நீயா நானா? நிகழ்ச்சியில் எது அழகு? என்பது போன்றதொரு தலைப்பில் ஒரு விவாதம் நடைபெற்றது. ஒவ்வொரு பார்வையாளரும் ஒவ்வொருவிதமாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். அதில் அர்ச்சனா என்ற ஒரு பெண் கூறிய கருத்து என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் கூறியது என்னவென்றால், அழகு என்பது நமக்கு நாமே மனதில் உருவாக்கி கொள்ளும் அல்லது உருவாகும் அபிப்ராயமே தவிர வேறொன்றுமில்லை என்றார்.


இதையொட்டி சிலநாட்கள் தொடர்ந்து நான் சிந்தித்து வந்தபோது எனக்கு சில சமூகநல நோக்கமுடைய கருத்துகள் கிடைத்தன. அவற்றை அனைவரோடும் பகிர்ந்து கொள்கிறேன்.


அழகு என்ற அபிப்ராயம் ஒவ்வொருவர் மனதிலும் உருவாகுவதற்கு சினிமாக்களும், நாடகங்களும், விளம்பரங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இவ்வகையான கூத்துக்களில் நடிக்கும் நடிகர்களும், நடிகைகளும் கோடிக்கணக்கான பணத்தை கூலியாக பெற்றுக்கொண்டு, வெட்கத்தை விட்டு, தங்களை கவர்ச்சியாகவும் திருத்தமாகவும் அலங்காரம் செய்துகொண்டு நடிக்கிறார்கள். ஆனால் உண்மையான தோற்றம் காணவே சகிக்காது. இந்த சினிமாக்களை தொடர்ச்சியாக பார்க்கும் மக்கள் , குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள், அவற்றில் மனம் லயித்து விடுகிறார்கள். அவற்றை உண்மை எனவே அடிமனதில் நம்பிவிடுகிறார்கள். இதுதான் அழகு, இதுதான் இன்பம் என்பதுபோன்ற அளவுகோல்களையும், ஒப்பீடுகளையும், அபிப்ராயங்களையும், முன்மாதிரிகளையும் மனதில் உருவாக்கிகொள்கிறார்கள். உதாரணமாக, இன்றைய கல்லூரி பெண்களுக்கு நடிகர் சூர்யாவை பிடித்திருக்கிறது. நாம் அழகை பற்றி மனதில் முன்கூட்டியே உருவாக்கிக்கொள்ளும் கருத்துகள் உண்மையான அழகை உணர்வதற்கு, ரசிப்பதற்கு, அனுபவிப்பதற்கு தடங்கலாக , மனதில் முடிச்சுகள் போல அமைந்துவிடுகின்றன.


ஆனால் உண்மை என்ன? ஒரு ஆணும் பெண்ணும் உடலோடு உடல் உரசும்போதும், சரசம் செய்யும்போதும், முத்தமிடும்போதும் உண்டாகும் இன்பம் எல்லா நாட்டினருக்கும், எல்லா இனத்தவர்க்கும் ஒன்றுதான்; பொதுவானதுதான். இதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. ஆனால் அழகைப்பற்றிய மனமுடிச்சுகள் உண்மை அழகை, இன்பத்தை உணரவொட்டாமல் செய்துவிடுகின்றன. இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம் என்பதைப்போலவே எல்லோருமே அழகானவர்கள் தான்.


ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது என்று வைத்துகொள்ளுங்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவளுக்கு அழகில்லை அல்லது அழகு குறைச்சல் என்று சமுதாயத்தால் அறியப்படுவது ஒரு காரணம். இதை யாரும் வெளிப்படையாக சொல்வதில்லை. இருந்தபோதிலும் யாரும் மறுக்க முடியாதல்லவா? எனக்கென்ன...இதெல்லாம் அவரவர்கள் பாடு....என பொதுவாக மக்கள் ஒதுங்கி கொள்கிறார்கள்.


ஆனால் இறைவன் ஒதுங்கி விடுவதில்லை. ஒவ்வொரு மனிதமனத்தின் அடித்தள ஆற்றலாக இறைவனே இருப்பதால் , மனிதனின் எண்ண அலைகளுக்கு பேராற்றல் உண்டு. காலாகாலத்தில் திருமணமாகாத ஆண் பெண்களின் எண்ண அலைகள் பிரபஞ்ச வெளியில் பரவி , சகமனிதர்கள் ஒவ்வொருவரையும் தாக்கி ஒரு சிறு பாதிப்பையாவது உண்டாக்கிவிடுகிறது. அன்பே சிவம், அன்பே கடவுள் இந்த வாக்கியங்களை என் கட்டுரைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டிவருகிறேன். அன்பு என்ற உணர்வு ஒருவகையான பாய்மப்பொருள் போன்றது. ஓரிடத்தில் நிற்காமல் பாய்ந்தோடக்கூடியது. அதனால்தான் வள்ளுவர், ' அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ' என்கிறார். இயல்பாகவே மனிதமனத்தில் அன்பு நிறைந்திருக்கிறது.
வயதுக்கு வந்தபின் அன்பு பாய்ந்தோட வாழ்க்கைத்துணை வேண்டுமல்லவா? அதற்கு சந்தர்ப்ப சூழ்நிலைகளும், வாய்ப்பு வசதிகளும் கூடிவர வேண்டும். அழகை பற்றிய தவறான கருத்துக்களால் திருமணம் தடைபடுகிறது. அன்பு அடைபடுகிறது ; அடைபட்ட அன்பென்ற உணர்வு மனப்புழுக்கம், எரிச்சல், விரக்தி போன்ற மனக் குறைகளாக உருவெடுக்கிறது.


அழகைப்பற்றிய கற்பனையான எதிபார்ப்புகள், கவர்ச்சி, அலங்காரம், சினிமாக்கள் இவற்றை சமூகத்திலிருந்தே ஒழிக்க வேண்டும். திரைப்படங்களை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும் யதார்த்தமான திரைப்படங்களை எடுக்க ஊக்கமும், ஆக்கமும் அளிக்க வேண்டும். அப்போதுதான் கிடைத்தற்கரிய இவ்வரிய மானிடபிறவியை முறையாக,நிறைவாக அனுபவிக்க முடியும். எப்படியானாலும் இதுபோன்ற திட்டங்களை படிப்படியாகத்தான் நடைமுறைக்கு கொண்டுவரமுடியும்.


நிறைவாக: அழகு என்பது மனதில் உருவாகும் ஓர் ஒப்பீட்டு அபிபராயமே தவிர நிலையான பொருளல்ல. அனுபவங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், பழக்கம் ,குணம் இவற்றிற்கேற்ப அழகு மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக, நாம் முதன்முதலில் சந்திக்கும் நண்பர்கள் அழகில்லாதவர்கள் போல தோன்றினாலும் அவர்களுடன் பழக பழக ,தோற்றம் மறைந்து நாளடைவில் அழகாகவே தெரிவ்வர்கள். இதற்கு காரணம் அவரகளுடன் தொடர்பு கொள்ள கொள்ள , இருவரிடையே ஒத்திசைவு ஏற்பட்டு, நாம் அவர்களின் வாயிலாக பெறும் அனுபவங்கள் மனதில் இனிமையான் எண்ணத்தை உருவாக்கி விடுகின்றன. இது ஒவ்வொருவர் வாழ்விலும் நடக்க கூடியதுதான்.


இதற்குமேல் விரிவாக, ஆழமாக சிந்தத்து நடைமுறைத் திட்டங்களை வகுக்கவேண்டியது அறிஞர்கள், சிந்தனையாளர்களின் கடமையாகும். அறிஞர்கள், சிந்தனையாளர்கள் என்றால் யாரோ அல்ல. நாம்தான் சிந்தனையாளர்கள். சிந்திக்கும் ஆற்றல் பெற்ற அனைவருமே சிந்தனையாளர்கள்தாம். எனவே வருங்கால உலகம் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ ஒவ்வொருவரும் தங்கள் பொன்னான நேரத்தில் சிறிது செலவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Monday, May 9, 2011

தேவதை...


தேவதை என உன்னை அழைக்கிறேன்.
----இது அதிகம் என்கிறாய் - உந்தன் பின்னால்
போவதையும், வேண்டாம் யாராவது பார்த்தால்
----தவறாக நினைப்பார்கள் என்கிறாய்.
சாவேன் உனக்காக என்று நான் உளறினால்
----பைத்தியமா நீ. அதெல்லாம் வேண்டாம்- ஊடும்
பாவும் இழைகள்போல இணைந்தே வாழ்வோம் என்கிறாய்!

-லிங்கேஸ்வரன்.

Wednesday, May 4, 2011

காதலை கற்று மறக்கமுடியவில்லை...காதல்

பேதையில்
தொடங்கி
போதையில்
முடிவது...!
------------------------------------------------------------------------------------

களவும்
கற்று மற
என்றார்கள்.
காதலை
கற்றேன்...
மறக்கமுடியவில்லை.....!

- ஆண்டனி லோரத்.

Sunday, May 1, 2011

வாழ்க பாட்டாளிகள் !பொருட்களும் உணவுமின்றி மனிதவாழ்க்கை இல்லை-எல்லா
பொருட்களும் பாட்டாளிகளாலே உருவாகின்றன-எனினுமொரு
பொருட்டாகவே பாட்டாளிகளை மதிக்காதநிலைதான் உலகில்.
பொருள் உற்பத்தியை ஒருநாள் நிறுத்திவிட்டால் என்னவாகும்?
பொருளும் உணவும் தாராளமாக பாட்டாளிகளுக்கு கிடைத்து
பொருமலின்றி அவர்களும் மகிழ்வோடுவாழ திட்டம்வகுப்போம்!


-லிங்கேஸ்வரன்.

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்ச...