Wednesday, March 30, 2011

சச்சின் - உலகக்கோப்பை கவிதை !
சிறுவனாக இருந்தபோது மட்டையை பிடித்தாய்.
-----புயல்போல வேகம் கொண்டு
சீறிவரும் பந்துகளைக் கண்டு மிரண்டு போனாய்.
-----நிதானமாக அசலாக உன்னை அடையாளம் காட்டி
விறுவிறுவென எதிரணியினரை மைதானத்தில் ஓடவிடடு
-----ரன் இயந்திரம் எனப்பெயர் எடுத்தாய்.
வறுத்தெடுக்கும் செம்மையான ஆட்டத்தால் சாதனைகள்
-----ஒவ்வொன்றாய் அடுக்கிக் கொண்டே செல்கிறாய்.
சிறுகசிறுக உனக்குள் சேர்ந்த உலகக்கோப்பை
-----கனவு இன்னும் உறங்கிவிட வில்லை.
நீறுபூத்த நெருப்புபோல் உன்மனதில் காத்திருக்கும்
-----அந்த எண்ணம் தனித்தது இல்லை.
நூறுகோடி பேரின் எண்ணங்கள் அனைத்தும்
-----சூட்சுமமாய் உன்னோடு சேர்ந்து கொள்ளும்.
பிறப்பது கடினம் உன்னைப்போல் ஒருவன் என
-----எதிர்கால உலகம் சொல்லும் - உன்
ஒருவனுக்காக இந்தியா உலககோப்பையை வெல்லும் !


-லிங்கேஸ்வரன்.
.

Tuesday, March 29, 2011

Tamilnadu - A Holy Land !Tamilnadu
The Land - the hub of spiritual legacy ;
The Land - the crux of cultural supremacy ;
The Land - bunched with the soils of rich minerals ;
The Land - blessed with sizzling breeze & soft sun ;
The Land - cursed with the poverty, the poverty of virtues !


- Lingeswaran.

Sunday, March 27, 2011

சாந்தி முஹுர்த்தம் என்றால் என்ன?


நானும் என் அன்பிற்குரிய நண்பர் சங்கரும் கேண்டீனில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தோம். கிடைக்கும் சிலநிமிடங்களில் இருவரும் மனம் விட்டு பேசிக்கொள்வது வழக்கம். அப்போது சங்கர் மெதுவான குரலில் என்னிடம்.....அண்ணே.....அன்னிக்கு நீங்க பசங்க கூட பேசிக்கிட்டு இருக்கும்போது சாந்தி முஹுர்த்தம் பத்தி என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தீங்கல்ல.....ஞாபகம் இருந்துச்சு யோசிச்சு பாத்தேன் மறந்து போச்சு. கொஞ்சம் திருப்பி சொல்லுங்க என்றார்.சிலநிமிடங்களே இருந்ததால் சுருக்கமாக பின்வருமாறு கூறினேன். அனைவரும் குழந்தைகளாக பிறக்கிறோம். பதினான்கு வருடங்கள் வரை ஒன்றும் தெரிவதில்லை. பதினாலு பதினைந்து வயதில் குறிப்பிட்ட சில ஹார்மோன்கள் உடலில் சுரக்க ஆரம்பிக்கின்றன. அப்போதுதான் பிரச்சினையே துவங்குகிறது. என்னவெனில், ஒரு பெண்ணையோ ஆணையோ வெளியிலிருந்து பார்த்தால் சாதாரணமாக காட்சியளிக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மனித உடல் ஒரு பாத்திரம் போன்றது. அதில் நிறைந்திருக்கும் நீரைப் போன்றதுதான் ஒவ்வொருவரின் மனமும். அந்த நீரில் எழும் அலைகளைப் போன்றதே மனதில் எழும் எண்ணங்கள் அனைத்தும். ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுந்து மோதிக்கொண்டிருக்கும் இடைவிடாத எண்ண அலைகளை அவரவர்களே அறிவர். ஒரு ஆண் அல்லது பெண்ணின் பருவ வயதில் காதல் உணர்வுகள் தானாக மனதில் எழுந்து கொந்தளிக்கத் துவங்குகின்றன. அவைகள் அவ்வபோது ஓய்வேடுத்தாலும் நிரந்தரமாக நிற்பதே இல்லை. யாரிடமும் அவை தெரியும்படி வெளிப்படுவதும் இல்லை. ( நன்றி : சிக்மண்ட் பிராய்டு ). இவ்வாறு உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இரண்டு ஆன்மாக்கள் உடலாலும் உள்ளத்தாலும் ஒன்றிணைந்து சாந்தி (அமைதி) பெறுவதே சாந்தி முஹுர்த்தம் என்கிற புனிதமான நிகழ்ச்சியாகும் என்று முடித்தேன். அண்ணே...கலக்கிப்புட்டீங்க...என்றார் சங்கர். ட்ட்ட்டிரிங்....

அடுத்த வகுப்பிற்கு பெல் அடித்தது.

Wednesday, March 23, 2011

Why not money can be eradicated from the society?
There is a common and widespread notion among people that money is everything. But, in real, money is the root cause for all problems, conflicts and miseries at all levels - from family, national and international level. Money is only the token of labour - a simple statement that can be easily comprehended by anyone. We, all human beings, need commodities and facilities to survival. For producing commodities and facilities, we need physical and mental labour (work) of the people.


Commodities are produced, Facilities are made available to the people only by physical or mental work that is rendered by the same people. i.e, people from society. Everyone's life is inevitably interconnected looking in this way. In the Commodities - Labour Chain , money (currency and coins) has been introduced and the monetary system has been incorporated only in order to avoid the inconveniences faced during the various ages of the development of the mankind. But today, as each one witnesses, money/monetary system brings forth lot of chaotic situations in all levels be it social, economical or psychological.


Now, we are living in the computer era - the peak of intellectual development. So, Why can't the monetary system be totally scrapped or eradicated from our life by proper planning and thinking. Some of may say that this idea is impossible & impractical or even ridiculous. But it is only on deep pondering that one will come to know, this plan is practical and highly beneficial to the society.


I will give you a simple example. Now a days, we use debit cards and credit cards to purchase products. How are we doing it? While using these cards, we have no money at all in our hands. (Later, we pay it or the amount get debited. But see how far the system has evolved a change according to our convenience.) The idea of eradicating the monetary system which has been advocated in the above paragraphs is fulfilled to the half - in the case of debit/credit cards. Isn't it? Then, why can't we fulfill it fully? Money can be directly replaced by the human labour for producing goods and services.


I have given a very fundamental, short and preliminary idea only. I request the readers of various disciplines and the scholars of Economics, Sociology and Psychology to consider this idea as a basis and develop it further and provide a elaborate, complete and clear format along with the suitable modifications if any - for the welfare of the entire world society.


- Lingeswaran.

Monday, March 21, 2011

Complex is the Life !
Life is like a puzzle ;
Life is a mystery ;
No one knows what happens
in next seconds ;
Life is like a hide & seek game ;
Everyone plays for their
own self alone !


- Lingeswaran.

Tuesday, March 15, 2011

கண்கள் மூடிய புத்தர் சிலை...
அழகான புத்தர் சிலை
ஒன்றை பரிசளித்தேன்
அவளுக்கு...
அவள் மேல்கொண்ட
அளவற்ற ஆசையால் !


- லிங்கேஸ்வரன்.

Monday, March 7, 2011

அடுத்த பதிவு...
ஹீமோகுளோபின் - தெய்வத்தின் வியப்பூட்டும் மூலக்கூறு வடிவமைப்பு !

Wednesday, March 2, 2011

காவலன் - கோடை வெயிலில் ஒரு நிழல்!
போன வாரம் நானும் நண்பர் ஒருவரும் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தோம். நான் பயணம் போலாமா என்றேன். அவர் காவலன் போலாமா என்று கேட்டார். அப்போதுதான் எனக்கு காவலன் ஓடுவதே நினைவுக்கு வந்தது. படம் சுமாராகத்தான் போகிறது என்று கேள்விப்பட்டதால் அதை நான் அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. தியேட்டரில் போய் உட்கார்ந்தவுடன் எனக்கு கொட்டாவி வரத்துவங்கியது. பிரண்ட்ஸ் படம் எனக்கு மனதிலே இருந்தததால் சித்திக் படம் என்று எனக்கு ஆர்வமே வரவில்லை. பிரண்ட்சில் வடிவேலுவின் கூப்பாடு மிகவும் எரிச்சலை வரவைக்க கூடியது. அதே ஞாபாகத்தில் லேசாக தூங்க ஆரம்பித்துவிட்டேன். சிறிதுநேரத்தில்...ஆகா...ஏதோ ரொமான்ஸ் தெரிகிறதே....என நிமிர்ந்து உட்கார்ந்தேன். படம் போக போக என் மனது பதினைந்து வருடங்கள் பின்னோக்கி போக துவங்கியது. கடைசியில் திரையை மூடும் வரை எழுந்திருக்கவே இல்லை.அப்பாடா.....என்றிருந்தது.அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனெனில் கடைசியாக நான் பார்த்த மூன்று படங்கள் அப்படி. ஈசன், ஆடுகளம், யுத்தம் செய் என்பவைதான் அவை. ஒவ்வொரு படத்திலும் என்னவிதமான ஆயுதத்தை பயன்படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல. கேட்டால் சமூகத்தில் நடக்கிறதைதானே எடுக்கிறேன் என்பார்கள். ஏசுவின் காலம் தொட்டே.....ஏன் ஆதிகாலம் தொட்டே சமூகத்தில் அக்கிரமங்களும், அநியாயங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டினால் என்னவாகும்? மனிதன் எப்போதும் பழக்கங்களுக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமை. வேதாத்திரி மகரிஷி, மனிதனில் அடங்கியுள்ள மிருககுண பதிவுகள் சந்தர்ப்ப சூழ்நிலை வாய்த்திடில் எப்போதும் எழுச்சிபெற்றுவிடும் என்று எச்சரிக்கிறார்.இப்போது நடுநிசி நாய்கள் வெளிவந்துள்ளது. கதையெல்லாம் சரிதான். கேட்டால் சிக்மன்ட் பிராய்ட், ஜெயகாந்தன் என்பார்கள். இதுபோன்ற கதையையெல்லாம் சினிமாவாக எடுக்கும்முன் கெளதம் மேனன் சற்று யோசிக்கவேண்டும். நடுநிசி நாய்கள், வேட்டையாடு விளையாடு போன்ற சைக்கோ கதைகளை எதிர்கொள்ள நல்ல மனப்பக்குவமும், சிறிது மனோத்தத்துவமும் தெரிந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டில் எத்தனை இளம்பையன்களும், பெண்களும் பார்ப்பார்கள்? அவர்களுக்கெல்லாம் என்ன தோன்றும்? கெளதம் மேனன் தன் வீட்டுப் பிள்ளைகளையும் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்.


இதுபோன்ற ஒரு இக்கட்டான தருணத்தில்தான் காவலன் பார்த்தேன். வெயிலில் அலைந்தது திரிந்து கொண்டிருக்கும் ஒருவனுக்கு ஒதுங்க நிழல் கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி குளிர்ச்சியாகவும், இதமாகவும் மனதிற்கு இருந்தது. பள்ளிப் பருவங்களில் விஜய் என் மனதிற்கு நெருக்கமாகவே இருந்தார். விஜயைப் போல நளினமான அசைவுகளுடன் நடனமாடும் ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை.பழைய படங்களில் காமெடி சீன்களில் ஆங்.......என்பார். செம நக்கலாக இருக்கும். பக்கவாட்டில் கிடைமட்டமாக கைகளை நீட்டிக் கொண்டு, தலையை இருபுறமும் ஆட்டுவது விஜய் ஸ்டைல். பூவே உனக்காகத்தான்...அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.

உன்னை நீங்கி எந்நாளும்
எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு
ஜென்மம் ஒன்று போதாது.
உன்னை என்னும் உள்ளத்தில்
வேறு எண்ணம் தோன்றாது.
காற்று நின்று போனாலும்
காதல் நின்று போகாது....... இந்த வரிகள் இன்றும் நடுத்தரவர்க்க காதலர்களிடையே உலவுகிறது என்றே நினைக்கிறேன். அந்த பாடலில் வரும் ' மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது...சோகம்கூட சுகமாகும்....வாழ்க்கை இன்ப வரமாகும்......' என்ற வரிகளை கேட்கும்போது மனதில் ஏதோ நெருடலாக இருக்கிறது.


நான் பதினொன்றாவது படிக்கும்போது என நினைக்கிறேன். ஒருநாள் சைக்கிளில் ஸ்கூலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது ஒரு போஸ்டரில் விஜயும், ஒரு பெண்ணும் கடற்கரை மணலில் உட்கார்ந்திருந்தார்கள். அந்த பெண் சோகமான முகத்துடன் இருந்தார். சராசரியான முக லட்சணத்துடன் இருந்தாலும் எனக்கு அந்த நடிகையை பிடிந்திருந்த்தது. பக்கத்து வீட்டுப்பெண் போன்ற முகம். ஸ்கூலுக்கு சென்றவுடன்தான் தெரிந்தது....அது வேறு யாருமல்ல...ஷாலினிதான் என்று. அந்த படம் காதலுக்கு மரியாதை. காதலுக்கு மரியாதையில் தான் எல்லாமே துவங்கியது. படம் சூப்பராக இருக்கிறது எனக் கேள்விப்பட்டு முதல் வாரமே சென்றுவிட்டேன். முதல் இரண்டு தடவை டிக்கட்டே கிடைக்கவில்லை. மூன்றாவது தடவை அடித்து பிடித்து கவுண்டருக்குள் கையை விட்டுவிட்டேன். வெளியே எடுக்கும்போது டிக்கட் வரவில்லை. கைகளில் சிராய்ப்பு தான் இருந்த்தது. பிறகு திட்டமிட்டு, முன்கூட்டியே சென்று, டிக்கட் எடுத்து நான்கு தடவையோ ஐந்து தடவையோ தியேட்டரிலயே படத்தை பார்த்துவிட்டேன். அதற்கும் காரணம் இல்லாமலில்லை. ' என்னை தாலாட்ட வருவாளோ.....' என்ற பாடல்தான் அனைத்திற்கும் காரணம். ஒரு பெண்ணின் இதழை சுவைத்த ஆண் மகன் போல...அந்த பாடலுக்காகவே மீண்டும் மீண்டும் கா.மரியாதையை பார்த்தேன். ஹரிஹரனின் தேன்சொட்டும் குரலும், இளையராஜாவின் இசையும் அப்போதுதான் எனக்கு நன்றாக அறிமுகமாயின.


என்னைத் தாலாட்ட வருவாளோ......இந்த வரிகளை இசையுடன் கேட்கும்போது என் உள்ளத்திலும், உடலிலும் ஒரு இனம் புரியாத உணர்வு பரவும். காதல் உணர்வு என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வித்தியாசம் இருந்தது. அதற்கு விடை நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும்போது தெரிந்தது. அப்போது நானும், எர்ணாகுளத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் நெருக்கமான நண்பர்களாக இருந்தோம். நெருக்கமேன்றால் இரண்டு அடிகள் தள்ளிதான். ஒருநாள் கேண்டினில் டீ சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அந்தப் பாடலை நான் புகழத் துவங்கினேன். அப்போது என் சிநேகிதி அப்பாடலை பற்றி கூறிய ஓரிரு வார்த்தைகள்....ஒரு பெண்ணின் வாயிலிருந்து வருமென நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ' ஒருநாள் வீட்டுக்கு வெளியே கோலம் போட்டிகொண்டிருக்கும்போது....இதயம் துடிக்கும் ஓசையுடன் ன...ன...ன....என ஒரு வசீகரிக்கும் பாட்டு டிவியில் ஒலிக்கத் துவங்கியது. உடல் முழுவதும் ஆயிரமாயிரம் வண்ணத்து பூச்சிகள் பறப்பதை போன்ற உணர்வு உண்டானது. நான் வயதுக்கு வந்தபின் என் உடலில் என்னவித உணர்வுகள் வந்தனவோ அதைப் போன்று இருந்தது....ஒருவேளை நான் வயதுக்கு வராமல் இருந்திருந்தால்...அப்பாடலை கேட்கும்போது கட்டாயம் வயதுக்கு வந்திருப்பேன்....;. என்றார். நான் சில நொடிகள் திகைத்து விட்டேன். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. நான் பதிலேதும் கூறவில்லை. ஏனெனில் என்னைத் தாலாட்ட வருவாளோ.....என்ற மயக்கும் பாடலைக் கேட்கும்போது எனக்கும் அப்படித்தான் இருந்தது. நீண்ட நாட்களாக என் உள்ளத்தில் இனம் புரியாமல் அடைத்துக் கொண்டிருந்த உணர்வுகள் வார்த்தைகளாக என் தோழி மூலம் வடிவம் பெற்றன.


விஜய் உண்மையில் ஒரு சிறப்பான நடிகர். நிச்சயமாக விஜய் ஒரு ஆக்சன் ஹீரோ அல்ல. கார்த்திகைப் போன்ற ஒரு ஸ்மார்ட்டான நடிகர். முழுநீள ஆக்சனைக் காட்டிலும் சிறிது ஆக்சன், நிறைய ரொமான்ஸ், துறுதுறுப்பான நடிப்பு, கொஞ்சம் காமெடி இவை கலந்த கதைகளில் விஜய் கலக்கிவிடுவார். புதிய கீதை அதற்கு ஒரு உதாரணம். காவலன் போன்ற படங்களை அவர் அவ்வப்போதுவாது செய்யவேண்டும். வாழ்க்கையே பெரும்பாலும் அனேக பேருக்கு போராட்டம் நிறைந்ததாகவே இருக்கிறது. இதற்கிடையில் சினிமாவிலும் ரணகளமா?.....காவலன் மாதிரி படங்களை பார்த்து என்னைப் போன்ற ஆட்கள் மூச்சு விட்டுக் கொள்வோம். நீண்ட நாட்களுக்கு பிறகு மகிழ்ச்சியாகவும், பீலிங்க்சாகவும் தியேட்டரை விட்டு வெளியே வந்தேன்.

ஒருவருக்கு குரு அவசியமா?

இன்றைய காலகட்டத்தில் குருஜி, சுவாமிகள் போன்ற வார்த்தைகளை பகுத்தறிவாளர்கள் நையப்புடைத்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் குரு என்...