Saturday, June 16, 2018

நண்பர்களே !


என்னிடம்

1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF)
2. உளவியல் உண்மைகள் (PDF)
3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF)

என்ற மூன்று குறுநூல்கள் PDF Format -ல் உள்ளன.  அவற்றைப் பற்றிய சிறுகுறிப்பு பின்வருமாறு:

உளவியல் உண்மைகள் (PDF)
கடினமான விஷயங்களை எளிமையாகவும், விரிவாகவும் விளக்க முயற்சித்துள்ளேன்.
இப்புத்தகம் உங்களுக்கு கீழ்கண்ட வழிகளில் பயனளிக்கும்:-

1. உங்கள் மனதை பற்றி நீங்களே ஆராய்ந்து, அமைதியாக வைத்துக் கொள்வதற்கும்,
2. மனக் குழப்பங்களிருந்து விடுபடவும்
3. பிறரை புரிந்துகொண்டு அவர்களை கையாள்வதற்கு
உதவிபுரியும். 

 தந்த்ரா யோகம் - ஓர் அறிமுகம் (PDF)
இந்த PDF நூல் " தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை - ஆசிரியர்: போதி பிரவேஷ் " என்ற தலை சிறந்த நூலின் அறிமுக உரையாகும். மேலும் தந்த்ரா யோகம் பற்றி ஓர் தெளிவான சுருக்கமான அறிமுகத்தை இக்கட்டுரை உங்களுக்கு தரும்.

திருமணமான ஆண் பெண்கள், திருமணம் ஆகப்போகிறவர்கள்மற்றும் பொதுவாகவே அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்இது. உங்கள் இல்லற வாழ்க்கையை மட்டுமல்லாமல் , உங்களுடைய மன நலம் , உடல் ஆரோக்கியம், நிதி வசதி , நல்லநண்பர்கள் உறவுகள் ஆகியவற்றையும் கொண்டுவரக்கூடிய பல ஆலோசனைகளை இக்குறுநூல் உள்ளடக்கியுள்ளது.


 காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF)
சித்தர்களின் உருவாக்கிய பயிற்சியான காயகற்ப யோகத்தை மீட்டெடுத்து மறுவடிவு தந்தவர் தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஆவார்.

காயகற்ப யோகம் உடலை உறுதியாக்கும், காயகற்ப யோகம் உடலின் காந்த சக்தியை தூய்மைப்படுத்தும், நல்ல எண்ணங்களை இயல்பாகவே உருவாக்கும். காயகற்ப யோகம் இளமையான தோற்றம் தரும். காயகற்ப யோகம் நாட்பட்ட நோய்களை படிப்படியாக தீர்த்து வைக்கும். காயகற்ப யோகம் தாம்பத்திய உறவில் புது திருப்பத்தை உண்டாக்கும்.
________________________________________________________________________
இந்த மூன்று குறுநூல்களும் உங்கள்  குடும்ப அமைதியில், இல்லற வாழ்க்கையில், சிந்தனை முறையில் ஒரு நல்ல மாற்றத்தை நிச்சயமாக கொண்டுவரும் என் உறுதியாக நம்புகிறேன்.நண்பர்கள் இவற்றை பொறுமையாகவும், ஆழ்ந்தும் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இம்மூன்று PDF நூற்களை பெற விரும்புவோர் கீழ்கண்ட  வங்கிக்கணக்கில் நன்கொடையாக  ரூ. 100 /-  மட்டும் செலுத்திவிட்டு,  lingeswaran.balu@gmail.com  என்ற Email முகவரிக்கு " 100 / Book "  என ஒரு Message அனுப்பினால் , அவை மூன்றும் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Bank Details :-
Name : P.Lingeswaran,
Branch:  Karur Vysya Bank, R.M.Colony, Dindigul.
Account Number:  1791155000032837
IFSC Code : KVBL 0001791


Monday, April 23, 2018

எனக்குப் பிடித்த கடவுள் . .

ஒவ்வொருவருக்கும் மனதிற்கு பிடித்த சினிமா நடிகர், நடிகை ஒருவர் இருப்பது போல, கடவுள்களில் எனக்கு மிகவும் பிடித்த கடவுள் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஒவ்வொரு சிலைக்கு பின்னாலும் ஒரு கதை ஒளிந்துள்ளது. விக்ரகங்கள் என்பவை உண்மையா புளுகா என்பது வேறு விஷயம். ஆனால் அக்கதையில் வரும் கதாபாத்திரங்களுக்கு என தனிப்பட்ட சில குணாதிசயங்கள் வழங்கப்பட்டுள்ளன. அப்படி பார்த்தால் , ஆஞ்சநேயர் பின்வருமாறு Describe செய்யப்படுகிறார்:-  வலிமையான உடல், மனோதிடம் பெற்றவர், எதையும் செய்து முடிப்பவர், பிரம்மச்சாரி , நன்றியுணர்வு மிக்கவர், துடுக்கானவர். ஆஞ்சநேயர் வடிவமே அலாதியானது. பல உளவியல் அறிஞர்கள் (Ralph Waldo Emerson ) கூறியுள்ளபடி, ஒரு மனிதன் எதை அடிக்கடி நினைக்கிறானோ -அதே தன்மைகளை உடலிலும் மனதிலும் பெற்றுவிடுகிறான். இன்றைய காலங்களில் கர்ப்ப ஸ்தீரிகளுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில் விவேகானந்தர், அப்துல் கலாம் போன்றவர்களின் உருவங்களை, வரலாறுகளை நினைத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.ஆதலால்- உடல்பலம் மனோ தைரியம் குறைந்தவர்கள் , முடிவெடுக்க துணிச்சல் இல்லாதவர்கள், மனக்குழப்பம் உள்ளவர்கள், வாழ்க்கைத் துயரங்களில் தொடர்ந்து கஷ்டப்படுபவர்கள், சனி பகவானால் (அஷ்டம சனி) நடைப்பிணமாக ஆனவர்கள் இவர்களெல்லாம் - வாரம் இருமுறை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தால் நல்ல நிவாரணம் பெறலாம் என்பது என் நம்பிக்கை.


P.LINGESWARAN,
Assistant Professor / MBA

Tuesday, April 17, 2018

நமது மண்டையை அலசும் மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள்....மார்க்கெட்டிங் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை விமானத்திலுள்ள Black Box போன்று கருதுகிறார்கள். மூளையானது பலகோடி நியூரான் எனப்படும் நரம்பு செல்களால் ஆனது. மனிதன் ஒவ்வொரு முறை சிந்திக்கும் போதும், ஒரு புது சூழ்நிலை அனுபவத்தை எதிர்கொள்ளும்போதும் பல்லாயிரக்கணக்கான நியூரான்கள் இணைந்து ஒரு Circuit  ஐ உருவாக்குகின்றன.

மார்க்கெட்டிங் துறையின் தலையாய நோக்கம் - நமது மண்டையை கழுவி தங்கள் பொருளை நம் தலையில் கட்டுவது என்பது உங்களுக்கு தெரிந்ததே. எனினும், மனித மனம் ,ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் ஒரு புதினமாகவே இருக்கிறது. அவர்கள் மூளையின் வாயிலாக மனதை அறிந்துகொள்ள முற்படுகிறார்கள். காலப்போக்கில்  மனித சிந்தனையில், ரசனையில், தேவைகளில், விருப்பங்களில் கணிக்க முடியாத மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதால் - மார்க்கெட்டிங் நிபுணர்கள் மனிதர்கள் சிந்திக்கும்விதம் அதாவது குறிப்பாக எவ்வாறு மனிதர்கள்  முடிவெடுக்கிறார்கள், எந்த உணர்வால் தூண்டப்படுகிறார்கள் போன்றவற்றை கணிக்க நியூரான்களின் அமைப்பை Neural Network -களில் (Neural Marketing) உருவாக்குகிறார்கள். இந்த ஆராய்ச்சி தற்போது Machine Learning என்ற புது தலைப்பில் வந்து நிற்கிறது.

வணிக விற்பன்னர்கள் தற்போது Big Data Analytics எனும் ஆராய்ச்சியில் - உலகின் வறுமையை போக்க - மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் கொட்டி கிடைக்கும் தகவல் குப்பை மேடுகளில் இருந்து - மக்களின் சமீபத்திய ரசனைகள், போக்குகள், உரையாடல்கள், அடிக்கடி பிரயோகப்படுத்தும் வார்த்தைகள், பரிமாறிக்கொள்ளும் தகவல்கள் ஆகியவற்றை நிதானமாக ஆராய்ந்து ,நுணுக்கமாக எழுதப்பட்ட Algorithm கள் மூலமாக  ஆராய்ந்து - அதிலிருந்து பெறப்படும் முடிவுகளை தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். 1950-களில் துவங்கிய AI எனும் ராட்சத பிராணி இப்போது நாம் நினைப்பதை விட அதிபயங்கர வேகத்தில் முன்னேறி வருகிறது.


P.LINGESWARAN

Assistant Professor / MBA


Tuesday, February 13, 2018

உன் அழகில் ..
உன் அழகில் 
சொக்கிப் போய் 
ஒரு கவிதை 
எழுதினேன்....
எங்கோ 
எப்போதோ 
யாரோ 
எழுதிய வார்த்தைகள் 
என் கைகளில் 
வந்து விழுந்தன....!


-ப.லிங்கேஸ்வரன்.

Monday, December 4, 2017

காதலின் மாயாஜாலங்கள்....ஒரே பிம்பம்
பல இடங்களில்
தெரிகிறது....!
ஏழு சக்கரங்களும்
சீராக சுழலுகின்றன....
மனம் ஆழ்ந்த
மௌன நிலைக்கு
செல்கிறது....
தூங்காமல் தூங்கிய
சுகம் கிடைக்கிறது....
யோகத்தின்
இத்தனை  மாயாஜாலங்களும்
காதலில் மட்டுமே
கிடைக்கிறது....!


- P.Lingeswaran

Tuesday, August 8, 2017

SUCCESS RECIPE - BOOK REVIEW (ENGLISH / TAMIL)Abundance of Money, Economical freedom, Success in Life and Job, Peace of mind – these are some of the vital few what people really want. But, it is hard to know that most us actually don’t know how to get them. There are plenty of books available in market about self-development, success and specifically on the topics positive thinking and sub-conscious mind which proclaim that you can get whatever you want using the power of mind. They describe the nuances of working mechanism of sub-conscious mind and positive thinking. No doubt, positive thinking is the elementary and most important quality everyone must cultivate himself in order to attain success and peace of life both materially and spiritually.


But, according to Brian Tracy, Positive thinking ALONE IS NOT ENOUGH! Thinking optimistically is similar to a foundation of a huge building. Brain Tracy admits that it is a indispensable psychological quality, but same time, being tried alone, it would give only mixed results both success sometimes and failure other times – for a valid reason. Because it lacks a vital part – namely – ACTION.  He advocates that, besides positive thinking and application of power of mind, we need to set cleat-cut, well-defined GOALS, clarify OUR BELIEFS, PRIORITIES and we need to shape our GOALS from your deep subconscious wishes, a definite ACTION PLAN to achieve them.


Another important and wonderful, but mostly overlooked concept he has developed is SELF-CONCEPT and he also persuades us to develop ourselves and apply in Life. It consists of three components, 1. Self- image 2. Self-esteem 3. Self-ideal without which, particularly high self esteem, it is almost impossible to move towards our happiness and goals. Then, how to improve self-esteem? Brian Tracy beautifully elaborates there is a subtle connection among SUCCESS-HAPPINESS-EARNING MONEY-SELF RESPONSIBILTY-SELD ESTEEM-SELF CONFIDENCE.


Several books of self-development proclaim that by harnessing the power of subconscious mind, by utilizing the positive approach, you can obtain all prosperities in life – like a magic. It is true indeed, but further to be added. Brain Tracy, partially in contrast to this view, suggests that you can get only mixed or incomplete  results without ACTION PART / PERFORMANCE PART.  Put yourself  into action – this we can call as a Mantra of Tracy’s philosophy.  As a matter of fact, THE CORE AND HIDDEN PART OF ALL HIS TECHNIQUES ARE NOTHING BUT THE POWER OF SUBCONSCIOUS MIND.  We can visualize the positive thinking as FUEL and actions steps as VEHICLE to achieve our GOALS whatever it may be. So, once you begin to apply the Tracy’s techniques in your day-to-day life and work life, I am sure you will derive enormous satisfaction and happiness as you progress. 


Finally to say, Brian Tracy theories of success is result-oriented, action-oriented, performance-oriented WHICH IS 99% GUARANTEED , IF PRACTISED PROPERLY  - FOR GETTING SUCCESS, RICHES, HAPPINESS, SATISFACTION AND SO ON – within a span of time you expect.

To buy this ONLINE from AMAZON , Click the following button (Tamil Book - ):-

To buy this ONLINE from AMAZON , Click the following button (English Book - ):-
Note: This book has been translated into many languages and a best seller internationally.

Writing
P.Lingeswaran,
Assistant Professor (MBA)
Email: lingeswaran.balu@gmail.com
Wednesday, May 17, 2017

கார்டுகள் . .என் சட்டைப் பாக்கெட்
பணத்தால்
நிரம்பி வழிய
வேண்டுமென என்
மனம் விரும்புகிறது . .
ஆனால் பாக்கெட்டோ
ஆதார் கார்டு, பான் கார்டு,
ஸ்மார்ட் கார்டு, லைசென்ஸ்,
ID கார்டு , வாக்காளர் அட்டை
என
பலப்பல கார்டுகளால்
நிரம்பி வழிகிறது . . !


- ப.லிங்கேஸ்வரன்.

நண்பர்களே !

என்னிடம் 1. தந்த்ரா யோகம் ஓர் அறிமுகம் (PDF) 2. உளவியல் உண்மைகள் (PDF) 3. காயகற்ப யோகம் - ஓர் சுருக்கமான அறிமுகம் (PDF) என்...